Sabja Seeds: மடமடனு எடை குறையணுமா? சப்ஜா விதைகளை இப்படி சாப்பிடுங்க

  • SHARE
  • FOLLOW
Sabja Seeds: மடமடனு எடை குறையணுமா? சப்ஜா விதைகளை இப்படி சாப்பிடுங்க


Ways To Use Sabja Seeds For Weight Loss: ஆரோக்கியமற்ற உணவுமுறைகள், மோசமான வாழ்க்கை முறையால் இன்று பலரும் உடல் எடை அதிகமாகி அவதியுறுகின்றனர். உடல் எடையைக் குறைக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், உடல் எடை குறைய சப்ஜா விதைகளைப் பயன்படுத்தலாம். பேசில் விதைகள் என்றழைக்கப்படும் இந்த விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையைக் குறைப்பதில் பங்கு வகிக்கிறது. குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் இந்த விதைகள் பார்ப்பதற்கு எள், கருஞ்சீரகம் போல தோற்றமளிக்கும். இதில் உடல் எடையைக் குறைக்க சப்ஜா விதைகளை எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து காணலாம்.

உடல் எடை இழப்பில் சப்ஜா விதைகள் நன்மைகள்

குறைந்த அளவு கலோரிகள்

சப்ஜா விதைகளில் குறைந்தளவு கலோரிகள், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் எடையிழப்புக்கு அவசியமானதாகும்.

அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த விதை

அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இந்த விதைகள் உடல் எடையைக் குறைக்க உதவும் நல்ல தீர்வாக அமைகிறது. இந்த நார்ச்சத்து உள்ளடக்கம் நீண்ட நேரம் முழுமையாக வைக்க உதவுகிறது. இது அதிகப்படியான உணவு மற்றும் தேவையற்ற பசியைத் தடுக்க உதவுகிறது. இந்த விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதைக் குறைத்து, கொழுப்பு இழக்கப்படுவதை ஊக்குவிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Cloves For Weight Loss: எடையை வேகமாகக் குறைக்கும் கிராம்புவை இப்படி எடுத்துக்கோங்க

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்

சப்ஜா விதைகளில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள நல்ல கலவையாகும், இது உடலில் நல்ல வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடல் பருமனை நிர்வகிக்கவும் எடை இழப்புக்கு உதவுகின்றன.

பசியைக் கட்டுப்படுத்தும் சப்ஜா விதை

சப்ஜா விதைகள் நீரில் ஊறவைக்கும் போது, செரிமான நொதிகளை வெளியிடுகிறது. இதன் மூலம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எடையைக் குறைக்கிறது.

இரத்த சர்க்கரையைக் குறைக்க

நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடல் பருமனே ஆகும். எனினும், சப்ஜா விதைகளை கொண்டு உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பதுடன், உடல் பருமனைத் தடுக்கவும் முடியும். இதன் நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது.

எடையிழப்புக்கு சப்ஜா விதைகளை எப்படி சாப்பிடலாம்?

ஊறவைத்து சாப்பிடுவது

தேவையான அளவு சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு இது ஜெல் போன்ற அமைப்பை பெற்றிருக்கும். இந்த ஜெல்லை எடுத்துக் கொள்வது வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Water Benefits: வெயிட் லாஸ்க்கு உதவும் தேங்காய் தண்ணீர். இப்படி குடிச்சி பாருங்க

ஸ்மூத்திகளில் சப்ஜா விதை

ஊறவைத்த சப்ஜா விதைகளை தயார் செய்து வைத்த ஸ்மூத்தி ரெசிபிகளோடு சேர்த்து சாப்பிடுவது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகப்படுத்துகிறது. இது தனித்துவமான உணர்வைத் தருகிறது.

பானங்களில் சப்ஜா விதைகள்

ஊற வைத்த சப்ஜா விதைகளை தண்ணீரில் கலந்து, இனிப்பு சுவைக்காக சிறிது தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின், எலுமிச்சைச் சாறு சிறிதளவு சேர்த்து அருந்தலாம். இது பசியைக் ககட்டுப்படுத்த உதவும் சிறந்த பானமாக அமைகிறது.

தேநீருடன் சப்ஜா விதைகள்

கிரீன் டீ அல்லது இஞ்சி டீ போன்ற உடல் எடையைக் குறைக்க உதவும் ஹெர்பல் டீ வகைகளில் ஊற வைத்த சப்ஜா விதைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

சாலட்டில் சப்ஜா விதைகள்

பிடித்தமான சாலட் வகைகளில் சப்ஜா விதைகளை தூவி சாப்பிடலாம். இது ஊட்டச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கிறது.

தயிர் மற்றும் ஓட்ஸ் உடன்

தயிர் அல்லது ஓட்ஸ் கஞ்சியுடன் சேர்த்து சப்ஜா விதைகளை சாப்பிடுவது உணவின் அமைப்பை மாற்றி, வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது.

இந்த வழிகளில் சப்ஜா விதைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைப்பதுடன், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Summer Weight Loss Drinks: வெயில் காலத்தில் உடல் எடையை சட்டுனு குறைக்க நீங்க குடிக்க வேண்டிய பானங்கள்

Image Source: Freepik

Read Next

Metabolism Increasing Tips: மெட்டபாலிசத்தை இப்படி அதிகரிச்சா, எடையை ஈஸியா குறைக்கலாம்

Disclaimer