$
How to remove blackness around mouth naturally at home: பருக்கள் இல்லாத, கருமையில்லாத வெண்மையான, பளபளப்பான சருமத்தைப் பெற யார் தான் விரும்ப மாட்டார்கள். இதில் வாயைச் சுற்றி கருமையாக அழகைக் கெடுப்பதாக அமைகிறது. இதிலிருந்து விடுபடவும், இதை தற்காலிகமாக மறைக்கவும் சிலர் ஒப்பனையைப் பயன்படுத்துவர். இன்னும் சிலர் இதைத் தவிர்க்க சந்தைகளில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்துவர். ஆனால், சில சமயங்களில் இதில் இரசாயனங்கள் கலந்திருக்கலாம். இவை சருமத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்.
இந்த சூழ்நிலையில், வாயைச் சுற்றி இருக்கும் கருமையை நீக்குவதற்கு இயற்கையான முறைகளைப் பயன்படுத்தலாம். அதன் படி, சரியான பொருட்கள் மற்றும் சிறிதளவு நிலைத்தன்மையுடன், வாயைச் சுற்றியுள்ள தோலின் நிறத்தை மீட்டெடுக்க முடியும். இதில் தோல் பராமரிப்பில் உதடுகளைச் சுற்றியுள்ள பகுதியை பிரகாசமாக்குவதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளது. இதில் சரும பராமரிப்பில் வாயைச் சுற்றியுள்ள கருமையினை நீக்க உதவும் எளிய முறைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தண்ணீரில் இந்த ஒரு பொருள் கலந்து குடிச்சி பாருங்க! சருமம் சும்மா அப்படி ஜொலிக்கும்
வாயை சுற்றி கருமை வர காரணம்
வாயைச் சுற்றி நிறமி மற்றும் நிறமாற்றம் அடிக்கடி ஏற்படுவதற்கான காரணம் ஹைப்பர் பிக்மென்டேஷன் எனக் கூறப்படுகிறது. ஹைப்பர் பிக்மென்டேஷன் பாதிப்பில்லாதது எனினும், மிகவும் எரிச்சலூட்டலாம். மேலும், வாயைச் சுற்றியுள்ள சருமம் மென்மையாக இருப்பதால், இது சேதமடைய அதிக வாய்ப்புள்ளது. இதில் கரும்புள்ளிகள் உருவாவதற்கான காரணம் அதிகளவு மெலனின் ஆகும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், சூரிய ஒளி, காலநிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாயைச் சுற்றி அதிக அளவு மெலனின் ஏற்படுகிறது.

வாயை சுற்றியுள்ள கருமை நீங்க உதவும் வீட்டு வைத்தியம்
கற்றாழை ஜெல்
இது மருத்துவ குணங்கள் கொண்ட சிறந்த தாவரமாகும். பொதுவாக கற்றாழை ஆக்ஸிஜனேற்ற மற்றும் வைட்டமின்களால் நிறைந்தது. இது ஹைப்பர் பிக்மென்டேஷனிலிருந்து விடுபட உதவுகிறது. இதற்கு புதிய கற்றாழை ஜெல்லை எடுத்து, அதை படுக்கைக்கு முன் கருமையான இடத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் இயற்கையான நிறத்தை மேம்படுத்தவும், கருமையை குறைக்கவும் முடியும்.
உருளைக்கிழங்கு சாறு
இது கருமையான பகுதிகளை ஒளிரச் செய்ய உதவும் சிறந்த தேர்வாக அமைகிறது. இதற்கு ஒரு சிறிய உருளைக்கிழங்கை அரைத்து, அதன் சாற்றை பிழிந்து கொள்ள வேண்டும். இந்த சாற்றை ஒரு காட்டன் பேடைப் பயன்படுத்தி, வாயைச் சுற்றியுள்ள சருமத்தில் தடவலாம். இதை 15 முதல் 20 நிமிடங்கள் வைத்து, பிறகு கழுவலாம். இந்த உருளைக்கிழங்கு சாறு மென்மையானதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: மென்மையான, அழகான பாதங்கள் வேண்டுமா? இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க
மஞ்சள்
சருமத்திற்கு மஞ்சள் பயன்படுத்துவது ஆரோக்கியமான ஒன்றாகும். மஞ்சளை பாலுடன் இணைத்து பயன்படுத்துவது சருமத்தின் நிறமியை ஒளிரச் செய்கிறது. மேலும் சருமத்தை மென்மையாக்கவும் உதவுகிறது. இதற்கு ஒரு டீஸ்பூன் மஞ்சளை போதுமான பாலுடன் கலந்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இதை வாயைச் சுற்றியுள்ள கருமையான பகுதியில் தடவி, சுமார் 10 நிமிடங்கள் வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சிறந்த முடிவுகளைப் பெற வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை செய்யலாம்.

வெள்ளரி துண்டுகள்
வெள்ளரிக்காய் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டுவதாக அமைகிறது. இது இயற்கையான சருமத்தை பிரகாசமாக வைக்க உதவுகிறது. அதன் படி, தினமும் வாயைச் சுற்றியுள்ள இருண்ட பகுதியில் வெள்ளரிக்காயின் துண்டுகளை சில நிமிடங்களுக்குத் தேய்க்க வேண்டும். இது சருமத்தை ஒளிரச் செய்வதுடன் மட்டுமின்றி, நீரேற்றமாக வைப்பதுடன், சீரான மற்றும் மிருதுவான சருமத்தை வழங்குகிறது.
கடலை மாவு
சருமத்திற்கு கடலை மாவு பயன்படுத்துவது சருமத்தை சுத்தமாக வைப்பதுடன், அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி இயற்கையாகவே ஒளிரச் செய்கிறது. இதற்கு ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் சிறிது பச்சை பால் சேர்த்து ஸ்க்ரப் மாஸ்க் செய்யலாம். இதைப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி, வழக்கமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு வீட்டிலேயே எளிமையான முறையில் இயற்கையாகவே வாயைச்சுற்றியுள்ள கருமையை நீக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Beetroot Skin Benefits: பளிச்சென்ற முகத்திற்கு பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணி பாருங்க!
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version