Pori For Weight Loss: பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Pori For Weight Loss: பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?

பொரியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பொரி சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளும் முன் பொரியின் ஊட்டச்சத்து மதிப்புகளைத் தெரிந்து கொள்ளலாம்.

பொரியில் கால்சியம், இரும்பு, தியாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் டி மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன. மேலும், இதில் குறைந்த அளவு கலோரிகளும், சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளும் நிறைந்துள்ளன. இது உடலுக்கு நிலையான மற்றும் மெதுவான ஆற்றலை வழங்குகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நீண்ட நேரத்திற்கு முழுமையான உணர்வைத் தருகிறது. இதன் மூலம் அதிகம் சாப்பிடுவதைத் தடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Snacks For Weight Loss: ஸ்நாக்ஸ் சாப்பிட்டாலும் வெயிட் போடாம இருக்க ஈவ்னிங் இதெல்லாம் சாப்பிடுங்க

பொரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

குறைவான கொழுப்பு

பொரியில் இயற்கையாகவே கொழுப்பு குறைவாக உள்ளது. பொரியை எடுத்துக் கொள்வது நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள பல்வேறு தின்பண்டங்களுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது. இவை இயத ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது.

கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த

இது முதன்மையான கார்போஹைட்ரேட்டுகளால் ஆனதால், இது உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை வழங்குகிறது.

குறைந்த கலோரிகள்

பொரி குறைந்த அளவிலான கலோரிகளைக் கொண்டுள்ளது. இது உடல் எடை அல்லது கலோரி உட்கொள்ளலை நிர்வகிக்க விரும்பும் நபர்களுக்கு நல்லதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை சட்டுனு குறைக்க இஞ்சி மற்றும் மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க

ஆரோக்கியமான பொரி வகைகள்

பசியைப் பூர்த்தி செய்யும் வகையிலும், ஆரோக்கியமான சிற்றுண்டியாகவும் பொரியை பல்வேறு வகைகளில் எடுத்துக் கொள்ளலாம்.

பொரி மற்றும் தயிர் சாட்

1 கப் அளவிலான பொரியில் 1/2 கப் அளவு குறைந்த கொழுப்புள்ள தயிரை சேர்க்கவும். இதில் துண்டுகளாக்கப்பட்ட தக்காளி, வெள்ளரிகள், வெங்காயம் மற்றும் ஒரு சிட்டிகை சாட் மசாலா சேர்க்கலாம்.

பஃப்டு ரைஸ் பேல்

1 கப் பொரியில், பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்க்கவும். பச்சை சட்னி, புளி சட்னி மற்றும் மசாலாப் பொருள்களுடன் தாளிக்கலாம்.

பொரி மற்றும் மசாலா ஓட்ஸ் கலவை

1 கப் பொரியில் 1/2 கப் அளவு வறுத்த ஓட்ஸ் சேர்க்கவும். பிறகு வறுத்த பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் போன்றவற்றைச் சேர்க்கவும். மேலும் இதில் உப்பு, மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

எடை இழப்புக்கு பொரி

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு பொரி ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாகக் கருதப்படுகிறது. இது சுவையான மற்றும் ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது. மேலும் இதன் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நலன்களைத் தருகிறது. எனினும், இதை சரியான அளவில் சாப்பிடுவது அவசியமாகும். இதனுடன் எடுத்துக் கொள்ளும் உணவு நல்ல ஊட்டச்சத்துடன் சமநிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Roti Or Rice For Weight Loss: உடல் எடை குறைய ரொட்டி அல்லது சாதம்! எது சாப்பிடலாம்?

Image Source: Freepik

Read Next

Weight Loss Mistakes: இந்த முக்கிய தவறுகள் உங்கள் உடல் எடையை குறைக்கவே விடாது!

Disclaimer