Is mustard oil good for skin in winter: குளிர்காலம் வந்துவிட்டாலே நோய்த்தொற்றுக்களின் அபாயமும் அதிகரித்தே காணப்படுகிறது. இந்த காலகட்டத்திலேயே பலரும் பலவிதமான உபாதைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே தான் குளிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், உடலை ஆரோக்கியமாக வைக்கவும் பல்வேறு இயற்கையான வழிமுறைகள் கையாளப்படுகிறது. அவ்வாறே, குளிர்காலத்தில் ஏற்படும் வலிகளைப் போக்க உதவும் மிகவும் நம்பகமான வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகவே கடுகு எண்ணெய் அமைகிறது. இது பழங்காலத்திலிருந்தே சமையல் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக நன்கு அறியப்படும் ஒன்றாகும்.
இந்த கடுமையான மற்றும் கூர்மையான கடுகு எண்ணெயில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களின் காரணமாக, இது ஆயுர்வேதத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், கடுகு எண்ணெய் ஆரோக்கியமான கொழுப்புகளின் களஞ்சியமாகும். இது உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது. இது தவிர, கடுகு எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், பருவகால நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் உதவுகிறது. கடுகு விதைகளை குளிர்ச்சியாக அழுத்துவதன் மூலம் கடுகு எண்ணெய் பெறப்படுகிறது. இவை எண்ணெயின் இயற்கையான ஊட்டச்சத்து கலவையை உறுதி செய்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: குளிக்கும் முன் உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதில் இத்தனை நன்மைகளா?
கடுகு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
ஆயுர்வேதத்தில் கடுகு விதைகள், கபா மற்றும் வாத தோஷங்களை சமன் செய்ய உதவுகிறது. எனினும், பித்த தோஷம் உள்ளவர்கள் இதை மிதமான அளவு உட்கொள்வது நல்லது. ஆயுர்வேதத்தில், உடலை சுத்தப்படுத்துவதற்கும், புத்துணர்ச்சியூட்டுவதற்கும் கடுகு விதைகள் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த
கடுகு எண்ணெய் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்ததாகும். எனவே இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக வழக்கமான உணவின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கொழுப்புகள் உடலுக்கு நல்லதல்ல எனக் கூறப்பட்டாலும், சில ஆரோக்கியமான கொழுப்புகள் உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகிறது. அவை மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆகும். இவை இரண்டுமே ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்குப் பங்களிக்கக் கூடியதாகும்.
தொற்று அபாயத்தைக் குறைக்க
குளிர்ந்த காலநிலையில் சருமத்தில் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில், கடுகு எண்ணெயை சருமத்தில் தடவுவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுக்களைக் குறைக்கலாம். இதற்கு கடுகு எண்ணெயில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் இருப்பதே காரணமாகும். சருமத்தில் கடுகு எண்ணெயைத் தடவுவது குளிர்காலத்தில் ஏற்படும் பல விதமான சரும தொற்றுகளையும் தவிர்க்க சிறந்த தேர்வாக அமைகிறது.
அழற்சி எதிர்ப்புப் பண்புகள்
கடுகு எண்ணெயின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்றாக அமைவது அதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகளே ஆகும். பொதுவாக குளிர்காலத்தில் வீக்கம் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதனைத் தவிர்க்க கடுகு எண்ணெய் சிறந்த தீர்வாக அமைகிறது. எனவே வீக்கத்தை நிர்வகிப்பதற்கான இயற்கையான வழிகளைத் தேடுபவர்களுக்கு கடுகு எண்ணெய் ஒரு சிறந்த மற்றும் மதிப்புமிக்க கூடுதலாகும்.
இயற்கையான பாதுகாப்புக்கு
கடுகு எண்ணெயானது ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்ததாகும். எனவே இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், இதில் அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. எனவே இவை நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், உடலின் இயற்கையான பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தவும் அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: சருமம், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ஆயுர்வேதிக் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
சருமம், முடி ஊட்டமளிக்க
பல நூற்றாண்டுகளாகவே, கடுகு எண்ணெய் ஊட்டச்சத்துக்கான எண்ணெயாகக் காணப்படுகிறது. எனவே தான் கடுகு எண்ணெய் ஆயுர்வேதத்தில் சருமம் மற்றும் முடிக்கு ஊட்டமளிக்கக் கூடிய மகத்தான நன்மைகளைத் தருவதாகக் கூறப்படுகிறது. இதில் நிறைந்துள்ள ஈரப்பதமூட்டும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளால், இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது சருமம், முடி சிகிச்சைக்கான பிரபலமான தேர்வாக அமைகிறது. இது தவிர, உச்சந்தலையில் ஏற்படும் பாதிப்பை சரிசெய்யவும் கடுகு எண்ணெய் பெரிதும் உதவுகிறது.
குளிர் உணர்வைக் குறைக்க
குளிர்காலத்தில் கடுகு எண்ணெயை உடலில் தடவுவதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம். இது உடலை வெப்பமாக்குகிறது. மேலும் குளிர் உணர்வைக் குறைக்கிறது. விரும்பினால், கடுகு எண்ணெயை லேசாக சூடாக்கிய பிறகும் பயன்படுத்தலாம். இவ்வாறு கடுகு எண்ணெயை சூடாக்கி பயன்படுத்துவது உடலுக்குக் குளிர் உணர்வைத் தருகிறது.
இவ்வாறு குளிர்காலத்தில் கடுகு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mustard Oil: தூங்கும் முன் தினமும் இரவு உள்ளங்காலில் கடுகு எண்ணெய் தடவினால் இவ்வளவு நல்லதா?
Image Source: Freepik