Sat Sep 12, 2026 | 12:59 AM IST

Expert

என்ன செஞ்சாலும் முடி உதிர்வு நிற்கலையா? முடி வேரை ஸ்ட்ராங்காக்கும் இந்த 10 உணவுகள் போதும்..

அன்றாட வாழ்வில் முடி உதிர்வு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதில் உணவுமுறைகளும் அடங்குகின்றன. இதில் முடி உதிர்வைத் தடுக்கவும், முடி வேரை பலமாக்கவும் உதவும் உணவுகள் குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்குகிறது. மோசமான உணவுமுறை மற்றும் போதிய பராமரிப்பு இல்லாமையால் தலைமுடி பிரச்சனைகளாக முடி உதிர்வு, முடி உடைதல், வறண்ட மற்றும் உலர்ந்த முடி, நுனிமுடி பிளவு, முன்கூட்டியே நரைமுடி போன்ற பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். இதில் குறிப்பாக, முடி உதிர்வு இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது.

முடி உதிர்வு விரைவாக அதிகரிக்க சில காரணங்கள் இருக்கலாம். ஆரோக்கியமற்ற உணவு முறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் முடி பராமரிப்பு வழக்கமின்மை ஆகியவை முடி உதிர்தலுக்குக் காரணங்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, போதிய ஊட்டச்சத்து இல்லாமை, பராமரிப்பு இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு அடிக்கடி ஏற்படலாம். இதற்கு பலரும் வெளிப்புற பூச்சாக பல்வேறு முடி பராமரிப்பு முறைகளைக் கையாள்கின்றனர். எனினும், முடி உதிர்வைத் தடுக்க உடலின் உட்புற பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்.

அதன் படி, முடி உதிர்வைத் தடுக்கவும், முடி வேரை பலமாக்கவும் உதவும் உணவுகள் குறித்து மருத்துவ உணவியல் நிபுணரும், PCOD நிபுணருமான காஜல் அகர்வால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: அழகான முடிக்கு எக்ஸ்பென்சிவ் ட்ரீட்மென்ட் தேவையில்லை..  இந்த உணவுகள் மட்டும் போதும்.! டாக்டர் பால் பரிந்துரை..

முடி உதிர்வைத் தடுக்க உதவும் உணவுகள்

ஆம்லா (இந்திய நெல்லிக்காய்)

ஆம்லாவில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை நிறைந்ததுள்ளன. இவை முடி வேர்களை வலுப்படுத்த உதவும் கொலாஜனை அதிகரிக்கிறது. மேலும் இது முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது. மேலும் இந்த வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருப்பதால், இது முடி வேர்களை பலப்படுத்துகிறது. உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது.

வெந்தய விதைகள் (வெந்தயம்)

வெந்தய விதைகளில் புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இதில் நிகோடினிக் அமிலம் உள்ளது. இவை முடி நுண்குழாய்களை பலப்படுத்துகிறது. கூடுதலாக, இது பொடுகு மற்றும் உச்சந்தலை வறட்சி போன்ற குறைக்கிறது. இதை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல முடி வளர்ச்சியைப் பெறலாம்.

எள் விதைகள்

முடி உதிர்வைத் தடுப்பதில் எள் விதைகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் கால்சியம், துத்தநாகம் மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்ததாகும். இவை உச்சந்தலையை ஆழமாக வளர்க்க உதவுகிறது. மேலும் இது அடர்த்தியான, பளபளப்பான முடியை ஊக்குவிக்கிறது.

முட்டைகள்

முட்டைகள் புரதம், பயோட்டின், வைட்டமின் டி, துத்தநாகம் நிறைந்தவையாகும். இவை முடியின் வேர்களை நன்கு பலப்படுத்த உதவுகிறது. மேலும் இது முடி உடைதல் மற்றும் மெலிதலைக் குறைக்க வழிவகுக்கிறது.

பசலைக் கீரை (பாலக்)

பசலைக் கீரையில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் நிறைந்ததுள்ளது. இவை இரும்புச்சத்து குறைபாடுள்ள முடி உதிர்தலைத் தடுக்கவும், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

கிரேக்க தயிர் / தயிர்

இதில் புரதம், வைட்டமின் பி5 (பாந்தோதெனிக் அமிலம்), புரோபயாடிக்குகள் போன்றவை அதிகம் உள்ளன. இது முடி நுண்குழாய்களை வளர்க்க உதவுகிறது. மேலும், இவை தலைமுடி வறட்சி மற்றும் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: டபுள் மடங்கு வேகத்தில் முடி வேகமாக வளரணுமா? இந்த உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

கொட்டைகள் (பாதாம் மற்றும் வால்நட்ஸ்)

நட்ஸ் வகைகளில் குறிப்பாக, பாதாம் மற்றும் வால்நட்ஸ் போன்றவற்றில் கால்சியம், துத்தநாகம் மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இவை உச்சந்தலையை ஆழமாக வளர்க்கிறது. மேலும் இது அடர்த்தியான, பளபளப்பான, வலுவான முடியை ஊக்குவிக்கிறது.

View this post on Instagram

A post shared by Dietician Kajal Aggarwal ✨Clinical Dietician ✨PCOD Expert. (@dietician_kajalaggarwal)

விதைகள் (ஆளி விதை, சியா, சூரியகாந்தி விதைகள்)

விதை வகைகளில் ஆளி விதை, சியா விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்ற விதைகள் ஒமேகா-3, ஆக்ஸிஜனேற்றிகள், புரதம் நிறைந்ததாகும். இது முடி தண்டுகளை பலப்படுத்துகிறது. மேலும், உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

இதில் பீட்டா கரோட்டின் (வைட்டமின் ஏ), நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை அதிகம் உள்ளன. எனவே, இவை உலர்ந்த, உடையக்கூடிய முடியைத் தடுக்க உதவுகிறது. இது தவிர, உச்சந்தலையில் ஈரப்பதத்திற்கான சரும உற்பத்தியை ஆதரிக்கிறது.

பருப்பு வகைகள் (மசூர், மூங்-சனா தால்)

மசூர் பருப்பு, பச்சைப்பயறு, சுண்டல் போன்றவற்றில் புரதம், இரும்புச்சத்து, ஃபோலேட், துத்தநாகம், பயோட்டின் நிரம்பியுள்ளது. இவை முடி உதிர்தலைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. மேலும், தலைமுடியின் வேர் முதல் நுனி வரை முடியை பலப்படுத்துகிறது.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: முடி உதிர்வை தடுக்கும் உணவுகள்.!

Image Source: Freepik

Read Next

முடி உதிர்வை தடுக்கும் உணவுகள்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 21, 2025 14:19 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content