$
Moongil Rice For Weight Loss: மூங்கில் தளிர் விதைகளிலிருந்து மூங்கில் அரிசி பெறப்படுகிறது. இது ஒரு சிறப்பு வகை அரிசியாகும். இந்த மூங்கில் அரிசியானது கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமல்லாமல், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். இது மிகக் குறைந்த அல்லது கொழுப்புச் சத்து இல்லாத அரிசி வகையாகும். மூங்கில் அரிசியில் வைட்டமின் பி சத்துக்கள், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை மூட்டு வலியைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
உடல் எடை குறைய மூங்கில் அரிசி
பாரம்பரிய அரிசிக்கு சிறந்த மாற்றாக மூங்கில் அரிசி உள்ளது. இதில் ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்துக்கள் மற்றும் பிற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், மூங்கில் அரிசி உடல் எடையைக் குறைக்க உதவுமா? என்பது அனைவருக்கும் எழும் கேள்வியாகும். இதில் உடல் எடையிழப்புக்கான மூங்கில் அரிசியின் சாத்தியமான உணவுகள் மற்றும் எப்படி உட்கொள்ளலாம் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Seeds For Weight Loss: வேகமா உடல் எடையைக் குறைக்க இந்த விதைகளை எடுத்துக்கோங்க
எடை குறைய மூங்கில் அரிசி தரும் நன்மைகள்
மூங்கில் அரிசி குறைந்த கலோரி அளவுள்ள உணவாக இருப்பதால் இவை உடல் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. கூடுதலாக இதில் நிறைந்துள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நீண்ட நேரம் முழுமையான உணர்வைத் தருகிறது. இதன் மூலம் அதிகம் சாப்பிடும் வாய்ப்பைக் குறைக்கலாம்.
எடை இழப்புக்கு நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இது செரிமானத்தை சீராக வைத்திருக்கவும், மனநிறைவை மேம்படுத்தவும் உதவுகிறது. இவை இரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது. குறிப்பாக மூங்கில் அரிசி போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது எடை இழப்பை ஊக்குவிப்பதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் உதவுகிறது.
மூங்கில் அரிசியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது உடலின் வீக்கத்தைக் குறைப்பதுடன், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் உடல் பருமன் வளர்ச்சிக்கு வீக்கம் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது. இதற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

உடல் எடையைக் குறைக்க மூங்கில் அரிசி சாப்பிடும் முறை
மூங்கில் அரிசியை உணவில் பலவிதமான வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
வறுத்த மூங்கில் அரிசி
மூங்கில் அரிசியை விரைவான மற்றும் எளிதான முறையாக வறுவலாக எடுத்துக் கொள்ளலாம். கடாய் ஒன்றில் ஒரு தேக்கரண்டி அளவு ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, அதில் காலிஃபிளவர், ப்ரோக்கோலி, சீமை சுரைக்காய் போன்றவற்றைச் சேர்க்கலாம். அதன் பின்னர் சமைத்த மூங்கில் அரிசி, தேன், பூண்டு மற்றும் குறைந்த சோடியம் சோயா சாஸ் போன்றவற்றால் செய்யப்பட்ட கலவையைச் சேர்க்கலாம். இது கெட்டியாகும் வரை சமைத்து காய்கறிகள் மென்மையாகும் வரை இருக்கலாம். அதன் பின்னர் இதை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pori For Weight Loss: பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
மூங்கில் அரிசி சூப்
இது ஒரு ஆறுதல் மற்றும் நிறைவான உணர்வைத் தரக்கூடிய உணவாகும். இது உடல் எடை இழப்புக்கு ஏற்றதாகும். மூங்கில் அரிசி சூப் தயார் செய்ய கேரட், வெங்காயம் மற்றும் செலரி போன்ற நறுக்கப்பட்ட காய்கறிகளைச் சேர்க்கலாம். தைம், ரோஸ்மேரி போன்ற மூலிகைகள் சேர்த்து கருப்பு மிளகு தூவி சூப்பைத் தயார் செய்யவும். இந்த சூப்பில் குறைவான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க சிறந்த உணவாகும்.
மூங்கில் அரிசி சாலட்
மூங்கில் அரிசியானது புத்துணர்ச்சியூட்டும் மற்றும் சத்தான உணவாகும். இதனை சாலட்டாக எடுத்துக் கொள்வது உடல் எடை இழப்புக்கு ஏற்றதாகும். சாதாரண அரிசியைப் போல, மூங்கில் அரிசியையும் சேர்த்து சமைத்து, கேரட், வெள்ளரிக்காய் மற்றும் மிளகுத்தூள் போன்ற நறுக்கப்பட்ட காய்கறிகளைச் சேர்க்கலாம்.

மூங்கில் அரிசி கஞ்சி
இது ஒரு ஆறுதல் மற்றும் நிறைவான காலை உணவைத் தருகிறது. இவை உடல் எடை இழப்புக்கு ஏற்றதாக அமைகிறது. மூங்கில் அரிசியை பாதாம் பாலுடன் சேர்த்து சமைத்து அதில் இலவங்கப்பட்டை, தேன் மற்றும் வெண்ணிலா சேர்த்துக் கொள்ளலாம். இதில் கூடுதல் ஊட்டச்சத்துக்காக புதிய பெர்ரி மற்றும் நறுக்கப்பட்ட பாதாம் போன்றவற்றைக் கஞ்சியில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கஞ்சியில் புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளது. இவை எடை இழப்புக்குக் காலை நேரத்தில் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.
மூங்கில் அரிசி சத்தான மற்றும் சுவையான உணவாக இருப்பதுடன், எடை இழப்பு உட்பட இன்னும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. எனவே உடல் எடையை இழக்க விரும்புபவர்கள் உணவில் மூங்கில் அரிசியை இது போன்ற வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Green Gram For Weight Loss: உடல் எடையைச் சட்டுனு குறைக்க உதவும் பச்சைப்பயறு. எப்படி சாப்பிடலாம்?
Image Source: Freepik