Ways To Increase Child Brain Power: குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்த ஒவ்வொரு பெற்றோரும் பல வகையான முயற்சிகளை செய்து வருகின்றனர். குழந்தைகளின் மூளையைக் கூர்மைப்படுத்த, அவர்களின் உணவு மற்றும் செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
குறிப்பாக குழந்தையின் உணவுப் பழக்கம், மூளையைப் பாதிக்கலாம். மேலும், குழந்தைகளின் மனதைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க பல்வேறு வகையான விளையாட்டுகள், புத்தகங்கள் மற்றும் மூளைத் திறனை அதிகரிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்தச் செய்யலாம். இது போன்று குழந்தையின் மூளைத் திறனை கூர்மைப்படுத்துவது எப்படி என்பது குறித்து காண்போம்.
இந்தப் பதிவும் உதவலாம்: Junk Food Effects: உங்க குழந்தை அதிகம் ஜங்க் ஃபுட் சாப்பிடுமா? இது தெரிஞ்சா இனி கொடுக்கவே மாட்டீங்க
குழந்தைகளின் மூளைத் திறனை வளர்ப்பது எப்படி?
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிப்பதற்கு சில வழிகளைக் கையாளலாம். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
உடனடி செயல்முறை கொடுப்பது
குழந்தையை நிதானப்படுத்துவது மற்றும் கட்டிப்பிடிப்பது, அவர்களது மூளையில் நேர்மறையான விளைவுகளைத் தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே குழந்தை அழுது கொண்டிருப்பின், அவர்களைக் கைவிடாமல், அவர்களை அமைதிப்படுத்த வேண்டும். இது அவர்களின் மனதை அமைதியாக வைக்க உதவும்.
ஆளி விதை
குழந்தையின் மூளைவளர்ச்சியை அதிகரிக்க, அவர்களது உணவில் ஆளி விதைகளைச் சேர்க்கலாம். பொதுவாக ஆளி விதைகளை எடுத்துக் கொள்வது ஏராளமான நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை வழங்குகிறது. இது அவர்களின் மனநிலையை மேம்படுத்தி, நினைவக திறனை அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கு ஆளி விதையை சாலட் அல்லது இனிப்பு வடிவில் கொடுக்கலாம். இந்த வழிகளிலேயே ஆளிவிதைகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன.
சூரியகாந்தி விதைகள்
குழந்தைகளின் மூளைத்திறனை மேம்படுத்துவதற்கு சூரியகாந்தி விதைகள் பெரிதும் உதவுகின்றன. ஏனெனில், சூரியகாந்தி விதையில் மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் ஈ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளின் மூளைச் செல்களை அழுத்தமில்லாமல் வைத்திருக்க உதவுகிறது.
இந்தப் பதிவும் உதவலாம்: Stop Crying Baby: குழந்தையின் அழுகையை நிறுத்த பெற்றோருக்கான சில உதவிக்குறிப்புகள்
மசாஜ் செய்வது
குழந்தைகளை நன்றாக மசாஜ் செய்வது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதன் மூலம், மன அழுத்தம் இல்லாமல் உணர்வர். மேலும், மசாஜ் செய்வது குழந்தைகளுக்கு நேர்மறையான எண்ணங்களைத் தருகிறது. எனவே குழந்தைகளின் மூளையை மேம்படுத்த, ஒரு நாளைக்குக் குறைந்தது 3 முதல் 4 முறை வரை மசாஜ் செய்யலாம்.
பொம்மை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துதல்
குழந்தைகளின் தொடர்புத் திறனை ஆராய்ந்த மேம்படுத்த இவை உதவும். ஏனெனில், குழந்தைகளுக்கு பொம்மைகள் மீதான ஈர்ப்பு, அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அமையும். உதாரணமாக, கட்டிடத் தொகுதிகள், இசை பொம்மைகள், வண்ண பொம்மைகள் போன்றவற்றைக் கொடுக்கலாம். இது குழந்தைகளின் மனதில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.
குழந்தைகளின் மூளையைக் கூர்மைப்படுத்த இந்த எளிய வழிமுறைகளை பெற்றோர்கள் பின்பற்றலாம். எனினும், குழந்தை சரியாக பதிலளிக்கவில்லை அல்லது அவர்களின் நடவடிக்கையில் ஏதேனும் பிரச்சனையைக் கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பயன்பெறுவது நல்லது.
இந்தப் பதிவும் உதவலாம்: Child Needs Attention: குழந்தைகளுக்கு பெற்றோரின் கவனம் தேவைப்படுவதற்கான அறிகுறிகள்
Image Source: Freepik