Jamun for Weight Loss: உடல் எடையை சட்டுனு வேகமாக குறைக்க நாவல்பழத்தை சாப்பிடுங்க

  • SHARE
  • FOLLOW
Jamun for Weight Loss: உடல் எடையை சட்டுனு வேகமாக குறைக்க நாவல்பழத்தை சாப்பிடுங்க

உடல் எடை குறைய ஜாமுன் பழம்

இந்திய கருப்பட்டி என்றழைக்கப்படும் ஜாமூன் பழம் ஒரு சுவையான மற்றும் கோடைக்கால பழமாகும். இதன் புளிப்புச் சுவை மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிப்பதுடன், பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. உடல் எடையைக் குறைப்பதிலும் நாவல் பழம் மிகவும் சிறந்த தேர்வாக அமைகிறது. உடல் எடை இழப்பு பயணத்தை விரைவுபடுத்த தினசரி உணவில் நாவல் பழம் எடுத்துக் கொள்வது சிறந்த தேர்வாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Overeating And Weight Loss: உடல் எடையைக் குறைக்க கம்மியா சாப்பிடணுமா? இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க

ஜாமுனில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

ஜாமுன் பழம் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்குகிறது. இதில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இது தவிர, நாவல் பழத்தில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாலிபினால்கள் போன்றவையும் காணப்படுகிறது. அதே சமயம், 100 கிராம் அளவிலான ஜாமுன் பழம் பொதுவாக 60 கலோரிகளைக் கொண்டுள்ளது. இது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற பழமாக அமைகிறது.

எடை இழப்பில் ஜாமுன் பழம் தரும் நன்மைகள்

அதிக நார்ச்சத்துக்கள்

பொதுவாக ஜாமுன் பழங்கள் அதிகளவிலான நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இவை வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதாகவும், நீண்ட நேரம் முழுமையாக வைத்திருப்பதாகவும் அமைகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில் அதிக நார்ச்சத்து உணவுகள் எடை மேலாண்மைக்கு நேர்மறையான விளைவைத் தருவதாகக் கண்டறியப்பட்டது. எனவே உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த அதிக நார்ச்சத்துக்கள் உள்ளடக்கத்தைக் கொண்ட ஜாமுன் பழத்தை உட்கொள்ளலாம்.

அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்

ஜாமூனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் திறனைக் கொண்டுள்ளது. ஏனெனில் உடலில் வெளியிடப்படும் ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை சேதப்படுத்தி, நீரிழிவு, உடல் பருமன் அல்லது புற்றுநோய் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் செல் சேதத்தைத் தடுப்பதுடன் மேம்பட்ட நல்வாழ்வு மற்றும் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடும் நடிகர்! இதன் நன்மைகள் என்ன தெரியுமா?

குறைந்த கலோரி உள்ளடக்கம்

நாவல்பழம் குறைந்த கலோரி உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் எடையிழப்புக்கு நன்மை பயக்கும். எனவே எடை குறைப்பு பயணத்தில் உள்ளவர்களுக்கு நாவல் பழம் சிறந்த தேர்வாக அமைகிறது. கலோரி இலக்குகளைத் தடுக்காமல், தினசரி காலை உணவில் இது ஒரு சரியான கூடுதலாக இருக்கும். எனவே நாவல்பழத்தை உட்கொள்வது எடையிழப்புக்கு நன்மை தருகிறது.

நீரிழிவு நோய்க்கு

நாவல்பழத்தில் குறைந்தளவிலான கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை இன்சுலின் உணர்வைக் கட்டுப்படுத்தவும் மற்றும் கொழுப்புச் சேமிப்பைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும் இந்த குறைந்த கிளைசெமிக் இன்டக்ஸ் குறியீடு கொண்ட உணவுகளை உட்கொள்வது உடலில் மெதுவாக ஜீரணமாகி, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவுகிறது.

வளர்ச்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு

ஜாமுனில் கேலிக் அமிலம் மற்றும் எலாஜிக் அமிலம் போன்ற சில சேர்மங்கள் உள்ளது. இவை உடலில் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் ஒழுங்கற்ற வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த முடியும். மேலும் உடல் கலோரிகளை திறமையாக எரிக்க முடியும் . இவ்வாறு உடல் எடை இழப்பில் ஜாமுன் பெரிதும் உதவுகிறது. இது தவிர, ஜாமூனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை திறம்பட எரிக்க உதவுகிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் ஜாமுன் பழம் உடல் எடையிழப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Walking After Meal: சாப்பிட்ட பிறகு ஒரு 10 நிமிஷம் நடைபயிற்சி செய்யுங்க! என்ன மாற்றம் நடக்குதுனு பாருங்க

Image Source: Freepik

Read Next

ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடும் நடிகர்! இதன் நன்மைகள் என்ன தெரியுமா?

Disclaimer