சருமம், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ஆயுர்வேதிக் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

Ayurvedic rituals for radiant skin and hair: இன்றைய நவீன காலத்தில் பல்வேறு காரணங்களால் பலரும் சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளைக் கையாள்கின்றனர். இதற்கு இரசாயனங்கள் சார்ந்த பராமரிப்புப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சில ஆயுர்வேத வைத்திய முறைகளைக் கையாளலாம். இதில் பளபளப்பான சருமம், மென்மையான, ஆரோக்கியமான முடியை பெற விரும்புபவர்களுக்கான ஆயுர்வேத முறைகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சருமம், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ஆயுர்வேதிக் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

How to improve hair quality ayurveda: இன்றைய நவீன காலகட்டத்தில் மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் இரசாயனங்கள் போன்றவை நம் அன்றாட வாழ்வில் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. இதன் காரணமாக, ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமம், முடி பெறுவது சற்று கடினமாக இருக்கலாம். இதற்கு சிலர் செயற்கைத் தயாரிப்புகளான பராமரிப்புப் பொருள்களை வாங்கி பயன்படுத்துவர். ஆனால், இது சரும ஆரோக்கியத்தைப் பாதிப்பதாகவே அமைகிறது. இந்நிலையில் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இயற்கையான முறைகளைக் கையாள்வது நல்லது.

அந்த வகையில், ஆயுர்வேதம் ஆரோக்கியமான, பளபளப்பான சருமம், முடி பெறுவதற்கு இயற்கையான மற்றும் முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது. இது உடலை உள்ளிருந்தே வளர்க்கிறது. செயற்கை தயாரிப்புகளை நம்பியிருக்கும் நவீன தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு நடைமுறைகள் போலல்லாமல் ஆயுர்வேத முறைகள் இயற்கையாகவே நன்மைகளைத் தந்து, ஊட்டச்சத்து, சமநிலை மற்றும் உடலின் உள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Beauty Benefits of Curd: தயிரை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்துவது?

பளபளப்பான சருமத்திற்கான ஆயுர்வேத முறைகள்

ஆயுர்வேதத்தில் உள்ள சில பழங்கால நடைமுறைகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இயற்கை பொருட்கள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இது நீண்ட கால பராமரிப்புக்கு வழிவகுக்கிறது.

மூலிகை ஃபேஸ்பேக் மற்றும் க்ளென்சர்கள்

மஞ்சள், வேம்பு மற்றும் சந்தனம் போன்றவை ஆயுர்வேதத்தில் சிறந்து விளங்கும் மூலிகைகளாகக் கருதப்படுகிறது. அதன் படி, சருமத்திற்கு மஞ்சள் ஃபேஸ் பேக்குகள் பயன்படுத்துவது சருமத்தை பிரகாசமாக வைக்கிறது. மேலும், வேம்புவில் உள்ள கசப்புத் தன்மை சருமத்தில் உள்ள முகப்பருவை நீக்க உதவுகிறது. இது தவிர, கொண்டைக்கடலை மாவில் இருந்து ஆயுர்வேத க்ளென்சர்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை சருமத்தின் இயற்கை ஈரப்பதத்தை அகற்றாமல், அதிகப்படியான ஈரப்பதத்தை அளிக்கிறது.

எண்ணெய் மசாஜ்

தேங்காய் அல்லது எள் போன்ற ஆயுர்வேத எண்ணெய்களுடன், வழக்கமான எண்ணெய் மசாஜ் செய்வது மூலிகைகள் உட்செலுத்தப்பட்டு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும், சருமத்தை நச்சுத்தன்மையாக்குகிறது. இந்த எண்ணெய் மசாஜ் நடைமுறையின் மூலம் சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதுடன், சருமத்தை மென்மையக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது.

ஆயுர்வேத உணவுகள்

ஆரோக்கியமான உணவுமுறைகள் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்களிக்கிறது. பருவகால உணவுகள், தேங்காய் நீர் போன்ற ஆயுர்வேத பானங்கள் சருமத்திற்கு நீரேற்றத்தை அளிக்கக் கூடியதாகும். இவை சருமத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Skin Care Tips: ரோஸ் வாட்டருக்குள் இத்தனை ரகசியங்கள் மறைந்திருக்கா… குளிர் கால சரும பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!

முடி பராமரிப்பிற்கான ஆயுர்வேத நடைமுறைகள்

இயற்கை ஷாம்புகள்

ஆயுர்வேத முறைப்படி, முடியை சுத்தப்படுத்த ஆம்லா, சீகக்காய் மற்றும் ரீத்தா போன்ற இயற்கை மூலிகை தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மூலிகைகள் சுத்தமான மற்றும் ஊட்டமளிக்கும் தேர்வாக அமைகிறது. இவை தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது.

மூலிகை எண்ணெய்

ஆம்லா, பிரிங்ராஜ் போன்ற ஆயுர்வேத எண்ணெய்களைத் தலைமுடிக்குப் பயன்படுத்தலாம். இவை முடியின் வளர்ச்சியை மேம்படுத்த மற்றும் மயிர்க்கால்களை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி உதிர்வைக் குறைக்கவும், தலைமுடிக்கு பிரகாசத்தை அளிக்கவும் உதவுகிறது.

உச்சந்தலை மசாஜ்

மூலிகைகள் கலந்த எண்ணெய்களை உச்சந்தலையில் தேய்த்து மசாஜ் செய்வது சிறந்த நன்மைகளைத் தருகிறது. இவை உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது தவிர, மன அழுத்தத்தைக் குறைக்கவும், அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மூலிகை எண்ணெய்கள் உதவுகின்றன.

இவ்வாறு இயற்கையான செயல்முறைகளின் உதவியுடன் சருமம் மற்றும் முடி பராமரிப்புகளைக் கையாள்வது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், இவை பிரகாசமான சருமம், முடிக்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: அழகு பராமரிப்பில் ஓக்ரா வாட்டர் தரும் அதிசய நன்மைகள்

Image Source: Freepik

Read Next

அடிக்கடி நெயில் பாலிஷ் போடுவீங்களா? - அப்போ இதை படிங்க முதல்ல!

Disclaimer