Endorphins Releasing Tips: உடலில் எண்டோர்பின்களை அதிகரிக்க இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Endorphins Releasing Tips: உடலில் எண்டோர்பின்களை அதிகரிக்க இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க

அதன் படி, என்டோர்பின்கள் என்பது இயற்கையான வலி நிவாரணியாகவும், மன அழுத்தம் நிவாரணியாகவும் செயல்பட உதவும் ஹார்மோன் ஆகும். இந்த என்டோர்பின்கள் நம் உடலில் மைய நரம்பு மண்டலம் மற்றும் பிட்யூட்டரி சுரப்பி மூலம் வெளியிடப்படும் ஹார்மோன்கள் ஆகும். இவை உடலின் ரசாயன தூதர்களாக செயல்படுகிறது. இந்த மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உடலில் ஏற்படும் வலியை நிர்வகிக்கவும், மகிழ்ச்சியை உணரவும் வைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியமான மனம் மற்றும் உடலுக்கு தினமும் இந்த காலை பழக்க வழக்கங்களை பின்பற்றுங்க

என்டோர்பின்களின் நன்மைகள்

ஒருவரின் மன அழுத்தம் மற்றும் கவலையை உணரும் சமயத்தில், அவர் தனது சுய மரியாதையை அதிகரிக்க வேண்டும் என கருதும் நிலையில் எண்டோர்பின்கள் வெளியாகிறது. அதிலும் ஒருவர் அவருக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஈடுபடும் போது, அவர்களின் உடலிலிருந்து என்டோர்பின்கள் வெளியாகலாம். அதாவது செக்ஸ், காதல், சிரிப்பு அல்லது உடற்பயிற்சி போன்ற இன்பமான செயல்களின் போது இந்த ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன.

இந்த அதிகரித்த எண்டோர்பின்கள் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலில் இயற்கையான முறையில் இந்த என்டோர்பின்களை அதிகரிக்க சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைக் கையாள வேண்டும். இதில் என்டோர்பின்களை அதிகரிக்க உதவும் வழிகளைக் காணலாம்.

என்டோர்பின்கள் ஏன் முக்கியம்?

உடலில் இயற்கையான முறையில் என்டோர்பின்கள் அதிகரிப்பது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைத் தருகிறது.

  • அதிக எண்டோர்பின் அளவு வலியைக் கட்டுப்படுத்தவும், இன்ப உணர்வுகளை அதிகரிக்கவும் உதவுகிறது.
  • இது பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைக் குறைத்து, சுய மரியாதையை மேம்படுத்துகிறது.
  • மேலும், என்டோர்பின்கள் அறிவுசார் செயல்பாட்டுக்கு ஆதரவு அளிக்கவும், வீக்கத்தைக் குறைத்து பசியை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.

இயற்கையாக என்டொர்பின்களை அதிகரிப்பது எப்படி?

தியானம் செய்வது

உடலில் எண்டோர்பின் வெளியீட்டை அதிகரிக்க தியானம் ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. தியானம் செய்யும் உடல் ஓய்வடையும் மற்றும் அமைதியான நிலையை அடையும். இந்த தியானத்தின் பிற நன்மைகளாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் தியானம் செய்வது உடலில் நோயெதிர்ப்புத் திறனை அதிகரிக்கவும், தூக்க முறை மற்றும் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sesame Oil Massage Benefits: உடம்பு வலி காணாமால் போக நல்லெண்ணெய் மசாஜ் செய்யுங்க

உடற்பயிற்சி செய்வது

நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். அதில் ஒன்றாகவே உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்பின்கள் உற்பத்தியாவதாகும். உடற்பயிற்சி செய்யும் போது, எண்டோர்பின்கள் அதிகரித்து மன ஆரோக்கியத்திற்கும் நன்மை தருகிறது. அதன் படி, 30 நிமிட உடற்பயிற்சிக்குப் பிறகு உடலில் எண்டோர்பின்கள் கணிசமான அளவில் வெளியேறும் என ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சத்தமாக சிரிப்பது

சத்தமாக சிரிக்கும் போது சந்தோஷமான மனநிலையை உணர்கிறோம். இது ஆரோக்கியமான மனநிலையைக் குறிக்கிறது. இவ்வாறு சிரிப்பதன் மூலம் மனதில் உள்ள கவலைகள் அல்லது மன அழுத்தத்தின் தொடர்ச்சியான சுழற்சியில் இருந்து விடுபடலாம். மேலும் றிவுசார் நடத்தை சிகிச்சையில் சிரிப்பு சிகிச்சை என்று அழைக்கப்படும் ஒரு நுட்பமும் உள்ளது. இந்த நுட்பத்தின் மூலம் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு குறைக்கப்படுகிறது.

பாலியல் உறவு

ஆக்ஸிடாஸின் போன்ற பிற காதல் ஹார்மோன்களுடன் எண்டோர்பின்கள் உடலிலிருந்து வெளியிடப்படுகிறது. எனவே உடலுறவு மகிழ்ச்சியான உணர்வைத் தருவதாகக் கூறப்படுகிறது. இது எண்டோர்பின்களின் அளவை அதிகரித்து மன அழுத்தத்தைக் குறைத்து வலி நிவாரணியாக அமைகிறது. மேலும் சுயமரியாதையை மேம்படுத்துதல் போன்ற உணர்வை உணர வைக்கிறது.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடலில் எண்டோர்பின்களை வெளியிட ஏதுவாக அமைகிறது. இது மகிழ்ச்சி உணர்வுகளை ஊக்குவிக்கிறது. எனவே மன அழுத்தம் அல்லது சோகத்தின் போது, சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் மனம் தளர்வாகி, நிம்மதியாக உணரவைக்கிறது. டார்க் சாக்லேட்டைப் போல் ஒயின் அருந்துவதும் எண்டோர்பின் உற்பத்தியை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

நறுமண எண்ணெய் நுகர்தல்

லாவெண்டர் போன்ற பிடித்தமான நறுமணம் மிக்க எண்ணெய்களை முகர்ந்து பார்ப்பதன் மூலம் உடலிலிருந்து எண்டோர்பின் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. எனவே சுற்றுப்புறத்தில் எண்ணெய்களின் நறுமணத்தைப் பரப்ப, டிஃப்பியூசரைப் பயன்படுத்தலாம். ஆரஞ்சு, திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் வாசனை திரவியங்கள், ரோஸ்மேரி எண்ணெய் போன்றவையும் உடலில் எண்டோர்பின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் தன்மைகளைக் கொண்டுள்ளன.

இது போன்ற பழக்க வழக்கங்களை நம் அன்றாட வாழ்வில் கடைபிடிப்பதன் மூலம் உடலில் இயற்கையான முறையில் மகிழ்ச்சி ஹார்மோனான எண்டோர்பின்களை அதிகரிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Brain Sharpening Tips: மூளைத் திறன் மேம்பாட்டிற்கு உதவும் டாப் பழக்க வழக்கங்கள்

Image Source: Freepik

Read Next

Physical Activity Benefits: தினமும் உடல் செயல்பாடுகளை செய்வது ஏன் முக்கியம் தெரியுமா?

Disclaimer