Top foods that help increase fat burning after delivery: பெண்கள் பலரும் கர்ப்ப காலத்தில் பல்வேறு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் உடல் எடை அதிகரிப்பு ஒரு பொதுவான பிரச்சனையாக அமைகிறது. பிரசவத்திற்குப் பின்னர் பெண்களின் உடல் எடையை அதிகரிப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமானதாக, மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் போதுமான உடற்பயிற்சி இல்லாமை போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
இதில் பிரசவத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையை ஆதரிக்கவும் அன்றாட உணவில் சேர்க்கக்கூடிய உணவுகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
பிரசவத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பு எவ்வளவு சாதாரணமானது?
பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் சாதாரணமாக எடை அதிகரிப்பதற்கு குறிப்பிட்ட வரம்பு எதுவும் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். சில பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பிறகு படிப்படியாக எடை இழக்க நேரிடலாம். இன்னும் சிலருக்கு எடை அதிகரிக்கலாம். அதாவது தாய்ப்பால் கொடுப்பது எடை இழப்பு அல்லது அதிகரிப்பையும் பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த பதிவும் உதவலாம்: Postpartum Belly Fat: பிரசவத்திற்கு பின் வளர்ந்த தொப்பையை குறைக்க தினமும் இதை குடியுங்க!
பெண்கள் பலரும் பிரசவத்திற்குப் பிறகு ஆறு வாரங்களுக்குள் கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையில் பாதியைக் குறைக்கிறார்கள். பின்னர், அவர்களின் உணவு மற்றும் உடற்பயிற்சி பழக்கத்தைப் பொறுத்து அடுத்த மாதங்களில் அல்லது பிரசவத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் வரை படிப்படியாக உடல் எடையைக் குறைப்பார்கள். பிரசவத்திற்குப் பிறகு 6 மாதங்களில் தோராயமாக பாதி பெண்கள் 5 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட எடையையும், கால் பகுதி 10 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட எடையையும் கொண்டுள்ளனர் என்று அறிக்கை ஒன்றில் கூறப்படுகிறது.
நிபுணரின் கருத்து
பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு காரணமாக உடலில் வளர்சிதை மாற்றம் குறைகிறது. இந்த வகை உணவுகள் உடலில் கொழுப்பு எரிப்பை அதிகரிக்கவும், எடை மேலாண்மையை ஆதரிக்கவும் உதவுகிறது.
வெந்தயம்
நிபுணரின் கூற்றுப்படி, “இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது” என்று கூறியுள்ளார். குறிப்பாக, பிரசவத்திற்குப் பிறகு தொப்பையைக் குறைப்பதில் வெந்தய விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெந்தய விதையில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. வெந்தய விதைகளை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு தொப்பையைக் குறைக்க, வெந்தய டீயை தினமும் உட்கொள்ளலாம்.
இஞ்சி
“வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் கொழுப்பு எரிப்பை அதிகரிக்கிறது” என நிபுணர் குறிப்பிடுகிறார். பிரசவத்திற்குப் பிறகு எடை குறைக்க இஞ்சியைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, இஞ்சி டீ உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடை இழப்புக்கு உதவுகிறது. எனினும், தாய்ப்பால் கொடுக்கும்போது இஞ்சி உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம், எடை குறைப்புக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் மிதமான உடற்பயிற்சியும் அவசியமாகும். மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.
இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Weight loss: பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க நினைப்பவரா நீங்க? அப்போ இதை செய்யுங்க!
இலவங்கப்பட்டை
பிரசவத்திற்குப் பின்னர் இலவங்கப்பட்டை உட்கொள்வது,”உள்ளுறுப்பு கொழுப்பை நிர்வகிக்கிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது” என நிபுணர் கூறுகிறார். ஆனால், பிரசவத்திற்குப் பின், எடை குறைய இலவங்கப்பட்டை நேரடியாக உதவுவதாக அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லை என்றாலும், இதை ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்து மிதமான அளவில் பயன்படுத்தப்படலாம்.
View this post on Instagram
கருப்பு மிளகு (பைப்பரின்)
கருப்பு மிளகு உட்கொள்வது “வெப்ப உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் ஓய்வு ஆற்றல் செலவை அதிகரிக்கிறது” என்று ந்புணர் கூறுகிறார். கருப்பு மிளகில் பைட்டோநியூட்ரியன்ட்கள் உள்ளது. இவை உடலில் உள்ள கொழுப்பு செல்களை உடைக்க உதவுகிறது. மேலும் இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், தொப்பை கொழுப்பை விரைவாக அகற்றவும் உதவுகிறது. எனினும், இதை மருத்துவரின் பரிந்துரையில் எடுத்துக் கொள்வது நல்லது.
கடற்பாசி (Seaweed)
நிபுணரின் கூற்றுப்படி, “கொழுப்பு சேமிப்பைக் குறைக்க உதவுகிறது, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது” என நிபுணர் பகிர்ந்துள்ளார். இவை பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் உடல் எடை அதிகரிப்பைக் குறைக்கிறது.
நிபுணர் பரிந்துரைத்த இந்த உணவுப்பொருள்களை அன்றாட மற்றும் சீரான உணவில் சேர்ப்பது பிரசவத்திற்குப் பிறகு மீள்வது மற்றும் எடை இழப்பை மெதுவாக ஆதரிக்க பெரிதும் உதவுகிறது.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Postpartum Diet Plan: பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையை குறைக்க என்ன சாப்பிடணும்?
Image Source: Freepik