Carrot Juice Benefits For Weight Loss: இன்று பலரும் மோசமான உணவுமுறை, ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் உடல் எடை அதிகமாகி அதைக் குறைக்க முயற்சிக்கின்றனர். உடல் எடையைக் குறைப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உடல் எடையைக் குறைக்க கேரட்டை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து காணலாம்.
கேரட்டின் ஊட்டச்சத்துக்கள்
கேரட்டில் நல்ல அளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது. மேலும், கேரட்டின் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கிறது. இவை இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. தினசரி உணவில் கேரட் சாற்றை எடுத்துக் கொள்வது தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
இதில் அடர்த்தியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கேரட்டில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், கேரட் சாறு நீரேற்றமாக வைக்க உதவுகிறது. மற்ற பானங்களுடன் ஒப்பிடுகையில் கேரட் சாறு உடல் எடையைக் குறைப்பதுடன் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss In Winter: தொப்பைக் கொழுப்பை ஈஸியா குறைக்க இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க..
உடல் எடை குறைய கேரட் சாறு எப்படி உதவுகிறது
கேரட் சாறு அருந்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த கேரட் சாறு உதவுகிறது. கேரட்டில் உள்ள வைட்டமின் பி, கொழுப்பு மற்றும் புரதத்தின் வளர்சிதை மாற்றத்தில் உதவுகிறது. இதன் மூலம் மன அழுத்தம் மற்றும் சோர்வைக் குறைக்க உதவுகிறது. இவை உடல் எடையைக் குறைக்கவும், தசைகளை வளர்க்கவும் உதவுகின்றன.
உடல் எடை குறைய கேரட் சாற்றை எப்போது குடிக்க வேண்டும்
கேரட் சாறு குளிர்ச்சியான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. எனவே இதை காலை உணவு அல்லது மதிய உணவுக்குப் பிறகு அருந்துவது பரிந்துரைக்கப்படுகிறது. அதிலும் காலை உணவில் கேரட் ஜூஸ் சேர்ப்பது உடல் எடையைக் குறைக்க சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. அதே சமயம், கேரட் ஜூஸை இரவில் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
எப்படி உதவுகிறது?
கேரட் சாற்றில் இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மாங்கனீசு போன்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை உடல் எடையைக் குறைப்பதுடன், வேறு சில நன்மைகளையும் தருகிறது.
- கேரட்டில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் காலை நேரத்தி எடுத்துக் கொள்வது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதன் மூலம் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இது உடல் எடையை வெகுவாகக் குறைக்கிறது.
- கேரட் சாற்றில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- மேலும், கேரட்டில் வைட்டமின் ஏ சத்துக்கள் காணப்படுகிறது. கால நேரத்தில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் அருந்துவது, உடற்பயிற்சியின் போது உடலுக்குக் கூடுதல் ஆற்றலைத் தருகிறது.

குறிப்பு
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், கேரட் சாற்றை சர்க்கரை சேர்க்காமல் அருந்த வேண்டும். அதே சமயம், சாற்றை வடிகட்டாமல் குடிப்பது நல்லது. கேரட்டிலேயே இயற்கையான இனிப்பு சுவை நிறைந்துள்ளது. கூடுதலாக இனிப்புச் சுவை தேவைப்பட்டால், தேன் கலந்து குடிக்கலாம்.
நீரிழிவு அல்லது வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட் சாற்றை அருந்தும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Reduce Tips: வெறும் 21 நாள்ல தொப்பை கொழுப்பைக் குறைக்க இத செய்யுங்க போதும்.
Image Source: Freepik