Essential Tips To Prevent Hair Fall In Rainy Season: கோடை, மழை என எந்த காலத்திலும் முடி பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மழைக்காலம் அனைவரும் விரும்பக் கூடியதாக இருப்பினும், மக்கள் பல தரப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக முடி உதிர்வு அமைகிறது. மழைக்காலத்தில் முடி உதிர்வு ஏற்பட பல காரணங்கள் உண்டு. இந்த சூழ்நிலையில் மழைக்காலத்தின் போது முடி உதிர்வைத் தவிர்க்க உதவும் சில குறிப்புகளைக் காணலாம்.
பருவமழை மிகவும் தேவையான காலமாக இருப்பினும், நம்மில் பெரும்பாலானோர் தலைமுடியின் ஆரோக்கியத்தை அப்படியே வைத்திருப்பது கடினமான ஒன்றாக அமைகிறது. எனினும், மழைக்காலத்திலேயே அதிக சேதம் மற்றும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் மயிர்க்கால்கள் வலுவிழக்கப்பட்டு, அதிக உதிர்தலைக் கொண்டு வருகிறத். இதற்கு சரியான பராமரிப்பு முறைகளை மேற்கொள்வதன் மூலம் மழைக்காலத்தில் ஏற்படும் இந்த அதிகப்படியான முடி உதிர்வைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Oiling Hair Overnight: தூங்கும் முன் தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கம் உள்ளதா? இதன் தீமைகள் இங்கே!
மழைக்காலத்தில் முடி உதிர்வைத் தடுக்கும் வழிமுறைகள்
தலைமுடியை மென்மையாக வைப்பது
மழைக்காலத்தின் போது தலைமுடியை கவனமாகக் கையாள்வது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக முடி ஈரப்பதமாக இருக்கும் பட்சத்தில், அது உடையக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதே சமயம், முடியின் ஈரப்பதத்தைப் போக்குவதற்கு தீவிரமாக துலக்குதல் அல்லது கரடுமுரடான துண்டு உலர்த்துதலைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மாற்றாக, ஒரு மென்மையான துண்டு பயன்படுத்தி தலைமுடியை மெதுவாக தட்டவும். இது தவிர, முடிக்கு அகலமான சீப்பைப் பயன்படுத்துவது முடி உடைவதைக் குறைக்க உதவுகிறது.
உச்சந்தலை சுத்தமாக மற்றும் உலர்வாக வைத்திருப்பது
மழைக்காலத்தில் முடி உதிர்வு அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைவது ஈரமான உச்சந்தலையாகும். ஏனெனில், ஈரமான உச்சந்தலை பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கலாம். இதன் காரணமாக, முடியின் வேர்கள் பலவீனமடையலாம். எனவே அதிகப்படியான எண்ணெய் மற்றும் வியர்வையை அகற்ற மிதமான அளவு சல்பேட் அல்லது சுத்தமாக சல்பேட் இல்லாத ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவலாம். இவ்வாறு தலைமுடியை அலசுவது முடி மற்றும் உச்சந்தலையில் பூஞ்சை வளர்ச்சியைத் தடுத்து முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், மழைக்காலத்தின் போது முடி ஈரமாக இருக்கும் பட்சத்தில் அதைக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது வேர்களை மேலும் வலுவிழக்கச் செய்து முடி உடைவதை ஊக்குவிக்கலாம்.
மென்மையான கண்டிஷனர் பயன்பாடு
முடி ஈரப்பதமானது தலைமுடி உதிர்வை ஏற்படுத்துவதுடன், கட்டுப்படுத்த முடியாததாக மாற்றுகிறது. எனவே ஷாம்பு செய்த பிறகு மென்மையான கண்டிஷனரைப் பயன்படுத்தலாம். இது முடியின் மேற்புறத்தை மென்மையாக வைக்கவும், தலைமுடி உடைந்து போவதைத் தடுக்கவும் உதவுகிறது. இதற்கு முடியின் முனைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், முடி முனை மிகவும் வறண்டு, சேதமடைந்ததாக இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க மென்மையான ஹேர் கண்டிஷனர்களைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Hair Fall Prevention: முடி உதிர்வை எப்படி தடுப்பது?
தலைமுடியை மழைநீரிலிருந்து பாதுகாப்பது
மழைநீரானது சில தீங்கு விளைவிக்கும் மாசுக்களைக் கொண்டிருக்கலாம். இது தலைமுடியைப் பாதுகாப்பற்றதாக மாற்றி விடுகிறது. எனவே முடிந்த வரை மழைநீரில் தலையை நனைக்காமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. எனினும், மழையில் சிக்கினால், தலைமுடியை விரைவாகக் கழுவி அழுக்குகளை அகற்ற வேண்டும். இதன் மூலம் தொற்றினால் ஏற்படும் முடி பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த ஹேர் மாஸ்க்
முடி உதிர்வுக்குப் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாததும் காரணமாக இருக்கலாம். எனவே வாரத்திற்கு ஒரு முறை ஊட்டமளிக்கும் ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம் தலைமுடிக்கு ஆழமான கண்டிஷனிங் கிடைக்கும். இதற்கு இயற்கையான பொருள்களான எளிதில் கிடைக்கக் கூடிய தேங்காய் எண்ணெய், தேன் மற்றும் கற்றாழை போன்ற பொருள்களைக் கொண்டு ஹேர் மாஸ்க் தயார் செய்யலாம். இது தவிர, முட்டை, ஆலிவ் எண்ணெய், தயிர் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே ஹேர் மாஸ்க் செய்யலாம். இந்த ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் முடி ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் மாறுகிறது.
பூஞ்சை எதிர்ப்பு ஷாம்பு பயன்படுத்துதல்
மழைக்காலத்தில் ஈரப்பதம் காரணமாக ஏற்படும் உச்சந்தலை தொற்றைத் தவிர்க்க வாரம் ஒரு முறை பூஞ்சை எதிர்ப்பு ஷாம்பூவைப் பயன்படுத்தலாம். இவை உச்சந்தலையை சுத்தமாக வைக்க உதவுவதுடன், முடி வேர்களை வலுவிலக்கும் மற்றும் முடி உதிர்வை ஏற்படுத்தும் தொற்றுக்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. அதன் படி, ஜிங்க் பைரிதியோன் அல்லது தேயிலை மர எண்ணெய் போன்ற பொருட்களைக் கொண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்தலாம்.
இது போன்ற குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் மழைக்காலத்தில் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Monsoon Hair Care: மழைக்காலத்தில் முடிக்கு தேங்காய் எண்ணெய் தடவலாமா.? தெரிஞ்சிக்கலாம் வாங்க..
Image Source: Freepik