How to prevent hair fall while sleeping: இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். இதன் காரணமாக முடி உதிர்தல், முடி வறட்சி, நுனிமுடி பிளவு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சந்திப்பர். அதிலும் குறிப்பாக முடி உதிர்தல் ஆனது ஆண்கள், பெண்கள் என பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகி மாறிவிட்டது. இது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம்.
இது உணவு காரணங்கள், மரபணுக்கள் அல்லது ஹார்மோன் சமநிலையின்மை காரணங்களால் ஏற்படலாம். இந்த காரணங்களில் ஒன்றாக தூங்கும் போதும் முடி உதிர்வு உண்டாவது அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் நாம் தூங்கும் போதும் முடி உதிர்வு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளது. இதில் முடி உதிர்தலுக்கு தலையணை துணி அல்லது மோசமான தூக்க சுழற்சி போன்றவை அடங்கும். இவ்வாறு தூங்கும் போது முடி உதிர்வதைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin E for Hair: வைட்டமின் ஈ குறைபாடு முடி உதிர்வை ஏற்படுத்துமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
தூங்கும் போது முடி உதிர்வு ஏற்படுவதற்கான காரணங்கள்
ஒரு நாளில் சில குறிப்பிட்ட அளவிலான முடி உதிர்வு ஏற்படுவது சாதாரணமான முடி உதிர்வு ஆகும். எனினும், அதை விட அதிகளவு முடி உதிர்வு ஏற்பட்டால் கவனமாக இருப்பது அவசியமாகும்.
முக்கிய கட்டுரைகள்
போதுமான ஊட்டச்சத்து இல்லாமை
ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உணவில் போதிய ஊட்டச்சத்துக்களை சேர்த்துக் கொள்வது அவசியமாகும். தலைமுடிக்கு புரதம், இரும்பு, பயோட்டின் மற்றும் துத்தநாகம் போன்றவை தேவைப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை காரணமாக முடி உதிர்தல் ஏற்படலாம்.
தூக்கமின்மை
தூக்கக் கோளாறுகளுடன் முடி உதிர்வு பிரச்சனைகளும் தொடர்புடையதாகும். தூக்கமின்மை, மோசமான தூக்க சுழற்சி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இதனால் முடி உதிர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
இறுக்கமான அலங்காரம்
தூங்குவதற்கு முன்னதாக முடியை இறுக்கமாக கட்டுவது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. முடியை இறுக்கமாக பின்னுவது, போனிடெயில் போடுவது போன்றவை முடி உதிர்வை உண்டாக்கலாம். ஏனெனில், இது உச்சந்தலையில் மோசமான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தலாம்.
தலையணை உறை
தூங்கும் போது முடி இழைகளுக்கும் தலையணை உறைக்கும் இடையே உராய்வு ஏற்படலாம். இது முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது. ஏனெனில், மோசமான தலையணை உறை காரணமாக முடி இழைகள் பலவீனமாகிறது. பருத்தி போன்ற சில துணிகள், முடியின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, உலர வைத்து முடி உதிர்வை ஏற்படுத்துகிறது.
ஹார்மோன் மாற்றங்கள்
ஈஸ்ட்ரோஜன் அல்லது மன அழுத்த ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக முடி உதிர்தல் ஏற்படலாம். ஏனெனில், கார்டிசோல் ஆனது மயிர்க்கால்களின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: குளிக்கும்போது உங்கள் தலைமுடி உதிர்கிறதா?… அதைத் தடுக்க இந்த 4 விஷயங்கள் போதும்!
தூங்கும் போது முடி உதிர்வைத் தடுக்கும் வழிகள்
உறங்கும் போது சில காரணங்களால் ஏற்படும் முடி உதிர்வைத் தடுக்க சில வழிகளைக் கடைபிடிக்கலாம்.
ஈரமான முடியுடன் உறங்குவதைத் தவிர்ப்பது
தூங்கும் போது முடி உதிர்வைக் குறைக்க, தலைமுடி முற்றிலும் வறண்டு போவதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஈரமான முடி உடைவதற்கான வாய்ப்பு அதிகமாகும். இவ்வாறு முடி ஈரமாக இருக்கும் பட்சத்தில் பலவீனமான நிலை ஏற்படுகிறது.
ஈரப்பதமூட்டி பயன்பாடு
முடி மிகவும் வறண்டு, உரோமமாக இருக்கும் போது, அது உடைவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே முடி வறண்டு அல்லது உடையக்கூடியதாக மாறுவதைத் தடுக்க, அறையின் காற்றை நன்கு ஈரப்பதமாக்குவதற்கு ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தலாம்.
உச்சந்தலையில் மசாஜ் செய்வது
இரவில் உறங்கும் முன்னதாக உச்சந்தலையில் மசாஜ் செய்வது அவசியமாகும். இவ்வாறு வழக்கமான உச்சந்தலை மசாஜ் செய்வதன் மூலம் முடி அளவை அதிகரிக்கலாம். இது மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும், இவை முடி உடைவதைத் தடுக்கவும் உதவுகிறது.
பருத்திக்குப் பதில் பட்டு
முடி இழைகளுக்கும் பருத்திக்கும் இடையே உராய்வு ஏற்படுவதால், அதற்கு மாற்றாக பட்டு அல்லது சாடினினால் செய்யப்பட்ட தலையணை உறைகளைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் முடி உதிர்வைத் தடுக்கலாம்.
இவ்வாறு ஆரோக்கியமான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் தூங்கும் போது ஏற்படும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த தண்ணீரால் முடி அதிகம் கொட்டுதா? உதிர்ந்த முடியை திரும்பப் பெற இத செய்யுங்க
Image Source: Freepik