Foods to eat to stop postpartum hair fall: கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்திற்குப் பின்னரும் பல்வேறு உடல் மாற்றங்களைச் சந்திப்பர். அதிலும், பெண் கர்ப்பத்திற்குப் பிறகு தாயாகும்போது, உடலில் பல வகையான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்களின் விளைவுகளின் காரணமாகவே திடீர் முடி உதிர்தல் பிரச்சனை உண்டாகிறது. இது பிரசவத்திற்குப் பிறகு முடி உதிர்தல் என்றழைக்கப்படுகிறது. இந்த நிலை பிரசவத்திற்குப் பின் 2 முதல் 5 மாதங்களுக்குள் அதிகமாகத் தெரிகிறது. இதனால், பல பெண்கள் பதட்டமடைகிறார்கள்.
ஆனால், இது ஒரு சாதாரண மற்றும் தற்காலிக செயல்முறையாக நிபுணர்கள் கூறுகின்றனர். பிரசவம் நடந்த பிறகு, உடலில் ஹார்மோன் அளவு குறைகிறது மற்றும் கர்ப்ப காலத்தில் உதிராத முடி ஒன்றாக உதிரத் தொடங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் சரியான உணவு மிகவும் முக்கியமானதாகும். இவை உடல் வேகமாக மீண்டு முடிக்கு ஊட்டச்சத்து கிடைக்க வழிவகுக்கிறது. இதில், பிரசவத்திற்குப் பிறகு முடி உதிர்வதைத் தடுக்க எந்த வகையான உணவு முறை உதவும் என்பது குறித்து லக்னோவின் விகாஸ் நகரில் அமைந்துள்ள நியூட்ரிவைஸ் கிளினிக்கின் ஊட்டச்சத்து நிபுணர் நேஹா சின்ஹா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: அதிகப்படியான வியர்வையால் முடி டேமேஜ் ஆகும்.. எப்படினு தெரிஞ்சிக்கோங்க
பிரசவத்திற்கு பின் முடி உதிர்வதை தடுக்க உதவும் உணவுகள்
முடி வேர்களை பலப்படுத்த துத்தநாகம் நிறைந்த உணவுகள்
துத்தநாகக் குறைபாட்டின் காரணமாக முடி உதிர்வு ஏற்படலாம். எனவே அன்றாட உணவில் துத்தநாகம் நிறைந்த பூசணி விதைகள், வேர்க்கடலை மற்றும் கொண்டைக்கடலை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இவை முடி திசுக்களைச் சரி செய்யவும், உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
முக்கிய கட்டுரைகள்
மல்டிவைட்டமின்கள் - மல்டிவைட்டமின் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்வது
பெண் தாயாகும் போது அவர்களுக்கு அதிகமாக முடி உதிர்வு ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அவர்களின் பரிந்துரையின் படி வழங்கப்படும் மல்டிவைட்டமின் சப்ளிமெண்ட் பிரசவத்திற்குப் பிந்தைய பெண்களுக்காக குறிப்பாக தயாரிக்கப்படும் பாலூட்டும் சப்ளிமெண்ட்கள் மிகவும் நன்மை பயக்கும்.
புரதம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது
முடியின் முக்கிய கூறாக விளங்குவது கெரட்டின் என்ற புரதமாகும். புரதக் குறைபாட்டின் காரணமாக, இவை முடி வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும். எனவே பிரசவத்திற்குப் பிறகு, உடலுக்கு கூடுதல் புரதம் தேவைப்படுகிறது. அதன் படி, புரதங்கள் நிறைந்த பருப்பு வகைகள், முட்டை, பால், சீஸ், டோஃபு மற்றும் பாதாம் மற்றும் வால்நட்ஸ் போன்ற நட்ஸ் வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பயோட்டின் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது
முடி வளர்ச்சிக்கு வைட்டமின் பி7 போன்ற பயோட்டின் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது அவசியமாகும். இவை முடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. அதன் படி, பயோட்டின் நிறைந்த முட்டையின் மஞ்சள் கரு, சோயா, வாழைப்பழம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சூரியகாந்தி விதைகள் மற்றும் காளான்கள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Postpartum Hair Loss: குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொத்து, கொத்தாய் முடி கொட்டுவது ஏன்? - தடுக்கும் வழிகள்!
ஒமேகா-3 மற்றும் பயோட்டின் நிறைந்த வால்நட்ஸ் சாப்பிடுவது
வால்நட்ஸ் சூப்பர்ஃபுட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பயோட்டின், வைட்டமின்-இ மற்றும் துத்தநாகம் போன்றவை உள்ளன. இவை முடி வேர்களை வலுப்படுத்தி உச்சந்தலையை வளர்க்கிறது. எனவே தினமும் 2-3 வால்நட்ஸ் சாப்பிடுவது முடி உதிர்வைப் பெருமளவில் குறைக்க உதவுகிறது.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுவது
கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது உடலில் இரத்தம் இல்லாதது இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். இது இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது. இந்த நிலை முடி வேர்களை பலவீனப்படுத்தக்கூடும். எனவே இரும்புச்சத்துக்கள் நிறைந்த கீரை, பீட்ரூட், மாதுளை, வெல்லம், முழு தானியங்கள் மற்றும் பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
அத்தியாவசிய புரோபயாடிக்குகள் நிறைந்த தயிர் சாப்பிடுவது
தயிர் செரிமானத்திற்கு மட்டுமல்லாமல், அதில் காணப்படும் வைட்டமின் பி12 மற்றும் புரோபயாடிக்குகள் போன்றவை முடி வேர்களை வலுப்படுத்துகிறது. மேலும், தயிரில் காணப்படும் புரதம் மற்றும் கால்சியம் போன்றவை முடியை வளர்ச்சியடையச் செய்ய உதவுகிறது. இது உச்சந்தலையை குளிர்வித்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. பிரசவத்திற்குப் பிந்தைய உணவுமுறையாக, ஒவ்வொரு நாளும் உணவில் ஒரு கிண்ணம் புதிய தயிரை சேர்த்துக் கொள்ளலாம்.
பிரசவத்திற்குப் பிறகு முடி உதிர்தல் ஏற்படுவது ஒரு ஒரு பொதுவான நிலையாகும். இதை சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறை மூலம் நிர்வகிக்கலாம். நீரேற்றம், ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் மற்றும் மருத்துவரின் ஆலோசனையுடன் முடி ஆரோக்கியத்தை படிப்படியாக மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Hairfall After Delivery: பிரசவத்திற்கு பின் முடி கொட்டுகிறதா.? இதை சமாளிக்க சூப்பர் டிப்ஸ் இங்கே..
Image Source: Freepik