Rice Or Roti Which Is Best For Weight Loss: ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் மோசமான பழக்க வழக்கங்களால் பலரும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையைச் சந்தித்து வருகின்றனர். இதனால் பலரும் உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக உடல் எடை குறைய உணவு முறையைக் கையாள்வது சிறந்த தேர்வாகும்.
அந்த வகையில் ரொட்டி, சாதம் மற்றும் ஓட்ஸ் போன்றவற்றில் எதைச் சாப்பிடுவது நல்லது என்ற கேள்வி அனைவருக்கும் எழும். இதில் இன்ஸ்டகிராமின் myhealthbuddy பக்கத்தில் சுகாதார நிபுணர் ஆஷிஷ் கிரேவால் ரொட்டி, அரிசி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றில் எவை உடல் எடையைக் குறைக்க சிறந்தது என்பது குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Reduce Tips: வெறும் 21 நாள்ல தொப்பை கொழுப்பைக் குறைக்க இத செய்யுங்க போதும்.
ரொட்டி, அரிசி, ஓட்ஸ்
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பெரும்பாலான மக்கள் ரொட்டி, அரிசி, ஓட்ஸ் போன்றவற்றில் எதை எடுத்துக் கொள்வது என்பதில் குழப்பம் இருக்கலாம். பலரும் உடல் எடையைக் குறைக்க அரிசியை உணவில் இருந்து முற்றிலும் நீக்கி விடுவர். சிலர் இரவு உணவிற்கு ரொட்டி சாப்பிடுவதை தவிர்த்து அதற்குப் பதிலாக ஓட்ஸ் சாப்பிடலாம். இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
நிபுணர் ஆஷிஷ் கிரேவால் அவர்களின் கூற்றுப்படி, “ரொட்டி, ஓட்ஸ் மற்றும் அரிசியில் உள்ள கலோரிகள் பின்வரும் அளவில் காணப்படுகின்றன. 100 கிராம் சமைத்த ஓட்ஸில் 117 கலோரிகள், 100 கிராம் சமைத்த அரிசியில் 102 கலோரிகள் மற்றும் 40 கிராம் 1 ரொட்டியில் சுமார் 107 கிராம் அளவு நிறைந்துள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க இந்த மூன்று பொருள்களும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பசையம் எடுத்துக் கொள்வதால் ஒவ்வாமை பிரச்சனை இருப்பின் ரொட்டியைத் தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Kollu For Weight Loss: தொப்பைக் கொழுப்பை கரைச்சி எடுக்கும் கொள்ளு. இப்படி சாப்பிட்டா சீக்கிரம் ரிசல்ட் கிடைக்கும்.!
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கான குறிப்புகள்
- எந்த உணவுப் பொருளும் இயற்கையாகவே உடல் பருமன் அதிகரிக்காது. உணவு விருப்பத்திற்கு ஏற்றவாறு ரொட்டி மற்றும் சாதத்தில் எந்த பொருளையும் தேர்வு செய்யலாம்.
- உடல் எடை குறைய நம் உடலில் கலோரிகள் குறைவதை விட, குறைவான கலோரிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இது உடலில் கலோரிகளைக் குறைத்தல் என அழைக்கப்படுகிறது.
- உணவில் உங்களுக்குப் பிடித்தமான உணவுப் பொருள்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், உணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு சரியாக இருக்க வேண்டும்.
- உடல் எடையைக் குறைக்க பிடித்த சாதம் மற்றும் ரொட்டியில் இருந்து விலகி இருக்கத் தேவையில்லை. இவை இரண்டிலும் சரியான அளவு சேர்க்கப்படுவதை அறிய உணவியல் நிபுணரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
- ரொட்டி, பால், அரிசி, தேநீர், வாழைப்பழம் போன்ற எடையைக் குறைக்கும் உணவுகளை எளிதில் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை சட்டுனு குறைக்க இஞ்சி மற்றும் மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik