Healthy Breakfast: தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக உடலில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகிறது. சமச்சீரான வகையில் ஆரோக்கியமான உணவு என்பது ஒருவரின் வாழ்விற்கு மிக முக்கியம். அப்படி இந்திய உணவு வகைகளில் ஆரோக்கியமான சிறந்த காலை உணவு வகைகளில் சிலவற்றை பார்க்கலாம்.
ஆரோக்கியமான காலை உணவு
நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் பட்டியலை எடுத்தோம் என்றால் அதில் இந்திய உணவுப் பொருட்கள் எப்போதும் முன்னிலையில் இருக்கும். இந்தியாவில், பழங்காலத்திலிருந்தே மக்கள் தங்கள் உடல்நலம் மற்றும் உடலைப் பற்றி விழிப்புடன் இருந்தனர், இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றிய பல தகவல்களையும் நீங்கள் பெறலாம்.
அதிகம் படித்தவை: Cauliflower for weight loss: மளமளனு எடை குறையணுமா? இந்த ஒரு காய்கறியை சாப்பிடுங்க போதும்
இன்றைய காலக்கட்டத்தில், மேற்கத்திய உணவுகளை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் பல நோய்கள் ஏற்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில், சமநிலையற்ற மற்றும் தவறான உணவு உட்கொள்வதால் மாரடைப்பு, இரத்த அழுத்த பிரச்சனை, சர்க்கரை நோய் போன்ற நோய்கள் சர்வசாதாரணமாகிவிட்டன.
நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும், நல்ல ஊட்டச்சத்துக்காகவும், ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். நீங்கள் தினமும் உட்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான காலை உணவு வகைகளை பார்க்கலாம்.
இட்லி
எப்போதும் வேக வைத்த உணவுகளில் பல்வேறு பலன்கள் இருக்கிறது. பிரபலமான தென்னிந்திய உணவான இட்லி காலை உணவுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. உங்கள் நாளை நன்றாகத் தொடங்கவும், உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தினமும் இட்லி சாப்பிடலாம். தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் நீங்கள் சாப்பிடக்கூடிய இலகுவான மற்றும் மிகவும் சுவையான உணவாகும். உங்கள் இதயத்திற்கு நல்ல தொடக்கத்தைப் பெற, உங்கள் காலை உணவில் இட்லியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
போஹா
சாப்பிடுவதற்கு மிகவும் இலகுவானது, சுவை நிறைந்தது மற்றும் செய்வதற்கு மிகவும் எளிதானது, போஹா ஒரு சிறந்த இந்திய காலை உணவாக கருதப்படுகிறது. பலரும் இந்த வார்த்தையை கேள்விபட்டிருக்கமாட்டார்கள், போஹா என்றால் வேறொன்றுமில்லை அவல் மூலம் உப்புமா போல் செய்யக் கூடிய ஒரு உணவாகும்.
கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை சேர்க்க பழங்கள் மற்றும் சில காய்கறிகளைப் பயன்படுத்தலாம். போஹா இந்தியாவில் பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது மற்றும் அதை ஆரோக்கியமாக மாற்ற, நீங்கள் குறைந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
தோசை
தோசை ஒரு நல்ல காலை உணவாக அறியப்படுகிறது. ஆனால் இது இந்தியா முழுவதும் பரவலாக உட்கொள்ளப்படுகிறது. பருப்பு மற்றும் அரிசியின் மூலம் தயாரிக்கப்படும் தோசை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் மிகவும் சுவையாகவும் இருக்கும்.
தோசை செய்ய பல வகையான ரெசிபிகளை முயற்சி செய்யலாம். இந்தியாவில் சுமார் 22 வகைகளான தோசைகள் செய்யப்படுகிறது. இது அதிகமாகவும் இருக்கலாம். ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவாக இதை உட்கொள்ளலாம்.
உப்புமா
ஆரோக்கியமான உணவு வகைகளில் உப்புமாவும் இருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் காலை உணவாக உண்ணப்படுகிறது. உப்புமா என்ற பெயரை கேட்டாலே பலரும் வெறுப்பு அடைவார்கள், மக்கள் மனதில் அப்படி ஒரு மனநிலை புகுத்தப்பட்டுள்ளது. இதை அவ்வப்போது சாப்பிடலாம், இது சிறந்த காலை உணவாகும்.
வறுத்த ரவை மூலம் தயாரிக்கப்படும் உப்புமாவில் நார்ச்சத்து உட்பட பல சத்துக்கள் இருக்கிறது. ஆரோக்கியமாக இருக்க, அதில் காய்கறிகள் மற்றும் முந்திரி பருப்புகளைப் பயன்படுத்தலாம். உப்புமாவை தினமும் காலை உணவாக உட்கொள்ளலாம்.
ஆப்பம்
தேங்காய் பாலுடன் ஆப்பம் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கும். இவை இரண்டும் உடலுக்கு ஆரோக்கியமானது. தாராளமாக நீங்கள் காலை உணவாக ஆப்பம் மற்றும் தேங்காய் பாலை உட்கொள்ளலாம்.
இடியாப்பம்
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பகுதியில் இடியாப்பம் ஆகச்சிறந்த உணவாகும். இதுவும் வேக வைக்கும் உணவு வகைகளில் ஒன்றாகும். பொதுவாக வேக வைத்த உணவு என்றால் அது உடலுக்கு ஆரோக்கியம்தான். ஆனால் இடியாப்பம் சாப்பிடும் போது அதிக எண்ணெய்யும் கூடாது, அதிக சர்க்கரையும் கூடாது.
இதுபோன்ற பல காலை உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால் இதை எப்படி உட்கொள்கிறோம் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று, எதையும் அளவாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மேலும் நல்லது.
image source: freepik