Doctor Verified

உடல் எடையை சட்டுனு குறைக்க இஞ்சி மற்றும் மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
உடல் எடையை சட்டுனு குறைக்க இஞ்சி மற்றும் மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க

இதில் மஞ்சள் மற்றும் இஞ்சி போன்றவற்றில் உள்ள பண்புகள் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இவை இரண்டையும் ஒன்றாக உட்கொள்வதால் என்னென்ன நன்மைகளைத் தருகிறது மற்றும் எப்படி உட்கொள்வது என்பது குறித்துக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Reduce Tips: வெறும் 21 நாள்ல தொப்பை கொழுப்பைக் குறைக்க இத செய்யுங்க போதும்.

உடல் எடை குறைய இஞ்சி மற்றும் மஞ்சள்

உடல் பருமன் பிரச்சனையால் உடலில் பல வகையான நச்சுப் பொருள்கள் காணப்படும். உடலில் இருந்து நச்சுக்களை நீக்குவதற்கு மஞ்சள் மற்றும் இஞ்சியை உட்கொள்ளலாம். மேலும், இவை உடலில் உள்ள கொழுப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க மஞ்சள் மற்றும் இஞ்சி எடுத்துக் கொள்ளும் முறை மற்றும் நன்மைகள் குறித்து ஆரோக்யா ஹெல்த் சென்டரின் மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர்.வி.டி. திரிபாதி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

மருத்துவர் திரிபாதி அவர்கள் கூற்றுப்படி, “வயிறு மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மஞ்சள், இஞ்சி இரண்டுமே மிகவும் நன்மை பயக்கும். இவற்றை உட்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்தி, பசியைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இவை ஃப்ரீ ரேட்டிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

எடை குறைப்பில் இஞ்சி மற்றும் மஞ்சள் தரும் நன்மைகள்

உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் கரைப்பதைத் தவிர, மஞ்சள் மற்றும் இஞ்சி இரண்டும் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

  • வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்குப் பயன்தருகிறது
  • செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது
  • உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது
  • சிறுநீரகம் மற்றும் கல்லீரலை ஆரோக்கியமாக்குவதில் நன்மை பயக்கும்
  • இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்
  • தொற்றுக்களிலிருந்து விடுபட வைக்கிறது

இந்த பதிவும் உதவலாம்: Fenugreek For Weight Loss: உடல் எடை சீக்கிரம் குறைய வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க.

உடல் எடை குறைய மஞ்சள் மற்றும் இஞ்சி உட்கொள்ளும் முறை

உடல் எடையைக் குறைக்க இஞ்சி மற்றும் மஞ்சளைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். மஞ்சள் மற்றும் இஞ்சி தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. மஞ்சள் மற்றும் இஞ்சி பானம் தயாரிக்கும் முறை குறித்துக் காணலாம்.

  • முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதில் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு போன்றவற்றைச் சேர்க்கலாம்.
  • அதன் பிறகு, இதை வடிகட்டி கஷாயம் போல குடிக்கலாம்.

இந்த முறையில் தயாரித்த மஞ்சள் மற்றும் இஞ்சி பானத்தைத் தினந்தோறும் காலையில் உட்கொள்ளலாம். இவை உடல் எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Kollu For Weight Loss: தொப்பைக் கொழுப்பை கரைச்சி எடுக்கும் கொள்ளு. இப்படி சாப்பிட்டா சீக்கிரம் ரிசல்ட் கிடைக்கும்.!

Image Source: Freepik

Read Next

Fruits For Weight Loss: சட்டுன்னு உடல் எடை குறைய இந்த பழங்களை சாப்பிடுங்க!!

Disclaimer