Home Remedies For Child Stomach Pain: குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று வயிற்று பிடிப்பு அல்லது வயிற்று வலி ஏற்படுவதாகும். மிகச்சிறிய குழந்தைகள் என்பதால், பிடிப்பு அல்லது வலி ஏற்படுவதை அவர்களால் சொல்லக் கூட முடிவதில்லை. வயிற்று வலி இருக்கும் போது குழந்தைகள் மிகவும் அழுவார்கள். குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்றாக கோலிக் அல்லது பெருங்குடல் வலியாக இருக்கலாம். எனவே குழந்தையின் வலியைக் குறைக்க சில ஆரோக்கியமான முறைகளைக் கையாள வேண்டும். இது குறித்து ஃபிட் கிளினிக்கின் டயட்டீஷியன் சுமன் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
குழந்தைக்கு வயிற்று வலி நீங்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டியவை
கடுமையான வயிற்று வலியால் குழந்தைகள் பாதிக்கப்படும் போது, அதிலிருந்து தவிர்க்க சில பாதுகாப்பான நடைமுறைகளைக் கையாள வேண்டும்.
ஏப்பம் விடும் வரை காத்திருப்பது
தாய்மார்கள் பலரும் குழந்தைகளுக்கு உணவளித்த பிறகு ஏப்பம் விடும் வரை காத்திருப்பதில்லை. பெற்றோர்கள் செய்யும் இந்த தவறால், வயிற்றில் வாயு, அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் குழந்தையை அமைதிப்படுத்த மற்றும் வயிற்று வலி பிரச்சனையைத் தவிர்க்க குழந்தைகளை பர்ப் செய்ய வேண்டும். குழந்தையை பெற்றோர்கள் தங்கள் தோள்களில் எடுத்து, ஒரு கையால் முதுகைத் தேய்க்க வேண்டும்.

ஸ்வாட்லிங் (Swaddle)
இது குழந்தைகளுக்கு மிகவும் வசதியானதாகும். இதில், குழந்தையை துணியில் போர்த்தி, கைகளின் ஆதரவுடன் அவர்களை ஸ்வாட்லிங் செய்யலாம். இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி மற்றும் வாயுத் தொல்லைகளை நீக்கும். மேலும், இது பல்வேறு பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. மேலும், ஸ்வாட்லிங் செய்வது குழந்தையை நன்றாக தூங்க வைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Chamomile Tea Benefits: குழந்தைக்கு தீராத வயிற்று வலியா? கெமோமில் டீயை இப்படி கொடுங்க.
கால்களை துடுப்பு போல பயன்படுத்துதல்
குழந்தை வயிற்று வலியால் அவதிப்பட்டால், அவரை முதுகில் படுக்க வைத்து கால்களை மிதிக்கும் இயக்கத்தில் நகர்த்த வேண்டும். இவ்வாறு செய்வது, குழந்தையின் வயிற்றில் உற்பத்தியாகும் வாயுவை வெளியேற்றி குழந்தை நலமாக இருக்கும். எனினும், குழந்தைகளின் கால்களை நகர்த்தும் போது கைகளை லேசாக வைத்திருக்கலாம்.
பெருங்காயம்
குழந்தைக்கு வயிற்று வலி இருப்பின், வெதுவெதுப்பான நீரில் 1 சிட்டிகை பெருஞ்சீரகத்தைக் கலக்க வேண்டும். இப்போது இந்த கரைசல் ஆறிய பின்னர், இதை குழந்தையின் தொப்புளில் தடவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைக்கு ஏற்பட்ட வாயுத் தொல்லை மற்றும் வயிற்று வலியிலிருந்து விடுபடலாம்.
மசாஜ் செய்வது
குழந்தைக்கு ஏற்படும் பெருங்குடல் வலியைக் குறைக்க, பெற்றோர்கள் தங்கள் குழந்தையை கால்களுக்கு மேல் வயிற்றில் படுக்க வைத்து, மெதுவாக அவரின் முதுகை தேய்க்க வேண்டும். இது வாயுவை வெளியேற்றி, குழந்தையின் வயிற்று வலியிலிருந்து நிவரணத்தைத் தருகிறது. இந்த வகையான மசாஜ், குழந்தைகளுக்கு பல்வேறு நிவாரணங்களை அளிக்க்றது.
குழந்தைகள் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் பெற இந்த முறைகளைப் பின்பற்றலாம். எனினும், இந்த முறைகளைப் பின்பற்றுவதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Almond Milk For Babies: இது தெரிஞ்சா இனி குழந்தைக்கு தினமும் பாதாம் பால் கொடுப்பீங்க.
Image Source: Freepik