What does dark circle under the eyes mean: நம் அன்றாட வாழ்வில் நாம் பலதரப்பட்ட உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளைச் சந்திக்கிறோம். அதில் ஒன்றாகவே கருவளையங்கள் அமைகிறது. கண்களின் கீழ் கருவளையங்கள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக, இரவு நேரத்தில் அதிகப்படியான திரைப்பயன்பாட்டின் காரணமாக கருவளையங்கள் ஏற்படுகிறது. இன்றைய பிஸியான கால கட்டத்தில் பலரும் நாள் முழுவதும் மொபைல் போன்கள், லேப்டாப், கணினி போன்ற திரை பயன்பாடுகளின் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர். அதிலும் இரவு நேரத்தில் பணி செய்வது பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இது தவிர, இரவு தூங்கும் முன்பாக மொபைல் பார்ப்பது ஒரு அன்றாட பழக்கமாக மாறிவிட்டது. ஆனால், இவை தூக்க ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது. இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக கருவளையங்கள் அமைகிறது. இந்த கருவளையங்களைப் போக்குவதற்கு, பலரும் பல்வேறு வீட்டு வைத்திய முறைகளைக் கையாள்கின்றனர். இதில் கருவளையங்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இதில் காண்போம்.
கருவளையங்கள் ஏற்பட காரணங்கள்
பொதுவாக, கருவளையங்கள் ஏற்படுவதற்கு மரபியல், வயது, தூக்கமின்மை, ஒவ்வாமை, நீரிழப்பு, சூரிய ஒளி, சத்துக்கள் குறைபாடு, புகைபிடித்தல், மற்றும் சில மருத்துவ நிலைகள் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இது பெரும்பாலும் கண்களுக்குக் கீழே உள்ள பகுதியில் உள்ள சருமத்தின் நிறமிகள் அதிகரிப்பதாலும், தோல் மெலிந்து சுருக்கங்கள் ஏற்படுவதாலும் தோன்றுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: கருவளையம் சீக்கிரம் மறையணுமா? இந்த ஒரு ரெமிடி மட்டும் யூஸ் பண்ணுங்க
ஆனால், இந்த கருவளையங்களைப் போக்குவதற்கு ஏராளமான வீட்டு வைத்திய முறைகள் உதவுகின்றன. எனினும், இந்த வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தியும் சில சமயங்களில் இந்த கருவளையங்கள் மறையாமல் போகலாம். நிபுணரின் கூற்றுப்படி, “எல்லா கருவளையங்களும் ஒரே மாதிரி இருக்காது! நீங்கள் சீரற்ற தீர்வுகளை முயற்சி செய்தும் எதுவும் பலனளிக்கவில்லை என்றால், ஒருவேளை நீங்கள் தவறான வகைக்கு சிகிச்சை அளிக்கிறீர்கள்” என்று தனது பதிவைத் தொடங்கியுள்ளார்.
கருவளையங்கள் வகைகள் மற்றும் அதைத் தடுக்கும் முறைகள்
நிறமி கருவளையங்கள்
இது மரபியல், சூரிய ஒளி அல்லது கண்களைத் தேய்த்தல் போன்றவற்றின் காரணமாக மெலனின் படிவதால் ஏற்படக்கூடிய பழுப்பு/சாம்பல் நிறத்தைக் குறிக்கக் கூடியதாகும் என்று கூறினார். அதாவது மெலனின் படிவதால் ஏற்படக்கூடிய கருவளையங்கள் நிறமி கருவளையங்கள் எனப்படுகிறது. இந்த கருவளைய பிரச்சனையை ஊட்டச்சத்துக்களுடன் சரி செய்யலாம்.
தேவையான ஊட்டச்சத்துக்கள்
- வைட்டமின் சி நிறைந்த அதாவது ஆம்லா, கொய்யா மற்றும் குடை மிளகாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வது சரும பழுதுபார்ப்பை அதிகரிக்கிறது.
- அதே போல, வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எள் விதைகள், பாதாம் போன்ற உணவுகளை சாப்பிடுவது அதிகப்படியான நிறமியைத் தடுக்க உதவுகிறது.
வாஸ்குலர் கருவளையங்கள்
நிபுணரின் கூற்றுப்படி, இந்த வகை கருவளையங்கள் மெல்லிய தோல், மோசமான சுழற்சி அல்லது இரும்புச்சத்து குறைபாடு காரணமாக நீலம் அல்லது ஊதா நிறத்தில் ஏற்படக்கூடியதாகும். அதாவது இந்த வகையில் கண்களுக்குக் கீழே உள்ள மெல்லிய தோல், இரத்த ஓட்டம் குறைவதாலோ அல்லது திரவம் தக்கவைப்பதாலோ, கீழ் நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களை அதிகமாகத் தெரியும்படி செய்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: போமாட்டேன்னு பிடிவாதம் பண்ணும் கருவளையங்கள்.. அடிச்சி விரட்டும் ரெமிடிஸ் இங்கே..
தேவையான ஊட்டச்சத்துக்கள்
- கறிவேப்பிலை, பீட்ரூட், முருங்கைக்காய், சாலியா விதைகள் போன்றவை இரும்புச்சத்து நிறைந்த உணவுகளாகும். இவை இரும்புச்சத்து நிறைந்ததாகும்.
- எலுமிச்சை, கொய்யா, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகள் இரும்புச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது.
View this post on Instagram
கட்டமைப்பு கருவளையங்கள்
இந்த கருவளையங்கள் ஆனது கொலாஜன் இழப்பு, வயதானது அல்லது திடீர் எடை இழப்பு காரணமாக கண்களுக்குக் கீழே வெற்று, நிழலான நிறம் ஏற்படுவதாகும். கண்களுக்குக் கீழே உள்ள வெற்றுப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட நிழல்கள் கருவளையங்களைக் குறிக்கிறது.
தேவையான ஊட்டச்சத்துக்கள்
எலும்பு குழம்பு, எள், ஆளி விதை, ஊறவைத்த வால்நட்ஸ் போன்ற கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் (சிட்ரஸ் பழங்கள் + பூசணி விதைகள்) கலவைகள் கொலாஜன் தொகுப்பை ஊக்குவிக்கிறது.
சருமத்தை சரிசெய்ய கிளைசின் நிறைந்த சூப்கள் அதாவது கோழி குழம்பு, மட்டன் பாயா போன்றவற்றைச் சேர்க்கலாம்.
குறிப்பு
கருவளையங்களைக் குணப்படுத்துவதற்கான தீர்வு அனைவருக்கும் பொருந்தாது. எனவே கருவளைய வகையை அடையாளம் கண்டு, இயற்கையாகவே குணமடைவதற்கான முதல் படியாக உணவை அனுமதிக்க வேண்டும்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: நீரேற்றமாக வைப்பது கண்களின் கருவளையங்களைக் குறைக்க உதவுமா? நிபுணர் தரும் விளக்கம்
Image Source: Freepik