Thu Oct 29, 2026 | 10:50 AM IST

Mustard Oil: தூங்கும் முன் தினமும் இரவு உள்ளங்காலில் கடுகு எண்ணெய் தடவினால் இவ்வளவு நல்லதா?

Mustard Oil: தூங்கும் முன் தினமும் இரவு உள்ளங்காலில் கடுகு எண்ணெய் தடவினால் இவ்வளவு நல்லதா?Mustard Oil: தூங்கும் முன் தினமும் இரவு உள்ளங்காலில் கடுகு எண்ணெய் தடவினால் இவ்வளவு நல்லதா?

Benefits Of Rubbing Mustard Oil On Feet Sole: நம்மில் பலர் குளிர்காலத்தில் சமையலுக்கு கடுகு எண்ணெய் பயன்படுத்துவோம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது ஊட்டச்சத்து நிறைந்தது மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த மூலமாகும். கடுகு எண்ணெயில் பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

மேலும், இதில் ஒமேகா-3, 6 போன்ற நிறைவுற்ற கொழுப்புகளும் உள்ளன. கடுகு எண்ணெயை உடலில் தடவுவதும் மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடுகு எண்ணெயைக் கொண்டு உடலை மசாஜ் செய்வது மிகவும் நல்லது. இது இயற்கையாகவே சருமத்தை ஈரப்பதமாக்கும் ஸ்கின் க்ரீமாகவும் செயல்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Rock Sugar Benefits: எடை குறைப்பு முதல் கண்பார்வை நன்மை வரை. இந்த ஒரு பொருள் போதும்

கடுகு எண்ணெயை உள்ளங்காலில் மசாஜ் செய்வது அல்லது தேய்ப்பதும் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இந்த கட்டுரையில் உள்ளங்காலில் கடுகு எண்ணெயை தடவுவதால் ஏற்படும் நன்மைகள், சரியான நேரம் மற்றும் தடவுவதற்கான முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

கடுகு எண்ணெயை உள்ளங்கால்களில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்

நிம்மதியான தூக்கம்: உள்ளங்கால்களை மசாஜ் செய்வது தூக்கமின்மையை போக்க ஒரு சிறந்த வழியாகும். இரவில் படுக்கும் முன் உள்ளங்காலில் மசாஜ் செய்வதால் சோர்வு, மன அழுத்தம் நீங்கி மனதை அமைதிப்படுத்துகிறது.

பெண்களுக்கு நல்லது: கடுகு எண்ணெயைக் கொண்டு பாதங்களை மசாஜ் செய்வது, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி, சோர்வு ​​மற்றும் அசாதாரண இரத்த ஓட்டம் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம் : இந்த குளிருல தாங்க முடியாத மூட்டு வலியா? இந்த ஒரு ஆயுர்வேத வைத்தியம் போதும்!

மன ஆரோக்கியம் மேம்படும்: கடுகு எண்ணெயைக் கொண்டு பாதங்களை மசாஜ் செய்வதால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் நீங்கும். இது நீங்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க உதவுகிறது.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது: கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு போன்ற பிரச்சனையை அகற்ற இந்த தீர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இது முழு உடலிலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

வயிறு ஆரோக்கியம்: உள்ளங்கால்களை மசாஜ் செய்வதன் மூலம் வாத தோஷத்தைக் கட்டுப்படுத்தலாம். அஜீரணம், வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வாயு, வீக்கம் மற்றும் வாய்வு போன்றவற்றை போக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : அடடா!!.. மாதுளை இலைக்கு இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா?

உள்ளங்காலில் கடுகு எண்ணெய் தடவுவதற்கான சரியான நேரம் மற்றும் வழி எது?

ஆயுர்வேதத்தில், இரவில் தூங்கும் முன் உள்ளங்கால்களை மசாஜ் செய்வது மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இரவில் தூங்குவதற்கு 30 முதல் 40 நிமிடங்களுக்கு முன், சூடான கடுகு எண்ணெயைக் கொண்டு உங்கள் பாதங்களை மசாஜ் செய்யவும். மசாஜ் செய்வதற்கு முன், உங்கள் கால்களை நன்கு கழுவ வேண்டும்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Eye Care Tips: கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆயுர்வேத குறிப்புகள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.