குளிக்கும்போது முடி உதிர்வது என்பது பலருக்கு இருக்கும் பிரச்சனை. இதற்கு நாம் செய்யும் சில தவறுகள் காரணமாக இருக்கலாம். இதற்கு தீர்வு காண முடியும்.
முடி உதிர்வு என்பது பலரையும் அதிகம் பாதிக்கும் பிரச்சனை. இதை தீர்க்க பல வழிகள் உள்ளன. இருந்தும் தீர்வு காண முடியாமல் பலரும் தவிக்கின்றனர். நம்மில் பலர் குளிக்கும்போது அதிக முடி உதிர்வதைக் காண்கிறோம்.

முடி உதிர்வு பிரச்சனையைச் சந்திக்காதவர்கள் கூட தலைமுடியைத் தேய்த்து குளிக்கும் போது உதிருவதை பார்த்திருப்பார்கள். நம்முடைய சிறிய கவனக்குறைவுதான் இந்த மாதிரியான பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.
இதை செய்யாதீங்க:
பலர் தலைமுடியைக் கட்டிக் கொண்டு குளிக்கச் செல்வார்கள், தண்ணீரில் முடியை நனைத்த பிறகு அவித்து விடுவார்கள் அல்லது முன்பை விட இறுக்கிக் கட்டிக்கொள்வார்கள். இதனால் கூந்தல் உதிரும் அபாயம் அதிகம்.
எனவே, குளிப்பதற்கு முன், உங்கள் தலைமுடியை சீவி, சிக்குகளை அகற்றிவிட்டு அலச வேண்டும். இல்லையெனில் முடி உதிர்வு வாய்ப்பு அதிகரிக்கும்.
இப்படி குளிக்காதீங்க:
நாம் குளிக்கும் முறையும் முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. சிலர் அதிக விசையுள்ள ஷவர் அல்லது ஓடும் தண்ணீரில் குளிக்கும் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இப்படி வேகமாக தண்ணீர் தெறிப்பது முடியின் வேர்களை வலுவிழக்கச் செய்யும். குறிப்பாக மயிர்கால்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கு, முடி உதிர்தல் பிரச்சனை இருமடங்காக அதிகரிக்கும்.
அதிக ஷாம்பு ஆபத்து:
தலைமுடியை சுத்தம் செய்ய நிறைய ஷாம்பு போட்டு குளிப்பவர்கள் உண்டு. குறிப்பாக ரசாயனங்கள் அடங்கிய ஷாம்பூக்களை அதிக அளவில் பயன்படுத்துவதும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் முடி மிகவும் வறண்டு போகும்.
ஷாம்பூவுடன் கண்டிஷனரை பயன்படுத்தாமல் இருந்தால் முடி உதிர்வதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வறண்ட மற்றும் பரட்டையான கூந்தலைக் கொண்டவர்கள் கன்டிஷனர் பயன்படுத்தாவிட்டால் முடி உடைதல், உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
தலைக்கு குளிப்பதில் அலட்சியம்:
பலர் தலைமுடியை அலசுவதில் மிகவும் அலட்சியமாக இருப்பார்கள். முடிக்கு அதிக அழுத்தம் கொடுத்து அழுத்தி தேய்த்து குளிப்பார்கள்.
தலைக்கு குளித்த பின்னர், ஈரத்தை உறிஞ்ச டவலால் வேகமாக உதறுவது, தட்டுவது போன்றவற்றைச் செய்வார்கள். இப்படி கூந்தலை மிகவும் கடினமாக கையாள்வது, அதனைப் பலவீனப்படுத்தும். இதனால் முடி உதிர்வது இயல்பானது.
Image Source: Freepik