$
Avocado Oil Benefits for Skin: பல்வேறு தோல் பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் விதமாக பலரும் இயற்கையான மற்றும் பயனுள்ள தீர்வுகளையே விரும்புகிறார்கள். அந்த வகையில் இயற்கையான தீர்வாக சருமத்திற்கு ஊட்டமளிக்கும் நன்மைகளை அவகேடோ பழம் கொண்டுள்ளது. இவை சருமத்திற்குத் தேவையான அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கத்தையும், ஈரப்பதமூட்டும் பண்புகளையும் கொண்டுள்ளது.
அவகேடோ பழத்திலிருந்து தயாரிக்கப்படும் அவகேடோ ஆயில், சருமத்தை வெண்மையாக்குவதுடன் மென்மையான மற்றும் பொலிவான நிறத்தைப் பெற உதவுகிறது. இதில் சரும ஆரோக்கியத்திற்கும், இயற்கையாக சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் அவகேடோ எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Lip Oil: இந்த குளிருல வறண்டு போன உதட்டுக்கு லிப் ஆயில் தயாரிப்பது எப்படி?
சருமத்திற்கு அவகேடோ எண்ணெய் தரும் நன்மைகள்
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும், இயற்கையாக சருமத்தை அழகாக வைத்திருக்கவும் அவகேடோ எண்ணெய் உதவுகிறது.
வயதான அறிகுறிகளைக் குறைக்க
அவகேடோ ஆயிலில் வைட்டமின் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை சேதம் செய்யும் ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சரும செல்களை மீளுருவாக்கம் செய்து, முதிர்வடைவதற்கான அறிகுறிகளைக் குறைப்பதுடன், இளமைப் பொலிவைத் தருகிறது.

சரும ஈரப்பதத்திற்கு
அவகேடோ எண்ணெய் இயற்கையாகவே மென்மையாக்கும் திறனைக் கொண்டுள்ளது. இவை சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது. மேலும், ஈரப்பத இழப்பு ஏற்படுவதைத் தடுத்து பாதுகாப்புத் தடையாக அமைகிறது. இந்த அவகேடோ எண்ணெயில் உள்ள ஒலிக் அமிலம், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் போன்றவை சருமத்தை மென்மையாகவும், நீரேற்றமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
முகப்பருவைத் தடுக்க
அவகேடோ எண்ணெயில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை சருமத்தில் ஏற்படும் வீக்கம், அரிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்த உதவுகிறது. காயங்கள் மற்றும் சிறிய தோல் எரிச்சல்களைக் குணப்படுத்தவும் அவகேடோ ஆயில் உதவுகிறது. இது தோல் பராமரிப்பின் வழக்கத்திற்கு சிறந்த கூடுதல் வழியாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Pigmentation Removal Tips: முகத்தில் கருந்திட்டுகள் அதிகமா இருக்கா? இந்த ஒரு பொருள் போதும்
தோலழற்சியை சமாளிக்க
அவகேடோ பழம் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்ததாகவும் அமைவதால், இவற்றை வறண்ட மற்றும் மெல்லிய சருமத்திற்கு பயன்படுத்தலாம். சருமத்தில் சொரியாசிஸ் மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்றவற்றால் ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை நீக்க அவகேடோ எண்ணெய் உதவுகிறது. இவை எரிச்சலைத் தணித்து, நீரேற்றம் செய்கிறது.

சூரிய வெப்பத்தைத் தணிக்க
அவகேடோ எண்ணெயில் வைட்டமின் டி, ஈ, புரதம் மற்றும் லெசித்தின் போன்றவை நிறைந்துள்ளன. இவை சூரியக் கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் தோல் எரிச்சல், சிவத்தல் போன்ற வெயிலின் அறிகுறிகளை எளிதாக்குகிறது.
உச்சந்தலை மற்றும் நகங்களுக்கு
அவகேடோ ஆயில் உலர்ந்த மற்றும் உடையக்கூடிய நகங்களின் மேம்பாட்டிற்கு உதவுகிறது. இந்த எண்ணெய் நகங்களைச் சுற்றியுள்ள சருமத்தை மென்மையாக வைக்கவும். நகங்கள் உடைவதைத் தடுக்கவும் உதவுகிறது. இந்த ஆயில் மாஸ்க் தலைமுடிக்கு பயன்படுத்துவது பொடுகு பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. இவை உச்சந்தலையில் ஈரப்பதத்தை அளிப்பது முடிக்கு நன்கு ஊட்டமளிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Dark Elbows Remedies: இந்த பொருள் போதும். இரண்டே வாரத்தில் முழங்கை கருமையை போக்கலாம்
Image Source: Freepik