Hair damage due to sweat: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக மக்கள் பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி தொடர்பான பிரச்சனைகளும் அடங்கும். அதாவது முடி உதிர்வு, முடி வறட்சி, முடி உடைதல் மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும். இவ்வாறு முடி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம். ஆனால், இதில் வியர்வையும் ஒரு காரணமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், வியர்வையானது தலை முதல் கால் வரை நம்மை நனைய வைக்கிறது.
பொதுவாக, வியர்வை உடலை நச்சு நீக்கி இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தலையில் வெளியேறும் அதிகப்படியான வியர்வை முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும். இவை தலைமுடி மற்றும் உச்சந்தலை ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பது தெரியுமா? அடிப்படையில் நமது வியர்வையில் அதிகளவிலான உப்பு உள்ளடக்கம் காணப்படும். இவை நமது தலைமுடி மற்றும் உச்சந்தலைக்கு நல்லதல்ல. அதிக வியர்வையால் தலைமுடிக்கு உப்பு உள்ளடக்கம் அதிகரித்து, வறட்சி மற்றும் பெரிய முடி உதிர்தலுக்கு வழிவகுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ராக்கெட் வேகத்தில் கருகருன்னு முடி வளர... வெறும் 10 ரூபாய்க்கு இந்த ஒரு விதையை வாங்கி பயன்படுத்தினால் போதும்...!
வியர்வையால் தலைமுடி மற்றும் உச்சந்தலைக்கு ஏற்படும் பாதிப்புகள்
ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்ட படி, வியர்வையின் காரணமாக தலைமுடி, உச்சந்தலையின் ஆரோக்கியம் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுகிறது.
முக்கிய கட்டுரைகள்
தலைமுடியை மந்தமாகவும், சுருண்டதாகவும் மாறுகிறது
அதிகளவு வியர்வை வெளியேற்றத்தின் காரணமாக, அதற்கு சிலர் அதிக ஷாம்பூவைப் பயன்படுத்துவர். இவை தலைமுடியை உலர வைக்கக்கூடும். மேலும், இது முடியை சுருண்டதாக மாற்றுவதுடன், உயிரற்ற முடிக்கு வழிவகுக்கிறது. எனவே, அடிக்கடி முடியைக் கழுவுவது வியர்வையுடன் கூடிய முடிக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்காது.
வியர்வை காரணமாக உச்சந்தலையில் முன்பக்க முடி உதிர்தல் ஏற்படுவது
தலையின் முன்பக்க பகுதியில் அதிகளவு உச்சந்தலை வெளிப்படுவதை நாம் பலரும் பார்த்திருப்போம். ஆனால், இது வியர்வையின் காரணமாக எழலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆய்வு ஒன்றில், அதிகப்படியான வியர்வை வெளியேற்றத்தின் காரணமாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஃப்ரண்டல் ஃபைப்ரோசிங் அலோபீசியா கோளாறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
அதாவது இது ஒரு வகையான முடி உதிர்தல் நோயாகும். இது நெற்றிப்பகுதியில் முடி உதிர்வை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் உச்சந்தலையின் மற்ற பகுதிகளிலும் முடி உதிர்தல் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். எனவே, வியர்வை காரணமாக உச்சந்தலை முன்பக்க முடி உதிர்வு ஏற்படுகிறது.
தலைமுடி துர்நாற்றம் வீசுவது
வியர்வை வெளியேற்றத்தினால் உடலில் துர்நாற்றம் வீசுவது அனைவருக்கும் தெரியும். அதே சமயம், தலைமுடியில் இருந்து வரும் வியர்வை நாற்றம் தலைமுடியை பாதிக்கலாம். ஏனெனில், இந்த துர்நாற்றத்திலிருந்து விடுபட சிலர் மீண்டும் மீண்டும் தலைமுடியை கழுவுவர். ஆனால், இவை தலைமுடிக்கு நல்லதல்ல. எனவே இதைக் கட்டுவதுதான் ஒரே வழி. இவை வியர்வையை இன்னும் அதிகமாகப் பிடித்து, தலைமுடியை மேலும் துர்நாற்றம் வீசச் செய்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: வானிலை மாற்றத்தால் முடி அதிகமா கொட்டுதா? அப்போ இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க!
வியர்வையால் உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவது
தலையில் அதிகப்படியான வியர்வை வெளியேற்றத்தின் காரணமாக, தூசி துகள்கள் முடிப்பகுதியில் குவிந்து, உச்சந்தலையில் அரிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆய்வு ஒன்றில், வியர்வை ஆனது உச்சந்தலையின் துளைகளை அடைத்து அவை சுவாசிப்பதைத் தடை செய்கிறது. இதன் காரணமாக, அதிகப்படியான வியர்வை உச்சந்தலை அரிப்புக்கு வழிவகுக்கலாம். இதன் காரணமாக தடிப்புகள் மற்றும் முடி உதிர்தல் ஏற்படலாம்.
தலைமுடி எண்ணெய் பசையுடன் காணப்படுவது
பல நேரங்களில், ஈரப்பதம் காரணமாக குளித்த சில நிமிடங்களிலேயே மீண்டும் வியர்வையை அனுபவிப்போம். இதனால், தலைமுடியை நன்றாக ஷாம்பு செய்தாலும், நாள் முடிவதற்கு முன்பாகவே வேர்கள் எண்ணெய் பசையாக மாறத் தொடங்குகின்றன. குறிப்பாக, முடியை உலர்த்துவதற்கு ஒரு ப்ளோ ட்ரையரைப் பயன்படுத்துவதில் தவறு செய்தால், இந்த செயல்முறை இன்னும் வேகமாகிவிடும்.
இந்த பதிவும் உதவலாம்: தலைமுடி கொத்து, கொத்தா உதிருதா? - தினமும் இந்த விதைகளைச் சாப்பிடுங்க முடி வளர்ச்சியைப் பார்த்து ஷாக் ஆகிடுவீங்க...!
Image Source: Freepik