குளிர் காலத்தில் உடலுக்கு எந்த வைட்டமின்கள் ரொம்ப முக்கியம்!

குளிர்காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ குறிப்பிட்ட வைட்டமின்கள் என்பது உடலுக்கு மிக மிக முக்கியம். குளிர்காலத்தில் உடலுக்கு எந்தெந்த வைட்டமின்கள் தேவை என்பது குறித்து பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
குளிர் காலத்தில் உடலுக்கு எந்த வைட்டமின்கள் ரொம்ப முக்கியம்!


பொதுவாக குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது குறைவாகவே இருக்கும். இந்த காலக்கட்டத்தில் பல வகை தொற்று நோய்கள் எளிதாக பரவக் கூடிய வாயப்புள்ளது. எனவே மழை மற்றும் குளிர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க குறிப்பிட்ட வைட்டமின்கள் என்பது மிக முக்கியம்.

பொதுவாக எந்த காலக்கட்டத்திலும் ஆரோக்கியமான உணவு முறை என்பது மிக மிக முக்கியமானதாகும். குளிர்காலத்தில் எந்தெந்த வைட்டமின்கள் உடலுக்கு தேவை, அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதிகம் படித்தவை: Curd Benefits: குளிர் காலத்தில் தயிர் சாப்பிடலாமா.?

குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள்

monxoon-vitamins

வைட்டமின் டி

சூரிய ஒளியில் வைட்டமின் டி இருக்கிறது. சூரிய ஒளி வைட்டமின், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவைக் கட்டுப்படுத்தி எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்டமின் சி

வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் அமிலம் என்பது நீரில் கரையக்கூடிய ஆக்ஸிஜனேற்றியாகும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது மற்றும் குளிர் காலத்திற்கான சிறந்த வைட்டமின்களில் ஒன்றாகும், இது உங்களை சூடாக வைத்திருக்க உதவுகிறது.

உடல் இயற்கையாகவே வைட்டமின் சியை உற்பத்தி செய்யாததால், ப்ரோக்கோலி, சிட்ரஸ் பழங்கள், இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற உணவுகள் மூலமாக வைட்டமின் சி பெறலாம்.

வைட்டமின் பி

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பி1 முதல் பி12 வரை ஆகியவை குளிர்காலத்தில் இன்றியமையாதவை ஆகும். பைரிடாக்சின் எனப்படும் வைட்டமின் பி6 குளிர்காலத்தில் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்குகிறது. B1 மற்றும் B2 போன்ற பி வைட்டமின்கள், மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவகிறது. மேலும் மனநிலை மற்றும் ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை ஆதரிக்கின்றன.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம்

குளிர் காலங்களில் ஒமேகா-3 மூளை ஆரோக்கியம் மற்றும் மனநிலை மேம்பாட்டிற்கு பங்களிக்கிறது, மனநலத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக, அவை உடல் வீக்கத்தைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் சக்திவாய்ந்த மூலமாக இருக்கிறது, இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இது சரும ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. நமது உடலால் அத்தியாவசியமான ஒமேகா-3 களை உற்பத்தி செய்ய முடியாது என்பதால், அவற்றை நமது உணவில் சேர்த்துக்கொள்வது மிக மிக முக்கியமானது.

இதையும் படிங்க: Drink for Weight Loss: துளியும் கஷ்டப்படாம உடல் எடையைக் குறைக்கணுமா? - இந்த 6 மேஜிக் பானங்கள குடிங்க!

குளிர்காலத்தில் மிக முக்கியமான வைட்டமின்

குளிர்காலத்தில் இந்த அனைத்து வைட்டமின்கள் முக்கியம் என்றாலும், வைட்டமின் சி என்பது இன்றியமையாத ஒன்றாகும். குளிர்காலத்தில் வைட்டமின் சி போதுமான அளவு உட்கொண்டால், குளிர் காற்றிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், முடி மற்றும் சருமத்தை அழகாக மாற்றும்.

image source: freepik

Read Next

Kidney health drinks: கிட்னி ஆரோக்கியமா இருக்க நீங்க இரவில் குடிக்க வேண்டிய பானங்கள் இதோ

Disclaimer

குறிச்சொற்கள்