காலையில் குழந்தைக்கு என்ன சாப்பிட கொடுக்கணும் தெரியுமா? டாக்டர் தரும் குறிப்புகள் இதோ

What should children eat after waking up in the morning: குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உணவுமுறையில் கவனம் செலுத்துவது அவசியமாகும். ஏனெனில் அவர்கள் வளர வளரவே போதுமான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு காலையில் முதலில் என்ன சாப்பிட கொடுக்கலாம் என்பதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
காலையில் குழந்தைக்கு என்ன சாப்பிட கொடுக்கணும் தெரியுமா? டாக்டர் தரும் குறிப்புகள் இதோ

What should kids eat first thing in the morning: இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, மோசமான உணவுமுறை காரணமாக குழந்தைகளின் உணவுப்பழக்கமும் நிறைய மாறிவிட்டது. ஆம். உண்மையில், பல குழந்தைகள் டிவி அல்லது மொபைல் பார்க்காமல் சாப்பிடுவதற்கு விரும்பவில்லை. இது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கலாம். திரைக்கும் முன் உணவை சாப்பிடுவதால், குழந்தைகளின் கவனம் உணவின் பக்கம் திருப்புவதில்லை. இதனால், அவர்களால் சரியான அளவு ஊட்டச்சத்து பெற முடியாமல் போகலாம். மேலும் அதிகமாக சாப்பிடுவது அல்லது குறைவாக சாப்பிடுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

பல பெற்றோர்கள் காலையில் எழுந்தவுடன் தங்கள் குழந்தைக்கு என்ன உணவளிப்பது என்பதில் கவலையுறுகின்றனர். உண்மையில் காலை உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இது அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்தைப் பெற உதவுகிறது. மேலும் இது அவர்கள் நாள் முழுவதும் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். எனவே சரியான காலை உணவு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். ஏனெனில், இது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.

இது குறித்து, குருகிராமில் உள்ள பராஸ் ஹெல்த், பொது குழந்தை மருத்துவத்தின் தலைவர் டாக்டர் மணீஷ் மன்னன் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Food Allergies In Children: குழந்தைக்கு உணவு அலர்ஜியைத் தரும் இந்த உணவுகளை மறந்தும் கொடுக்காதீங்க

காலையில் எழுந்தவுடன் குழந்தைகள் முதலில் என்ன சாப்பிட வேண்டும்?

டாக்டர் மணீஷ் மன்னன் அவர்களின் கூற்றுப்படி, குழந்தைகளுக்கு சரியான காலை உணவு அளிப்பது நாள் முழுவதும் ஆற்றலை உறுதி செய்கிறது. இதில் குழந்தைகள் காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிட வேண்டும், எந்த வகையான காலை உணவு அவர்களை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும் என்பது குறித்து விவரித்துள்ளார்.

1.சமச்சீர் காலை உணவு

குழந்தைகள் காலையில் எழுந்த பிறகு, அவர்களின் மூளையும் உடலும் ஆற்றலுக்காக ஏங்குகிறது. இந்நிலையில், அவர்களுக்கு சரியான வகையான ஊட்டச்சத்து கிடைக்கச் செய்வது, அவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வைக்கிறது. காலை உணவு குழந்தைகளின் உடல் மற்றும் மூளைக்கு மிகவும் நன்மை பயக்கும். இது குழந்தைகள் அதிக கவனம் செலுத்தவும் அவர்களின் மூளை சிறப்பாக செயல்படவும் வழிவகுக்கிறது. சரியான வகையான காலை உணவின் மூலம் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை மேம்படுத்தலாம்.

2.புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் சமநிலை

குழந்தைகளுக்கு காலை உணவானது ஊட்டச்சத்துக்களின் கலவையாக இருக்க வேண்டும். அதாவது சமநிலையான புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் புரதங்கள் தசைகள் மற்றும் திசுக்களை உருவாக்க உதவுகிறது. அதே சமயம், ஆரோக்கியமான கொழுப்புகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றலை வெளியிடவும், நீண்ட கால ஆற்றலை வழங்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Children Healthy Foods: குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகள்!

காலை உணவுக்கான விருப்பங்கள்: குழந்தைகள் காலையில் முதலில் என்ன சாப்பிடலாம்?

தயிர் மற்றும் பழங்கள்

தயிரில் செரிமானத்திற்கு உதவும் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளது. மேலும், பழங்களில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது எடையிழப்பை ஆதரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் உதவுகின்றன.

பால்

குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுக்கக்கூடிய பால் சிறந்த புரதம் மற்றும் கால்சியம் மூலமாகும். இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு நன்மை பயக்கும்.

முட்டைகள்

முட்டையில் அதிக புரதம் உள்ளது. இது தசை வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

3. புதிய பழங்கள் மற்றும் ஸ்மூத்திகள்

காலை உணவில் புதிய பழங்களைச் சேர்ப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பொதுவாக பழங்களில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த புத்துணர்ச்சியூட்டும் ஸ்மூத்தி குழந்தைகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதற்கு வாழைப்பழம், ஸ்ட்ராபெரி, ஆப்பிள் அல்லது மாம்பழம் போன்ற புதிய பழங்களுடன் சில விதைகளை (சியா அல்லது ஆளி விதை போன்றவை) சேர்த்து கொடுப்பது குழந்தைகளுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்தை வழங்குகிறது.

உணவுடன் சேர்த்து, குழந்தைகளுக்கு போதுமான தண்ணீர் கொடுப்பதும் அவசியமாகும். குழந்தைகளின் உடல் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சும் வகையில், அவர்களின் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

குழந்தைகளுக்கு காலை உணவில் கொடுக்கக் கூடாதவை?

குழந்தைகளுக்கு காலை உணவைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர்களுக்குக் கொடுக்கக் கூடாதவற்றையும் கவனத்தில் செலுத்த வேண்டும்.

அதன் படி, அதிகப்படியான சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட தானியங்கள் மற்றும் வறுத்த உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

குறிப்பாக, காலை உணவில் சர்க்கரை நிறைந்த தானியங்கள் அல்லது பாக்கெட் பழச்சாறுகளைச் சேர்ப்பது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம். இந்த உணவுகள் சர்க்கரையை விரைவாக அதிகரித்து, பின்னர் அவர்களுக்கு சோர்வு மற்றும் எரிச்சலைத் தரலாம். இது தவிர, அவை குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

முடிவு

குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு காலை உணவு மிகவும் அவசியமாகும். குழந்தைகள் காலையில் எழுந்தவுடன் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த காலை உணவைத் தர வேண்டும். இதற்கு பழங்கள் மற்றும் ஸ்மூத்திகள் போன்ற புதிய மற்றும் சத்தான உணவைத் தேர்ந்தெடுக்கலாம். இது குழந்தைகளை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: பெற்றோர்கள் கவனத்திற்கு... இந்த உணவுகளை குழந்தைகளுக்கு மறந்தும் கொடுக்காதீர்கள்..

Image Source: Freepik

Read Next

பெற்றோர்கள் சொல்லும் 5 விஷயங்கள் குழந்தைகளின் மனதை மிகவும் புண்படுத்தும்

Disclaimer