Healthy Fats Foods: உடல் எடையை குறைக்க மக்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கிறார்கள். ஆனால் உடல் இயக்கத்திற்கு கொழுப்பு என்பதும் முக்கியம் என உங்களுக்கு தெரியமா? உடலில் இரண்டு வகையான கொழுப்புகள் இருக்கிறது. ஒன்று நல்ல கொழுப்பு மற்றொன்று எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பாகும். உடல் இயக்கத்திற்கு நல்ல கொழுப்புகள் என்பது மிக முக்கியம்.
உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாடு என்று வரும்போது, மக்கள் முதலில் தங்கள் தட்டில் இருந்து கொழுப்பு உணவுகளை குறைக்கத் தொடங்குகிறார்கள். இதனால் உடலில் நல்ல கொழுப்பும் குறைய ஆரம்பிக்கிறது. அசைவம் சாப்பிடுபவர்கள் மீன் மற்றும் இறைச்சி மூலம் நல்ல கொழுப்பைப் பெறலாம். சைவ உணவு உண்பவர்கள் என்று வரும்போது, அவர்களுக்கு விருப்பங்கள் குறைவுதான்.
அதிகம் படித்தவை: Side Effects Of Badam: நீங்க தினமும் பாதாம் சாப்பிடுபவரா? இது எவ்வளவு ஆபத்து தெரியுமா?
உடலுக்கு கொழுப்பு ஏன் முக்கியம்?
நமது உடலுக்கு புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுவது போல் கொழுப்பும் தேவைப்படுகிறது. இது தொடர்பான சில முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வோம். உடலில் கொழுப்பு என்பது உடலில் ஆற்றலை ஏற்படுத்த உதவுகிறது.
கொழுப்பு என்பது வைட்டமின்கள் குடலில் இருந்து உறிஞ்சப்படுவதை எளிதாக்குகிறது. அதேபோல் ஆரோக்கியமான செல்கள் கொழுப்பிலிருந்து உருவாகின்றன. மேலும் உடல் வெப்பநிலை கொழுப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பாக கொழுப்பு சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும். இவை அனைத்துக்கும் நல்ல கொழுப்பு என்பது மிக முக்கியம். இப்படி நல்ல கொழுப்பை அதிகரிக்க சில உணவுகள் என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முக்கிய கட்டுரைகள்
நல்ல கொழுப்பை அதிகரிக்கும் உணவுகள்
சோயா பால்
பாலிஅன்சாச்சுரேட்டட் சோயா பால் கொழுப்பின் நல்ல மூலமாகும். நல்ல கொழுப்பை அதிகரிக்க இதை நீங்கள் தாராளமாக குடிக்கலாம்.
காய்கறி எண்ணெய்
ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் அல்லது கனோலா எண்ணெய் நல்ல கொழுப்பு நிறைந்தவை. இந்த எண்ணெய்களை சமையலில் பயன்படுத்தலாம், நீங்கள் நெய் சாப்பிட விரும்பினால், வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யைப் பயன்படுத்தலாம்.
சோயாபீன்
ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சோயாபீனை உங்கள் உணவு முறையில் தாராளமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
நட்ஸ்கள்
பாதாம், வால்நட்ஸ் மற்றும் முந்திரி ஆகியவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பொதுவாக மீன்களில் காணப்படுகின்றன. ஆனால் இந்த நட்ஸ் வகைகள் உட்கொள்வது சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த தேர்வாகும்.
சோளம் மற்றும் ஆலிவ்
சோளம் நல்ல கொழுப்புகள் நிறைந்தவை, அதேபோல் இது சுவையாகவும் இருக்கும். ஆலிவ் மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் அவை மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளைக் கொண்டுள்ளன.
பச்சை காய்கறிகள்
காய்கறிகள் பொதுவாக கொழுப்பு இல்லாதவை. ஆனால் சமைத்து வறுத்த பிறகு அவை கொழுப்பு நிறைந்ததாக மாறும். இது ஆரோக்கியத்திற்கு கேடு. நீங்கள் காய்கறிகளை வேகவைத்து சாப்பிடலாம்.
உடல் கொழுப்புகள் குறித்து கவனிக்க வேண்டிய விஷயம்
உங்கள் உடல்நிலையில் எவ்வளவு கவனமாக இருந்தாலும், சில சமயங்களில் நாம் உட்கொள்ளும் கொழுப்பின் அளவை பற்றிய தகவல் நமக்கு இருப்பதில்லை. உடலில் கொழுப்பின் அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக்கூடாது. உடலின் கொழுப்பு அளவு என்பது சமமாக இருக்க வேண்டும். இதைச் செய்ய, ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்வது நல்லது.
இதையும் படிங்க: Hair loss prevention tips: தூங்கும் போது முடி உதிர்வைக் கட்டுப்படுத்த இதெல்லாம் செய்யுங்க
ஆராய்ச்சியின் படி, ஒரு கிராம் கொழுப்பு குறைந்தது 8 கிராம் கலோரிகளை வழங்குகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் 40 முதல் 50 கிராமுக்கு மேல் கொழுப்பை உட்கொள்ள வேண்டாம். ஆனால் எந்தவொரு புதிய உணவுமுறையைத் தொடங்குவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவர் ஆலோசனையை பெறுவது நல்லது.
image source: freepik