இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும். இந்நிலையில் குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இது பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது மூளை ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் என உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமாகும். இதில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் குறிப்புகள் குறித்து இரைப்பை குடல் மருத்துவர் சௌரப் சேத்தி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் குறிப்புகள்
கழிப்பறையில் அதிக நேரம் செலவிடாதீர்கள்
கழிப்பறையில் 10 நிமிடங்களுக்கு அதிகமாக உட்கார்ந்து தள்ளுவது மூல நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. அமெரிக்காவில் 20 பெரியவர்களில் 1 பேருக்கு இது ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. நார்ச்சத்து போதுமானதாக இல்லாவிட்டால், இடுப்புத் தள சிகிச்சை உதவும் என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, நீண்ட நேரம் சிரமப்படுவதையோ அல்லது கழிப்பறையில் உட்கார்ந்திருப்பதையோ தவிர்க்க வேண்டும். குறிப்பாக 10 நிமிடங்களுக்கு மேல் இவ்வாறு உட்கார்ந்திருக்கக்கூடாது. இதுவே மூல நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
இந்த பதிவும் உதவலாம்: Gut Health + Liver Care: ஹார்வர்ட் டாக்டர் பகிரும் 10 இரவு உணவுகள்..
"சாதாரணமானது" என்ன என்பதை அறிந்து கொள்வது
நிபுணரின் கூற்றுப்படி,”ஆரோக்கியமான குடல் பழக்கம் வாரத்திற்கு 3 முறை முதல் ஒரு நாளைக்கு 3 முறை வரை இருக்கும் (ரோம் IV அளவுகோல்). மிக முக்கியமானது ஆறுதல், அதிர்வெண் அல்ல” என்று கூறுகிறார். அதாவது ஆரோக்கியமான குடல் பழக்கத்திற்கு ஆறுதலில் கவனம் செலுத்த வேண்டும்.
வலி நிவாரணிகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்வது
“அடிக்கடி NSAID பயன்பாடு (இப்யூபுரூஃபன், நாப்ராக்ஸன், ஆஸ்பிரின்) இரைப்பை குடல் இரத்தப்போக்கு அபாயத்தை 4 மடங்கு வரை அதிகரிக்கும் மற்றும் குடல் புறணியை சேதப்படுத்தும்” என அறிவுறுத்துகிறார். அதாவது இந்த வகை வலி நிவாரணிகளை அடிக்கடி பயன்படுத்துவதால் இரத்தப்போக்கு கணிசமாக அதிகரிக்கக்கூடும். எனினும் இவை அடிக்கடி தேவைப்பட்டால், பாதுகாப்பான விருப்பங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை பானங்கள் மற்றும் மிகவும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியைக் குறைப்பது
நிபுணரின் கூற்றுப்படி, குடல் ஆரோக்கியத்திற்கு சர்க்கரை பானங்கள் மற்றும் மிகவும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைக் குறைப்பது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய தரைக்கடல் உணவைப் பின்பற்றுவது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை தோராயமாக 18% குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: நல்ல செரிமானத்திற்கு உங்க உணவில் சேர்க்க வேண்டிய 7 உணவுகள் இதோ! டாக்டர் தரும் டிப்ஸ்
நார்ச்சத்து நிறைந்த, மாறுபட்ட உணவை உண்ணுவது
நிபுணரின் கூற்றுப்படி, “சராசரி அமெரிக்கர்கள் ஒரு நாளைக்கு ~15 கிராம் பெறுகின்றனர். இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதாவது 25-38 கிராம்/நாளை விட மிகக் குறைவு ஆகும்”. குடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை குடல் நுண்ணுயிரிகளுக்கு உணவளிக்க மிகவும் முக்கியமானதாகும். அதே சமயம், போதுமான நார்ச்சத்து உட்கொள்ளல் இல்லாததால் சில வகையான குடல் நுண்ணுயிரிகளை இழப்பது மீள முடியாததாக இருக்கலாம். ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை பராமரிக்க நார்ச்சத்து நிறைந்த மற்றும் மாறுபட்ட உணவை உட்கொள்வது முக்கியமாகக் கருதப்படுகிறது.
View this post on Instagram
துர்நாற்றம் வீசும் வாயுவைப் பொறுத்தவரை, பெப்டோ உதவும்
பிஸ்மத் சப்சாலிசிலேட் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் 95%+ சல்பைட் வாயுக்களை நடுநிலையாக்க முடியும். மேலும் பயணிகளின் வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவுகிறது. இதை குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அதாவது பெப்டோ-பிஸ்மால் போன்ற தயாரிப்புகளில் காணப்படக்கூடிய பிஸ்மத் சப்சாலிசிலேட், துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய 95% க்கும் மேற்பட்ட சல்பைட் வாயுக்களை நடுநிலையாக்குகிறது.
குடல் ஆரோக்கியத்திற்கான விதைகள்
1-2 தேக்கரண்டி சியா, ஆளி விதை அல்லது துளசி விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஆதரிக்க உதவுகிறது. இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இவை சீரான செரிமானத்தை வழங்கும் ப்ரீபயாடிக்குகளை வழங்குகிறது. எனவே அன்றாட உணவில் இந்த குடல் நட்பு விதைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
மருத்துவர் பரிந்துரைத்த இந்த குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் நம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆதரிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியத்துக்காக டாக்டர் பால் பரிந்துரைத்த 5 ஹெல்தி ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.. ரெசிபியுடன்.!
Image Source: Freepik