How To Use Hemp Seed Oil For Skin And Its Benefits: பெரும்பாலும் சணல் விதை எண்ணெய், சணல் எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சணல் விதை எண்ணெய் சரும பராமரிப்பில் ஒரு அற்புதமான மூலப்பொருளாகப் பயன்படுகிறது. இது எந்த வகையான சருமத்திற்கும் பல நன்மைகளைத் தரக்கூடியதாகும். இதன் பெயர் குறிப்பிடுவது போல, சணல் தாவர விதைகளிலிருந்து பெறப்பட்டதாகும். இது சணல் செடியின் பூக்கள் மற்றும் இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயாகும். இந்த எண்ணெய் பயன்படுத்த முற்றிலும் பாதுகாப்பானதாகும்.
சருமத்திற்கு சணல் விதை எண்ணெய் தரும் நன்மைகள்
ஒவ்வொரு தோல் வகைக்கும் சணல் எண்ணெய் சரும பராமரிப்புக்கு ஏற்றதாக அமைகிறது. இதில் சருமத்திற்கு சணல் விதை எண்ணெய் தரும் நன்மைகளைக் காணலாம்.
எண்ணெய் சருமத்திற்கு ஏற்ற எண்ணெய்
சணல் விதையிலிருந்து தயாரிக்கப்படும் சணல் விதை எண்ணெய் எண்ணெய் சருமத்தில் பல்வேறு அதிசயங்களைச் செய்கிறது. ஏனெனில், இது சருமத் துளைகளை அடைக்காமல் நீரேற்றமாக வைக்க உதவுகிறது. இந்த சணல் விதை எண்ணெய் முகத்தில் தோன்றும் வெடிப்புகள், முகப்பரு போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Avocado Oil For Skin: சருமத்தை வெண்மையாக்க உதவும் வெண்ணெய் எண்ணெய். எப்படி பயன்படுத்தலாம்?
வறண்ட சருமத்திற்கு ஏற்ற எண்ணெய்
இந்த சணல் விதை எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த எண்ணெயை வறண்ட சருமத்தில் பயன்படுத்துவது, சருமத்தை ஆழமாக வளர்த்து உலர்த்தாமல் பாதுகாக்கிறது. மேலும் சணல் விதை எண்ணெய் அரிப்பு போன்றவற்றிற்கு சிறந்த மூலப்பொருளாகக்கருதப்படுகிறது. மேலும் இது சருமத்தின் வறட்சி மற்றும் எரிச்சலைக் குறைக்கிறது.
முதிர்ந்த சருமத்திற்கு சணல் விதை எண்ணெய்
சணல் விதை எண்ணெயில் வைட்டமின் எஃப் மற்றும் ஒலிக் மற்றும் லினோலிக் அமிலங்கள் போன்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை சருமத்தில் முதுமை அறிகுறிகளைத் தடுக்கவும், மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
சூரிய பாதிப்பிலிருந்து விடுபட
சணல் விதை எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்வீச்சுக்களிலிருந்து பாதுகாக்கிறது. இது சருமத்தின் ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Karanja Oil Benefits: சருமப் பொலிவு, முடி வளர்ச்சி இரண்டுக்கும் இந்த ஒரு எண்ணெய் போதும்
தாடி வளர்வதற்கு சணல் விதை எண்ணெய்
சணல் விதை எண்ணெயில் நிறைந்துள்ள கொழுப்பு அமிலங்கள் முடியை வலுப்படுத்த உதவுகிறது. இவை தாடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், இது முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
அடோபிக் டெர்மடிடிஸுக்கு சிகிச்சையளிக்க
இந்த எண்ணெயில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடோபிக் டெர்மடிடிஸ்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. எனினும், இதற்கான சிறந்த சிகிச்சையைக் கண்டறிய முதலில் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
சணல் விதை எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது?
சணல் விதை எண்ணெய் ஆனது உலர்ந்த எண்ணெயாகக் கருதப்படுகிறது. இவை சருமத்தில் விரைவாக உறிஞ்சப்பட்டு, சரும பராமரிப்பில் உதவுகிறது. சருமத்திற்கு சணல் விதையை தோல் பராமரிப்புப் பொருள்களாக அல்லது சணல் விதை எண்ணெயாக பயன்படுத்தலாம். இதில் ஆண்களுக்கு தாடி வளர எவ்வாறு சணல் விதை எண்ணெயைப் பயன்படுத்துவது என்பது குறித்து காணலாம்.
- தாடி வளர வேண்டிய இடத்தில் சருமத்தை சுத்தப்படுத்திய பிறகு, ஈரப்பதமாக்குவதற்கு முன், சருமத்தில் சில துளிகள் எண்ணெயை மசாஜ் செய்ய வேண்டும்.
- மாய்ஸ்சரைசருடன் இரண்டு துளிகள் சணல் எண்ணெயைக் கலக்க வேண்டும்.
- தாடியில் சில துளிகள் எண்ணெயை தடவ வேண்டும்.
இவ்வாறு சணல் விதை எண்ணெயை சருமத்திற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Coconut Oil For Skin: முகம் கண்ணாடி போல ஜொலிக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருள்களைச் சேர்த்து பயன்படுத்துங்க
Image Source: Freepik