தண்ணீரில் இந்த ஒரு பொருள் கலந்து குடிச்சி பாருங்க! சருமம் சும்மா அப்படி ஜொலிக்கும்

  • SHARE
  • FOLLOW
தண்ணீரில் இந்த ஒரு பொருள் கலந்து குடிச்சி பாருங்க! சருமம் சும்மா அப்படி ஜொலிக்கும்

சீரகத்தின் ஊட்டச்சத்துக்கள்

சீரகம் ஊறவைக்கப்பட்ட அல்லது சீரகம் சேர்த்து கொதிக்க வைக்கப்பட்ட நீரில் வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இந்த நீர் அருந்துவது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாக மற்றும் தெளிவாக வைக்கவும் உதவுகிறது. இந்த கலவையானது முகப்பரு முதல் முன்கூட்டிய முதுமை வரை பல்வேறு சரும பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது. இது அழகு பராமரிப்பின் சிறந்த கூடுதலாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Beetroot Skin Benefits: பளிச்சென்ற முகத்திற்கு பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணி பாருங்க!

சீரகத் தண்ணீர் குடிப்பதால் சருமத்தில் ஏற்படும் நன்மைகள்

சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க

சரும ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு நீரேற்றம் அவசியமாகும். இது சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. இது சருமத்திற்கு நீரேற்றத்தைத் தருவதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.

சரும நச்சுக்களை நீக்குவதற்கு

சீரகத் தண்ணீரானது ஒரு இயற்கை நச்சு நீக்கியாக அமைகிறது. இது உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி செரிமான மேம்பாட்டிற்கும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இவ்வாறு சருமத்தின் தோற்றம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முன்கூட்டிய வயதைத் தடுக்க

சீரக விதைகளில் நிறைந்திருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் போன்ற வயதான அறிகுறிகளைத் தாமதப்படுத்த உதவுகிறது. இந்த நீரை அருந்துவது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி, ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hemp Seed Oil: பளபளப்பான சருமத்திற்கு சணல் விதை எண்ணெய் தரும் மகிமைகள்!

நிறமியைக் குறைக்க

சீரக விதைகளில் சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகள் நிறைந்துள்ளது. எனவே இவை சருமத்தில் தோன்றும் நிறமிகள், கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை மறைக்கிறது. ஜீரா நீரைத் தொடர்ந்து உட்கொள்வது சருமத்தின் நிறத்தை சமன் செய்து, சருமத்தை இளமையாக மற்றும் மென்மையாக வைக்கிறது.

முகப்பருவைக் குறைக்க

சீரக விதைகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை வீக்கமடைந்த சருமத்தை ஆற்றவும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே இந்த ஜீரா தண்ணீரைத் தொடர்ந்து குடிப்பது, சருமத்தை உள்ளே இருந்து சுத்தப்படுத்தவும், பருக்களைக் குறைக்கவும் உதவுகிறது.

சீரக தண்ணீரை தயாரிப்பது எப்படி?

சீரகத் தண்ணீரை இரண்டு வழிகளில் தயார் செய்யலாம்.

  • ஒரு தேக்கரண்டி சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பிறகு காலையில் வெறும் வயிற்றில் இந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
  • ஒரு தேக்கரண்டி சீரகத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதை ஆறவைத்து, பிறகு நாள் முழுவதும் குடிக்க வேண்டும்.

இவ்வாறு சீரகத் தண்ணீரை அருந்துவதன் மூலம் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மென்மையான, அழகான பாதங்கள் வேண்டுமா? இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Peel Off Mask: பீல் ஆஃப் மாஸ்க் பயன்படுத்துவது உண்மையில் சருமத்திற்கு நல்லதா?

Disclaimer