Child Brain Development: குழlந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க இத ஃபாலோ பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Child Brain Development: குழlந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க இத ஃபாலோ பண்ணுங்க


இந்த படிகள் ஒரு நாள் செயல்முறை அல்ல. குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க ஒவ்வொரு நாளும் கவனம் செலுத்த வேண்டும். அதன் படி, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு ஆகிய இரண்டும் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் இரு படிகளாகும். இவை தவிர, இன்னும் பிற முக்கிய படிகள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Child Brain Power: உங்க குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்க இதெல்லாம் செய்யுங்க

குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

உடற்பயிற்சி

இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய படியாகும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கொண்டு வர, குழந்தைகளை சில உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்தலாம். குழந்தையுடன் உடற்பயிற்சி அமர்வை முடிக்கலாம். சிறு வயதில் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி மேற்கொள்ள வைப்பது மூளையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் போதுமான ஆக்ஸிஜன் மற்றும் குளுக்கோஸை மூளைக்கு வழங்கப்பட்டு மனக் கவனத்தை அதிகரிக்கிறது.

ஆரோக்கியமான உணவு

உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவு முறை மூளைக்கு நன்மை பயக்கும். எனவே, குழந்தைகளுக்குச் சத்துகள் நிறைந்த பச்சை காய்கறிகள், நட்ஸ், ஓட்ஸ், ஆப்பிள் மற்றும் தயிர் போன்றவற்றைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பொதுவாக DHA நிறைந்த உணவைக் கொடுக்க வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலமான இவை, உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். மேலும், சோயாபீன், கனோலா எண்ணெய், அக்ரூட் பருப்புகள் போன்றவற்றில் DHA காணப்படுகிறது.

குழந்தையுடன் கலந்துரையாடல்

குழந்தையின் மன வளர்ச்சிக்காக, அவர்களுடன் தொடர்பு கொள்வது அவசியமாகும். குழந்தையின் சிந்தனை முறை, அவரது விருப்பு வெறுப்புகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்வதாக அமையும். அதன் படி, குழந்தையுடன் எவ்வளவு அதிகமாக பேசுகிறோமோ, அவருடைய கேள்விகளுக்குப் பதிலளித்து வரும் போதும், குழந்தையின் மனம் கூர்மையாக காணப்படும்.

இந்த பதிவும் உதவலாம்: உங்க குழந்தை ஹெல்த்தியா இருக்க வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டிய உணவுகள் இது தான்.!

குழந்தைகளுடன் விளையாடுதல்

குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எளிதான வழியாக, அவர்களுடன் சேர்ந்து விளையாடுவதில் நேரத்தை செலவிடுதலாகும். இது குழந்தையின் ஆர்வத்தை ஈடுபடுத்தும். மேலும், குழந்தையுடனான உங்களது பிணைப்பு மேம்படும். இந்த வழிமுறைகள் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும். குழந்தையுடன் வெவ்வேறு ஒலிகளை அடையாளம் காணும் விளையாட்டை விளையாடலாம். இது கேட்கும் திறனைம மேம்படுத்தி, மூளைக்கு ஆற்றல் தரும்.

படிக்க வைப்பது

புத்தகம் படிப்பது குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் ஒரு யுக்தியாகும். எனவே, குழந்தைக்கு சிறு வயது முதலே புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஆரம்பத்திலிருந்தே ஏற்படுத்த வேண்டும். குழந்தை சிறியவராகவும், படிக்கத் தெரியாதவராகவும் இருப்பின், படப் புத்தகத்தைக் கற்றுக் கொடுக்கலாம். படத்தின் வடிவத்தைப் பார்த்து அதன் பெயரை அடையாளம் காணச் சொல்லலாம். பல்வேறு நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களும், குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க இது சிறந்த வழி எனக் கூறுகின்றனர்.

குழந்தைகளின் மூளை வளர்ச்சியின் போது பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை

  • குழந்தையின் உணர்வுகளை கேலி செய்யாதிருப்பது
  • குழந்தையை கற்பிக்க சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது
  • குழந்தையின் உடல் அல்லது மன வளர்ச்சிக்காக, அதிகம் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்த கூடாது
  • மருத்துவ ஆலோசனை இல்லாமல், புதிய உணவுகளை குழந்தைக்குக் கொடுக்க வேண்டாம்
  • குழந்தையிடம் பேசும் போது மென்மையாக பேச வேண்டும்

ஒவ்வொரு குழந்தையும் தனது சொந்த வேகத்திலேயே கற்றுக் கொள்ள முடியும். எனவே மெதுவாகக் கற்கும் குழந்தையாக இருப்பின், அதில் எந்த தீங்கும் இல்லை. குழந்தையுடன் பெற்றோர்கள் எவ்வளவு அதிகம் பேசுகிறார்களோ, அவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்படுவர்.

இந்த பதிவும் உதவலாம்: Weak Children Foods: உங்க குழந்தை பலவீனமா இருக்கா? அப்ப ஸ்ட்ராங்கா இருக்க இந்த உணவெல்லாம் கொடுங்க.

Image Source: Freepik

Read Next

Child Brain Power: உங்க குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்க இதெல்லாம் செய்யுங்க

Disclaimer