Is it good to apply coconut oil on face before sleeping: சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பலரும் பலதரப்பட்ட சரும பராமரிப்பு முறைகளைக் கையாள்கின்றனர். ஆனால், மோசமான உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக சரும எரிச்சல், வறட்சியான சருமம், தோல் வெடிப்பு, கரும்புள்ளிகள், கொப்புளங்கள் போன்ற பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பலரும் கடுமையான இரசாயனங்கள் நிறைந்த பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் அல்லது பார்லருக்குச் சென்று சருமத்தை அழகாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், இது உண்மையில் பலனளிக்குமா என்பதை நீங்கள் சிந்தித்ததுண்டா?
ஆம். இந்த சரும பராமரிப்பு முறைகள் சில சமயங்களில் மேலும் சில கூடுதல் சரும பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே இதைத் தவிர்க்க இயற்கையான முறைகளைக் கையாள்வது நல்லது. அந்த வகையில் சரும பராமரிப்பு வழக்கத்தில் எண்ணெய்கள் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவ்வாறு நாம் தலைமுடிக்கு பழங்காலத்திலிருந்தே தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இது சருமத்திற்கும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் சருமத்திற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Coconut Oil For Skin: முகம் கண்ணாடி போல ஜொலிக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருள்களைச் சேர்த்து பயன்படுத்துங்க
முகத்திற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லதா?
பொதுவாக தேங்காய் எண்ணெய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்டதாகும். இது முடி பராமரிப்பு வழக்கத்திற்கு மட்டுமல்லாமல், சரும பராமரிப்பு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலமே காரணமாகும். மேலும், இதில் ஆண்டிமைக்ரோபியல் தன்மை நிறைந்துள்ளது. இந்த பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி அதைக் கொல்ல உதவுகிறது. மேலும், தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் சருமத்திற்கு சக்திவாய்ந்த ஈரப்பதமூட்டும் முகவராகவும் அமைகிறது.
முகத்தில் தேங்காய் எண்ணெயைத் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
சரும அழற்சியைக் குறைக்க
தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இது பெரும்பாலும் அழற்சி தோல் நிலைகளை குணப்படுத்த உதவுகிறது. இவை சருமத்தை உள்ளே இருந்து ஆற்றுவதற்கு வழிவகுக்கிறது. எனவே இது அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் அழற்சி நிலைகளுக்கு இயற்கையான மற்றும் பாதுகாப்பான மூலப்பொருளாக அமைகிறது. விர்ஜின் தேங்காய் எண்ணெயின் மேற்பூச்சு பயன்பாடு, அரிக்கும் தோலழற்சி நோயாளிகளின் சரும நிலையை மேம்படுத்துகிறது.
சருமத்தை நீரேற்றமாக வைக்க
தேங்காய் எண்ணெயில் 80% முதல் 90% வரையிலான நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கொழுப்புகள் சருமத்தின் மேல் அடுக்கில் ஏற்படும் விரிசலைக் குறைக்கவும், நீரிழப்பு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதாவது, விரிசல்களை அத்தியாவசிய கொழுப்பு கொழுப்பு சத்துக்களால் நிரப்பி விரிசலைக் குறைக்கிறது. இதன் மூலம் சருமத்தை ஈரப்பதமாகவும், மிருதுவாகவும் வைக்க முடியும்.
பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட
மயிர்க்கால்களில் சரும எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்கள் அடைக்கப்படும் போது அது சில பாக்டீரியாவால் முகப்பருவுக்கு வழிவகுக்கிறது. இதற்கு அதிகளவிலான லாரிக் அமிலம் நிறைந்த தேங்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இது நுண்ணுயிர் எதிர்ப்பியாக செயல்படுகிறது. மேலும், தேங்காய் எண்ணெயில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. உண்மையில், லாரிக் அமிலத்தின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் முகப்பரு பாக்டீரியாவை அழிப்பதில் அதிக சக்தி வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Camphor Coconut Oil Benefits: சருமத்தை பளபளப்பாக தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை சேர்த்துகோங்க
கருமைத் திட்டுகளை நீக்க
தேங்காய் எண்ணெயில் சருமத்தை வெண்மையாக்கும் தன்மை நிறைந்துள்ளது. எனவே இது சருமத்தின் கருமையான திட்டுகளை ஒளிரச் செய்ய வழிவகுக்கிறது. இவை செல் சுழற்சிக்கு உதவுவதுடன், சருமத்தின் குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இயற்கையாகவே, சருமத்தில் கரும்புள்ளிகள், தழும்புகள் அல்லது வேறு ஏதேனும் அடையாளங்கள் இருப்பின், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது அதை மங்க வைக்கிறது.
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க
தேங்காய் எண்ணெயில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இவை சருமத்தின் உறுதி மற்றும் நெகிழ்ச்சித் தன்மையைப் பராமரிக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஈ போன்றவை சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. ஏனெனில், ஃப்ரீ ரேடிக்கல்கள் சருமத்தின் கொலாஜன் அடுக்கை உடைத்து மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் போன்ற முதுமை அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. இந்நிலையில் தேங்காய் எண்ணெய் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை பராமரிக்கிறது.
சருமத்திற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது எப்படி?
ஒரு தேக்கரண்டி அளவிலான தேங்காய் எண்ணெயை கைகளுக்கு இடையில் மெதுவாக தேய்க்க வேண்டும். பின்பு இதை முகம் மற்றும் கழுத்தில் தடவலாம். மேலும், இதை மார்பிலும், உடலின் மற்ற உலர்ந்த பகுதிகளிலும் தடவிக் கொள்ளலாம். இதற்கு பருத்தி பஞ்சைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதைப் பயன்படுத்துவதால் முகத்தில் எண்ணெய் ஒட்டிக் கொள்ளலாம். எனினும், கண்களுக்குள் தேங்காய் எண்ணெய் வருவதைத் தவிர்க்க வேண்டும். இது பார்வையை மங்கலாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பல்பு போன்ற பளீரென முகத்தை பெற தேங்காய் எண்ணெயில் இவற்றை கலந்து தடவுங்க!
தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு ஒப்பனை நீக்கியாக பயன்படுத்தலாம். அனைவருமே தினசரி மேக்கப்பை அகற்ற ரசாயனக் கரைசலைப் பயன்படுத்த விரும்ப மாட்டார்கள். இதற்கு மாற்றாக, மேக்-அப்பை இயற்கையான மற்றும் பயனுள்ள வழியாக தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதற்கு சிறிது தேங்காய் எண்ணெயை பருத்தி உருண்டையில் தடவி, சருமத்திலிருந்து மேக்கப்பை மெதுவாகத் துடைக்க வேண்டும். இது முகத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதுடன் ஈரப்பதத்தையும் அளிக்கிறது. இது தவிர, உதடுகளை பளபளப்பாக்கவும் இயற்கையாகவே நீரேற்றத்தை அளிப்பதாகவும் அமைகிறது.
குறிப்பு
சருமத்திற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும் எனினும், இது அனைவருக்கும் பொருந்தக் கூடியது அல்ல. இது நபர்களில் காணப்படும் தற்போதைய தோல் நிலையைப் பொறுத்து மாறுபடும். மேலும், எண்ணெய்கள், குறிப்பாக தேங்காய் எண்ணெயை ஒரே இரவில் வைத்திருக்கக்கூடாது எனக் கூறுகின்றனர். ஏனெனில், இது முகப்பருவை ஏற்படுத்தலாம் அல்லது மோசமாக்கலாம். எனவே மசாஜ் செய்வதற்கு எண்ணெயைத் தடவி பின்னர் கழுவி விட வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: சருமத்தைப் பொலிவாக்க மஞ்சள் யூஸ் பண்றீங்களா? அப்ப இந்த ஒரு பொருளையும் சேர்த்துக்கோங்க
Image Source: Freepik