Drink for Weight Loss: துளியும் கஷ்டப்படாம உடல் எடையைக் குறைக்கணுமா? - இந்த 6 மேஜிக் பானங்கள குடிங்க!

What drink is best for losing weight: ஜிம், டயட் என எந்தவித கஷ்டமும் இல்லாமல் உடல் எடையைக் குறைக்க விரும்பினால் இந்த 6 பானங்களை தினமும் ஒவ்வொன்றாக ட்ரை செய்து பாருங்கள். 
  • SHARE
  • FOLLOW
Drink for Weight Loss: துளியும் கஷ்டப்படாம உடல் எடையைக் குறைக்கணுமா? - இந்த 6 மேஜிக் பானங்கள குடிங்க!

தற்போது உலகம் முழுவதுமே உடல் எடையை குறைப்பது என்பது இப்போது பலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் போன்றவற்றால் அதிக எடையால் பலர் பாதிக்கப்படுகின்றனர். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் தினமும் ஜிம்மிற்கு சென்று கடினமாக வொர்க் அவுட் செய்வது, நீச்சல், ஜாக்கிங், வாக்கிங், டயட் போன்ற கடினமான பயிற்சிகள் தான் உள்ளன. ஆனால் அவையும் குறுகிய காலத்தில் பலன் தராது. ஆனால் உடல் எடையை உடனடியாக குறைக்க உதவக்கூடிய சில பானங்கள் குறித்து தற்போது அறிந்து கொள்ளுங்கள்.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால், கடுமையான உடற்பயிற்சிகளையும், கடுமையான உணவுக் கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. அவற்றுடன் இந்த பானங்களை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறையும்.

 எலுமிச்சை+இஞ்சி சாறு + தேன்:

எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு, தேன் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து காலையில் குடிக்கலாம். இஞ்சியில் உள்ள ஜின்கோரன் மற்றும் ஷோகல்ஸ் ஆகிய கலவைகள் உடலில் கொழுப்பு எரியும் செயல்முறைகளை பாதிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. இஞ்சி நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தேன் செரிமானத்திற்கு உதவுகிறது.

இதையும் படிங்க: Belly fat: தூங்கிக் கிட்டே தொப்பையைக் குறைக்க; தினமும் இரவு இத மட்டும் செய்யுங்க!

 

தண்ணீர்:

உடல் எடையை குறைக்க தண்ணீர் சிறந்த வழி. தண்ணீரில் கலோரிகள் இல்லை. அதிக தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது. தண்ணீர் குடிப்பது சராசரி எடையை 5.15 சதவீதம் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 தேன் + இலவங்கப்பட்டை:

தேன் மற்றும் இலவங்கப்பட்டை உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த வழியாகும். இதனை இரவில் குடிக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டையை ஒரு கப் வெந்நீரில் இரண்டு நிமிடம் ஊற வைத்து குடிக்கவும்.

இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது, கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உயிரியல் செயல்முறைகளை சீராக இயங்கச் செய்கின்றன.

இதையும் படிங்க: நீங்கள் நடக்கும் போது மூச்சுத் திணறுகிறதா? - இதைப் பாலோப் பண்ணுங்க!

 

இந்த காபியும் உதவும்:

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புல்லட் ப்ரூஃப் காபி எடையிழப்பிற்கு சிறந்தது எனக்கூறப்படுகிறது. இது உணவுப் பசியைக் கட்டுப்படுத்தவும், அதிகமாகச் சாப்பிடாமல் இருக்கவும் உதவுகிறது.

ஒரு கப் காபியில் ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இனிப்புக்காக வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்க்கலாம். இரண்டு நிமிடம் நன்றாக கலந்து குடிக்கவும்.

 சீரகம், எலுமிச்சை:

சீரகம், எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து செய்யப்படும் எளிய பானம். இது அதிகப்படியான கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது. மூன்று தேக்கரண்டி சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பிறகு எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு தேக்கரண்டி குடிக்கவும்.

Image Source: Freepik

Read Next

Maintaining Weight Loss: உடல் எடையை குறைத்த பிறகு மீண்டும் எடை அதிகரிப்பது ஏன்?

Disclaimer