இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் சீரற்ற உணவு முறை காரணமாக, முகத்தில் பிம்பிள், கரும்புள்ளிகள், உலர்ச்சி, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை பலர் சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம், உடலுக்குள் இருக்கும் நச்சுகள் மற்றும் குடல் சுகாதார பிரச்சினைகளின் பிரதிபலிப்பே.
“உங்கள் குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்” என்கிறார் ஆயுர்வேத நிபுணர் டிம்பிள் ஜாங்க்டா. அவர் பரிந்துரைக்கும் 5 உணவுகள் உங்கள் சருமத்தை இயற்கையாக பளபளப்பாக்க உதவும். அவை என்னவென்று இங்கே தெரிந்துக் கொள்வோம்.
பிம்பிள், கரும்புள்ளிகள் போக… இந்த 5 உணவுகள் போதும்!
வேப்பிலை
வேப்பிலையை 15 முதல் 30 நாட்களுக்கு தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது anti-inflammatory, antibacterial, antiviral, antimicrobial பண்புகள் கொண்டது. இவை இரத்தத்தை சுத்திகரித்து, நச்சுகளை வெளியேற்றும். மேலும் பிம்பிள், சோரியாசிஸ், எக்சிமா போன்ற பிரச்சினைகளை குறைக்கும்.
மஞ்சள்
மஞ்சளை உணவில், பால் அல்லது டீயில் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சளில் உள்ள curcumin அலர்ஜியை குறைக்கும். இது பிம்பிள், ரோசேசியா, எக்சிமா, சோரியாசிஸ் போன்ற பிரச்சினைகளில் நிவாரணம் தரும். மேலும் சரும அலர்ஜியை இயற்கையாகக் கட்டுப்படுத்தும்.
கற்றாழை ஜூஸ்
தினமும் காலை வெறும் வயிற்றில் 20 ml கற்றாழை ஜூஸ் குடிக்கலாம். இது பித்தத்தை சமநிலைப்படுத்தி, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். மேலும் இது சருமத்தின் collagen & elasticity-ஐ மேம்படுத்தும். கற்றாழை ஜெல் முகத்தில் தடவி இரவில் உறங்கலாம். இது முகத்தை பளபளப்பாக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: முகத்தில் பளபளப்பைக் கொண்டு வர எந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்? நிபுணர் சொன்னது
திரிபலா
திரிபலா குடலில் இருக்கும் நச்சுகளை அகற்றும். மேலும் சிறுநீரகம், பெரிய குடல், சிறுகுடல் ஆகியவற்றை சுத்தம் செய்ய உதவும்.
குளிர்ச்சியான உணவுகள்
கீரைகள், வெள்ளரிக்காய், தர்பூசணி, பூசணி போன்ற உணவுகளை சேர்க்க வேண்டும். இவை உடல் சூட்டை தனித்து, சோரியாசிஸ், எக்சிமா, ரோசேசியா, சுரம்புகள் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தும்.
தவிர்க்க வேண்டியவை
மிகுந்த காரம், வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, அதிக எண்ணெய், அதிக சர்க்கரை போன்றவற்றை இன்றே தவிர்த்து விடுங்கள். இவை குடல் நலனை பாதித்து சரும பிரச்சினைகளை அதிகரிக்கும் என்று நிபுணர் கூறுகிறார்.
View this post on Instagram
இறுதியாக
உங்கள் சருமம், உங்கள் உடல் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பு. வேப்பிலை, மஞ்சள், கற்றாழை, கீரைகள், திரிபலா போன்ற உணவுகளை சரியான முறையில் உட்கொள்வதால் உங்கள் இரத்தமும் குடலும் சுத்தமடைந்து, முகம் இயற்கையாக பளபளக்கும்.
{Disclaimer: இந்த கட்டுரையில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஆரோக்கிய விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ ஆலோசனையாக கருதப்பட கூடாது. உங்களின் உடல் நலக் குறைபாடுகள், நோய் அறிகுறிகள், சிகிச்சை போன்றவற்றிற்காக தகுந்த மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையை பெறுவது மிக அவசியம். இங்கே கூறப்பட்ட உணவு, இயற்கை மருத்துவம், ஆயுர்வேத முறைகள் அனைத்தும் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி பலன் அளிக்காது. உங்கள் உடல்நிலை, வயது, மருந்து பழக்கங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிபுணரின் வழிகாட்டுதலோடு பின்பற்ற வேண்டும்.}