Belly Fat Loss Drink: ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடையைக் குறைக்கும் சூப்பர் ட்ரிங் இதோ!

  • SHARE
  • FOLLOW
Belly Fat Loss Drink: ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடையைக் குறைக்கும் சூப்பர் ட்ரிங் இதோ!

இந்த பிரச்சனைகளுக்கு நாம் மருத்துவர்களை நாடி மருந்துகளை எடுத்துக் கொண்டாலும், அதிலும் சில பக்கவிளைவுகளைச் சந்திக்கும் சூழல் உண்டாகிறது. எனினும் பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும் போதே வீட்டிலேயே செய்யும் சில எளிய முறைகளின் உதவியுடன், எளிய பிரச்சனைகளிலிருந்து குணமாகி அவை மேலும் அதிகரிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்வாறு வீட்டிலேயே கையாளும் முறைகளைப் பயன்படுத்துவது எந்த வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாததாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weight loss: தொங்கும் தொப்பையை 7 நாளில் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் இதை குடியுங்க!

உடல் எடை அதிகரிப்பு

அந்த வகையில், இன்று சிறியவர்கள், பெரியவர்கள் என பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உடல் பருமன் அமைகிறது. இதற்கு முக்கியக் காரணமாக அமைவது ஆரோக்கியமற்ற உணவுமுறையும், மோசமான வாழ்க்கை முறையுமே ஆகும். ஆனால், இந்த உடல் பருமன் காரணமாக இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பிரச்சனை, அதிக கொழுப்பு மற்றும் உறக்கப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிலும் உடல் பருமன் காரணமாக சிலவகையான புற்றுநோய்களும் ஏற்படும் என்பது பலருக்கும் வருத்தமான விஷயமாக அமைகிறது.

இதில் சிலருக்கு உடல் எடை குறைப்பது மிகவும் சவாலான ஒன்றாக அமையலாம். அந்த வகையில் உடலமைப்பு, சுற்றுச்சூழல், உடற்பயிற்சியின்மை, மரபு என உடல் பருமன் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. இவ்வாறு உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் சிறிதளவு உடல் எடையைக் குறைத்தாலும் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் போன்ற அனைத்துமே உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் சில இயற்கையான வீட்டு வைத்தியங்களின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இந்த பானம் உடல் ஆரோக்கியத்திலும் பங்களிக்கிறது.

உடல் எடை குறைய பானம் தயார் செய்யும் முறை

தேவையானவை

  • ஓட்ஸ் – 2 ஸ்பூன்
  • ஆப்பிள் – 1 (நறுக்கியது)
  • சியா விதைகள் – ஒரு ஸ்பூன்
  • பட்டைப்பொடி – 1/4ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Night Drinks: வேகமா எடை குறைய நைட் தூங்கும் முன் இந்த பானங்களை எல்லாம் குடிங்க.

எடை குறைய பானம் தயாரிக்கும் முறை

  • பானம் தயார் செய்வதற்கு முதலில் ஓட்ஸ் மற்றும் சியா விதைகளைக் கொடுக்கப்பட்ட அளவில் எடுத்துக் கொண்டு 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  • ஒரு மிக்ஸி ஜார் ஒன்றில் நறுக்கிய ஆப்பிள், ஊறவைத்த ஓட்ஸ் மற்றும் சியா விதைகள், பட்டைப் பொடி மற்றும் எலுமிச்சைச் சாறு போன்ற அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது சுவையான உடல் எடையை வெகுவாகக் குறைக்கக் கூடிய பானம் தயாராகி விட்டது.
  • இந்த ஸ்மூத்தி வகை பானத்தை காலையில் வெறும் வயிற்றில் அப்படியே பருக வேண்டும். இதை ஒரு மாதம் தொடர்ந்து காலையில் குடித்து வர உடல் எடை ஒரு வாரத்தில் 5 கிலோ வரை குறையும் எனக் கூறப்படுகிறது.

இது தவிர ஆரோக்கிய உணவுகள் உட்கொள்வது, வழக்கமான உடற்பயிற்சிகள் மற்றும் போதிய உறக்கம் போன்றமுறையான் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது அவசியமாகிறது. இந்த பானத்தை அருந்துவதன் மூலம் தொப்பைக் கொழுப்பு கரைவதை நாம் எளிதாகக் காண முடியும்.

இது போன்ற ஆரோக்கியமான பானங்களை அருந்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். எனினும், இந்த பானம் செய்யத் தேவையான பொருள்கள் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தினால் இதைத் தவிர்ப்பது நல்லது. மேலும், எந்தவொரு புதிய உணவையும் எடுத்துக் கொள்ளும் முன்னதாக நிபுணரின் ஆலோசனை பெறுவதன் மூலம் தீவிர பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Drink: எடை இழப்புக்கு வெறும் வயிற்றில் நீங்க குடிக்க வேண்டிய பானங்கள்

Image Source: Freepik

Read Next

Nayanthara Diet Plan: 39 வயதிலும் சிக்குனு ஃபிட்டான உடல்.! சீக்ரெட் உடைத்த நயன்தாரா..

Disclaimer

குறிச்சொற்கள்