பொதுவாக பெண்கள் நகங்களை அழகுபடுத்த நெயில் பாலிஷ் பயன்படுத்துவார்கள். இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அலங்காரம். இன்று பல வகையான நெயில் பாலிஷ்கள் கிடைக்கின்றன. ஆனால் பெரும்பாலும் இந்த நெயில் பாலிஷ்கள் ஆபத்தானவை.
நெயில் பாலிஷ் சிலவற்றில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. இவை கணைய புற்றுநோய்க்கு வழிவகுக்கும். நகங்களில் வைக்கப்படும் போது, நெயில் பாலிஷில் உள்ள ரசாயனங்கள் தோலுக்குள் ஊடுருகிறது. மேலும் சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும், அவர்கள் நகங்களை கடிப்பதன் மூலமாகவும் ரசாயனங்கள் நேரடியாக வயிற்றிற்குள் செல்கின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு நெயில் பாலிஷ் வைப்பது மிக மிக ஆபத்தானது.
இதுபோன்ற பிரச்சனைகள் நெயில் பாலிஷை தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு ஏற்படக்கூடும். நெயில் பாலிஷ் மற்றும் நெயில் பாலிஷ் ரிமூவரில் அசிட்டோல் என்ற கூறு உள்ளது. இதனால் நகங்கள் வறண்டு போகும். நகங்களின் ஆரோக்கியத்தை சேதப்படுத்தி, அதன் மூலமாக உடலுக்குள் சென்று தீங்கு விளைவிக்கும். இது நகங்களில் நிறமாற்றத்தையும் ஏற்படுத்தும்.
சருமத்திற்கு இவ்வளவு தீங்கானதா?
நெயில் பாலிஷ் மீது விழும் புற ஊதாக்கதிர்கள் புற்றுநோய் மற்றும் ஆன்டி ஏஜிங் போன்றவற்றை உருவாக்கக்கூடும். மேலும் நெயில் பாலிஷ் சொறி அல்லது படை போன்ற சரும நோய்களையும் ஏற்படுத்தக்கூடியது.
நெயில் பாலிஷின் தீய விளைவுகளை எவ்வாறு தடுப்பது?
- மேலே குறிப்பிட்டுள்ளபடி ரசாயனங்கள் உள்ளதை வாங்காதீர்கள்.
- அவற்றை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம். அவசரகால சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தவும்.
- நகங்களின் நிறம் மஞ்சளாக மாறுவதைக் கண்டால் உடனடியாக ஒரு மாதத்திற்கு நெயில் பாலிஷ் போடுவதைத் தவிர்க்கவும்.
- மார்க்கெட்களில் கிடைக்கக்கூடிய நெயில் பாலிஷ்களில் 5 ஃப்ரீ அல்லது 3 ஃப்ரீ ஆகிய கிரேடுகள் உள்ளன.
- 5 ஃப்ரீ என்றால் ஃபார்மால்டிஹைட், டோலுயீன், டிபியூட்டில் பித்தலேட், ஃபார்மால்டிஹைட் ரெசின்கள் மற்றும் கற்பூரம் ஆகியவை இல்லை என்று அர்த்தம். 3 ஃப்ரீ என்றால், 3 நச்சுப்பொருட்களற்றது என்று அர்த்தம். இவற்றை பயன்படுத்துவது கொஞ்சம் பாதுகாப்பானது.
- உங்கள் நகங்களைக் கடிக்காதீர்கள்
- உணவு உண்ணும் கையில் அதை வைக்க வேண்டாம். உணவுடன் நெயில் பாலிஷ் உள்ளே வர அதிக வாய்ப்பு உள்ளது.
- எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.