Ways To Drink Fenugreek Water For Weight Loss: தற்போதைய காலகட்டத்தில் பலரும் உடல் எடையைக் குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். உடல் எடை அதிகமாவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதில் குறிப்பாக உணவுமுறையே உடல் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமையும். ஆரோக்கியமற்ற மற்றும் கட்டுப்பாடின்றி எடுத்துக் கொள்ளும் உணவுகளால், உடல் எடை அதிகரிக்கும்.
இதனால், சிலர் உடல் எடையைக் குறைக்க எண்ணி, பலவிதமான மருந்துகளை எடுத்துக் கொள்வர். ஆனால், இவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதுடன், பல்வேறு நோய்களை உண்டாக்கலாம். இந்த சூழ்நிலையில் இயற்கை முறையை நாடுவதே நல்லது. அந்த வகையில், உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப் பொருள்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உடல் எடை குறைய வெந்தயத்தை எடுத்துக் கொள்ளும் முறை குறித்து உணவியல் நிபுணர் சுமன் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Carrot Juice For Weight Loss: உடல் எடையை சட்டுனு குறைக்க கேரட் ஜூஸை இப்படி குடிங்க.
வெந்தயத்தின் ஊட்டச்சத்துக்கள்
வெந்தய விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான புரதம், நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட், இரும்பு போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவற்றை உட்கொள்வது உடல் எடையைக் குறைப்பதுடன், தொப்பைக் கொழுப்பையும் குறைக்கிறது. மேலும், வெந்தய விதைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதில் உடல் எடை குறையை வெந்தயநீரை எப்படி குடிக்கலாம் என்பதைப் பற்றிக் காண்போம்.
எடை இழப்புக்கு வெந்தய நீர் குடிக்கும் முறை
வெந்தய நீர் குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
- 1 டீஸ்பூன் வெந்தய விதைகளை 1 கிளாஸ் நீரில் ஓர் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
- பின் இந்த தண்ணீரை வடிகட்டி காலையில் குடிக்க வேண்டும்.
- இவ்வாறு செய்வதன் மூலம், உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கப்பட்டு, உடல் எடை வேகமாகக் குறைகிறது.
வெந்தய விதையுடன் தேன்
வெந்தய விதைகளுடன் தேன் சேர்த்து எடுத்துக் கொள்வதன் மூலமும் உடல் எடையைக் குறைக்க முடியும்.
- இதற்கு வெந்தயத்தை அரைத்து, அதில் தேன் சேர்த்து குடிக்கலாம்.
- இவ்வாறு குடிப்பது விரைவில் உடல் எடை குறைவதுடன், உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
- மேலும் வெந்தயம், தேன் இரண்டும் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை பலப்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss In Winter: தொப்பைக் கொழுப்பை ஈஸியா குறைக்க இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க..
வெந்தய விதை டீ
- உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவும் மற்றொரு வழியாக வெந்தய தேநீரை உட்கொள்ளலாம். இதற்கு 1 கிளாஸ் நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- தண்ணீர் கொதித்த பிறகு, அதில் 1 டீஸ்பூன் வெந்தய விதைகளைச் சேர்த்து கொதிக்க வைக்கலாம்.
- இதில் பாதி தண்ணீர் இருக்கும் போது வடிகட்டி, வெதுவெதுப்பான பிறகு குடிக்கலாம்.

வறுத்த வெந்தய விதைகள்
வெந்தய விதைகளைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்க, இந்த முறையைத் தேர்வு செய்யலாம்.
- இதில் முதலில் வெந்தயத்தை வாணலி ஒன்றில் சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.
- இப்போது வறுத்த வெந்தயத்தைப் பொடியாக வைத்துக் கொள்ளலாம்
- இந்தப் பொடியை 1 கிளாஸ் நீரில் சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
- இவ்வாறு செய்வது உடல் எடையைக் குறைப்பதுடன், தொப்பைக் கொழுப்பையும் குறைக்கும்.
முளைத்த வெந்தயம்
முளைத்த பயறு மற்றும் பருப்பு வகைகளைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முளைத்த வெந்தயம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? வெந்தயத்தை ஊறவைத்து முளைத்து சாப்பிடுவதும் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும், இந்த வழியில் வெந்தயத்தை உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
இந்த வழிகளில் வெந்தய விதைகளை எடுத்துக் கொள்வது உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதுடன், பல்வேறு ஆரோக்கிய நலன்களைத் தருகிறது. எனினும், வெந்தயத்தை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Reduce Tips: வெறும் 21 நாள்ல தொப்பை கொழுப்பைக் குறைக்க இத செய்யுங்க போதும்.
Image Source: Freepik