Green Gram For Weight Loss: உடல் எடையைச் சட்டுனு குறைக்க உதவும் பச்சைப்பயறு. எப்படி சாப்பிடலாம்?

  • SHARE
  • FOLLOW
Green Gram For Weight Loss: உடல் எடையைச் சட்டுனு குறைக்க உதவும் பச்சைப்பயறு. எப்படி சாப்பிடலாம்?


How To Eat Green Gram For Weight Loss: மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படலாம். இதனால் உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளைத் தேர்வு செய்கின்றனர். அதே சமயம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைப்பது அவசியமாகும்.

உடல் எடை குறைய சரியான வழியாக அமைவது ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வது. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். அந்த வகையில் ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க பருப்பு வகைகள் சிறந்த உணவாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Roti Or Rice For Weight Loss: உடல் எடை குறைய ரொட்டி அல்லது சாதம்! எது சாப்பிடலாம்?

உடல் எடை குறைய பச்சைப்பயறு

உணவு வகைகளில் பிரதான உணவு வகையாக அமைவது பருப்பு வகையாகும். பருப்பு செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது இதயத்தை கெட்ட கொலஸ்ட்ராலில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. நீரிழிவு பாதிப்பை நிர்வகிக்கவும், உடலுக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

பொதுவாக பல்வேறு வகையான பருப்பு வகைகள் உள்ளன. பருப்புகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதன் படி, எடை இழப்பில் பச்சைப்பயறு வகைகள் உதவுகிறது. பச்சைப்பயறில் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள் போன்றவை காணப்படுகிறது. இது தவிர, பச்சை பயறில் மாங்கனீசு, வைட்டமின் பி1, இரும்பு, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட், ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.

எடை குறைய பச்சைப்பயறு சாப்பிடும் முறை

பச்சைப் பயறில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைப் பெறலாம். மேலும் இது தசைகள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நன்மை தருகிறது. பச்சைப்பயறு எளிதில் செரிமானம் அடைவதால் இதை மதிய உணவாகவும், இரவு உணவாகவும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Snacks For Weight Loss: ஸ்நாக்ஸ் சாப்பிட்டாலும் வெயிட் போடாம இருக்க ஈவ்னிங் இதெல்லாம் சாப்பிடுங்க

பச்சைப்பயறு சாலட்

பச்சைப்பயறை சாலட் வகைகளில் எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

  • காலையில் எழுந்த உடனேயே பச்சைப்பயறை கழுவி சுத்தம் செய்து 5 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின் இந்த நீரை வடிகட்டி ஊற வைத்த பச்சைப்பயிறை வெள்ளைத் துணியில் கட்டில் முளை கட்ட வைக்க வேண்டும்.
  • இவ்வாறு ஊறவைக்கும் போது சில துளிகள் தண்ணீரை துணியின் மீது தெளித்து விடலாம். இரவு தூங்கும் முன்பும் தண்ணீரை தெளிக்க வேண்டும்.
  • பின் மறுநாள் காலையில் முளைகட்டிய பச்சை பயறு கிடைக்கும். இதை ஆவியில் வேகவைத்து பின் தண்ணீர் சேர்த்து வேக வைத்தால் பச்சைப் பயறு குழைந்து விடும். தண்ணீரை வடிக்கும் போது ஊட்டச்சத்துக்களை இழப்பதால் போதுமானவரை பச்சைப்பயறை ஆவியில் வேக வைப்பது நல்லது.
  • அதன் பிறகு இதில் சாலட்டிற்குத் தேவையான பொருள்களைச் சேர்க்கலாம்.

இந்த வழிகளில் பச்சைப்பயறை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pori For Weight Loss: பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Pori For Weight Loss: பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்