Which drink is best for weight loss after delivery: கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிப்பது மிகவும் இயல்பான ஒன்று. ஆனால், பிரசவத்திற்குப் பிறகு அதை குறைப்பது அவ்வளவு லேசான விஷயம் அல்ல. இருப்பினும், சரியான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் உங்கள் இலக்கை வேகமாக அடையலாம்.
கர்ப்ப காலத்தில் மற்றும் அதற்குப் பிறகு பெண்களின் உடலில் இயல்பாகவே பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது பெண்களின் எடையையும் பாதிக்கிறது. பெரும்பாலான பெண்கள் பிரசவம் முடிந்த கையோடு ஃபிட்டாக மாற விரும்புகிறார்கள் மற்றும் தொப்பை கொழுப்பை எவ்வாறு குறைப்பது என்று கவலைப்படுகிறார்கள்.
பிரசவத்திற்குப் பிறகு அதிகரித்த எடை மற்றும் தொப்பையை குறைக்க, நீங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து டிடாக்ஸ் வாட்டர் தயாரித்து குடிக்கலாம். இதை தொடர்ந்து செய்வதன் மூலம் சில தினங்களிலேயே வித்தியாசத்தை காணிப்பீர்கள். டிடாக்ஸ் வாட்டர் எப்படி தயாரிப்பது? மற்றும் அதன் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Pori For Weight Loss: பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
கர்ப்பத்திற்கு பின் எடையை குறைக்க கட்டாயம் செய்ய வேண்டியவை:

- பிரசவத்திற்குப் பிறகு தொப்பை மற்றும் எடையைக் குறைக்க சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம்.
- பிரசவத்திற்குப் பிறகு எப்போது உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும், எவ்வளவு செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள்.
- பிரசவத்திற்குப் பிறகு அதிகரித்த எடையைக் குறைக்க, நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் டிடாக்ஸ் வாட்டரின் உதவியை நாடலாம்.
- உங்கள் உணவு வழக்கத்தில் வெள்ளரி, கொய்யா, ஆரஞ்சு போன்ற பழங்களை அதிக அளவில் சேர்க்கவும்.
- அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் வாக்கிங் செல்லவும்.
இந்த பதிவும் உதவலாம் : Peas For Weight Loss: உடல் எடையை குறைக்க பட்டாணியை எப்படி சாப்பிடணும் தெரியுமா?
எடை குறைப்புக்கான டிடாக்ஸ் வாட்டர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள்:
வெள்ளரிக்காய் - பாதி.
இஞ்சி - அரை அங்குலம்.
எலுமிச்சை - பாதி.
புதினா இலைகள் - 20.
தண்ணீர் - 1 லிட்டர்.
டிடாக்ஸ் வாட்டர் செய்முறை:
- முதலில், வெள்ளரி, இஞ்சி, புதினா இல்லை இலைகளை கழுவி சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
- பின்னர், இவை அனைத்தையும் தண்ணீரில் சேர்க்கவும். அதில், எலுமிச்சை துண்டுகளையும் சேர்க்கவும்.
- இந்த தண்ணீரை 2-3 மணிநேரம் அப்படியே விட்டு விடவும். இந்த தண்ணீரை நாள் முழுவதும் குடிக்கவும். 15 நாட்களில் நல்ல வித்தியாசத்தை காணிப்பீர்கள்.
இந்த பதிவும் உதவலாம் : இந்த நீரை குடியுங்கள்.. எடை சட்டுன்னு குறையும்.!
பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் உடல் எடையை குறைக்க இந்த டிடாக்ஸ் தண்ணீர் உதவும். உங்களுக்கு ஏதேனும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகவும்.
Pic Courtesy: Freepik