Nail Polish Side Effects For Babies: இன்று பல தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் கைகளில் நெயில் பாலிஷ் போட்டு விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது பாதுகாப்பானதா என்பது குறித்த கேள்வி உங்களுக்கு எழுந்துள்ளதா?. சிறு குழந்தைகளுக்கு நெயில் பாலிஷ் போடுவது பாதுகாப்பானதா என்பது குறித்து பாராஸ் மருத்துவமனையின் தோல் மருத்துவரான டாக்டர் நந்தினி பருவா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நெயில் பாலிஷில் சில இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை குழந்தையின் நகங்களின் ஆரோக்கியத்திற்கும், குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கலாம். ஒன்றிரண்டு நாள்களுக்கு நெயில் பாலிஷ் அணிவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், தினமும் தடவி வருவது தொற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் ஏற்படலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Child Stomach Cramps: குழந்தையின் வயிற்றுப்பிடிப்பு சீக்கிரம் சரியாக இதெல்லாம் செய்யுங்க.
சிறு குழந்தைகளுக்கு நெயில் பாலிஷ் போடுவதால் ஏற்படும் விளைவுகள்
சிறு குழந்தைகளுக்கு நெயில் பாலிஷ் பயன்படுத்த விரும்புபவர்கள் ஒன்றிரண்டு நாள்கள் மட்டும் பயன்படுத்தலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு அல்ல. இதனால், ஏற்படும் குறைபாடுகள் சிலவற்றைக் காண்போம்.
பாக்டீரியா தொற்று
குழந்தைகளுக்கு நெயில் பாலிஷ் போடுவது பரோனிச்சியா தொற்று என்ற பாக்டீரியா தொற்றை ஏற்படுத்துகிறது. இதில், நகங்களைச் சுற்றி வீக்கம் ஏற்படலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த தொற்றைத் தவிர்க்க, நெயில் பாலிஷ் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பூஞ்சை தொற்று
சிறு குழந்தைகளுக்கு நெயில்பாலிஷைப் பயன்படுத்துவதால், ஓனிகோமகோசிஸ் பூஞ்சை தொற்று ஏற்படலாம். இது நகங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றாகும். இதனால், நகங்களின் நிறம் மாறுதல், நகங்கள் உடைதல், நகங்கள் மெலிந்து போகுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே குழந்தைகள் நகங்களில் நெயில் பாலிஷ் போடக்கூடாது.
வாயு பிரச்சனை
தினமும் சிறு குழந்தைகளுக்கு நெயில் பாலிஷ் தடவுவதால், அவை பல நாள்கள் அபடியே இருக்கும். இதனால், இவை நகங்களை உறிஞ்சத் தொடங்கி, வாயு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நகங்களை உறிஞ்சுவதன் மூலம் நெயில் பாலிஷின் இரசாயனம் வயிற்றுப் பகுதிக்கு சென்று வேறு சில பிரச்சனைகளையும் உண்டாக்கலாம். மேலும், ஒரே நகத்தின் மீது மீண்டும் மீண்டும் நெயில் பாலிஷ் அடிப்பது நகத்தின் தோலை ஈரப்பதமாக்கி, பூஞ்சை தொற்றை விரைவில் ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Newborn Bloated Stomach: உங்க குழந்தைக்கு வயிறு வீங்க இது தான் காரணம்.. இதை எப்படி பாதுகாப்பது?
வயிறு தொடர்பான பிரச்சனைகள்
சிறு குழந்தைகளுக்கு நெயில் பாலிஷ் அடிக்கும் போது, அவர்கள் பல முறை தங்கள் வாயில் நகத்தை வைக்கின்றனர். இதனால், நெயில் பாலிஷின் இரசாயனம் உடலுக்குள் சென்று சிறு குழந்தைகளுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் ஒரு அடுக்கின் மேல் மற்றொரு முறை நெயில் பாலிஷை பயன்படுத்துவது நகங்களைச் சேதமடையச் செய்யலாம்.
நகங்கள் வறண்டு போகுதல்
நெயில் பாலிஷ் அடிப்பதால், நகங்களில் வறட்சி ஏற்படலாம். சிறு குழந்தைகளின் நகங்கள் மிகவும் மென்மையாக இருக்கும். இதனால், நெயில் பாலிஷில் உள்ள இரசாயனம் நேரடியாக நகங்களுக்குச் சென்று அவர்களின் சருமத்திற்கும் தீங்கு விளைவிக்கலாம்.
குழந்தைகளுக்கு நெயில் பாலிஷ் அடிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
- குழந்தைகளுக்கு 1-2 நாள்களுக்கு மட்டும் நெயில் பாலிஷ் போடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
- நகங்களைச் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம் நெயில் தின்னரை அதிகளவு பயன்படுத்தக் கூடாது.
- குழந்தைகளுக்கு பயன்படுத்தும் நெயில் பாலிஷில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லை என்பதை உறிதி செய்து கொள்ள வேண்டும்.
- குழந்தைகளின் நகங்களை நீளமாக வளர விடக்கூடாது
- தொடக்கத்தின் குழந்தைக்கு ஒளி வண்ணங்களை மட்டும் பயன்படுத்தலாம்.
- குழந்தைகளுக்கு முடிந்த வரை நெயில் பாலிஷ் போடுவதைத் தவிர்க்க வேண்டும். இதையும் மீறி குழந்தைகள் விரும்பினால் கைகளில் தடவுவதற்குப் பதில் கால்களில் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்து இரசாயனங்கள் நகங்களை உறிஞ்சினாலும், நெயில் பாலிஷ் வயிற்றில் சேராது.

தாய் நெயில் பாலிஷ் வைப்பதை பார்த்தே சிறு குழந்தைகளும் நெயில் பெயின்ட் அடிக்க வற்புறுத்துவர். ஆனால் ஒன்றிரன்டு நாள்களுக்கு நெயில் பாலிஷ் வைப்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதற்கு மேல் தடவினால், இந்த பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Chamomile Tea Benefits: குழந்தைக்கு தீராத வயிற்று வலியா? கெமோமில் டீயை இப்படி கொடுங்க.
Image Source: Freepik