ஆரோக்கியமான மனம் மற்றும் உடலுக்கு தினமும் இந்த காலை பழக்க வழக்கங்களை பின்பற்றுங்க

  • SHARE
  • FOLLOW
ஆரோக்கியமான மனம் மற்றும் உடலுக்கு தினமும் இந்த காலை பழக்க வழக்கங்களை பின்பற்றுங்க

அன்றாட வாழ்வில் உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் இன்னும் சில மாற்றங்களால் உடல், மன ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இதற்கு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தினசரி பழக்க வழக்கங்களைக் கையாள்வது அவசியமானதாகக் கருதப்படுகிறது. இதில் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வகையில் தினந்தோறும் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Night Bath: இரவு நேரத்தில் குளிப்பதில் இவ்வளவு நல்லது இருக்கா?

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தினசரி காலை பழக்க வழக்கங்கள்

முக்கிய ஊட்டச்சத்துக்கள்

இன்றைய பிஸியான காலகட்டத்தில், பலரும் சாப்பிடுவதில் கவனம் செலுத்த மறந்து விடுகின்றனர். நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் அடிப்படைத் தேவையாகும். நாள்தோறும் புதிய தயாரிப்புகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். முடிந்தவரை, பேக் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். எனவே அன்றாட உணவில் பருவகால காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் புரதங்கள் சேர்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தூக்க சுழற்சி பராமரிப்பு

நல்ல ஆரோக்கியத்தைப் பெற விரும்புபவர்கள், உறக்க நேரத்தை சரிசெய்வது இன்றியமையாததாகும். ஏனெனில், குறைவான தூக்கம் பெறுபவர்கள் சோர்வு மற்றும் எரிச்சலை உணர்வார்கள். மேலும் இதனால், உற்பத்தித் திறனும் குறையும். ஏனெனில் தாமதமான இரவுகள் செரிமான அமைப்பைப் பாதித்து மந்தமாகவும், உயிரற்றதாகவும் தோற்றமளிக்கும். எனவே தினமும் இரவில் சீக்கிரம் தூங்க முயற்சிக்கவும். இதனைத் தொடர்ந்து குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும். மேலும் தூங்குவதில் ஏதேனும் சிக்கல் இருப்பின், அமைதியான இயற்கை ஒலிகளை இசைப்பது, அமைதியான சூழலை உருவாக்குவது போன்ற தூங்கும் சூழ்நிலையைப் பெறலாம்.

விரும்பிய செயல்களுடன் ஒன்றிணைவது

பொதுவாக, நாம் விரும்பும் செயல்களைச் செய்யும்போது நம் உடலும் மனமும் உடனடியாகப் புத்துணர்ச்சி அடைவதை உணரலாம். எனவே, வேலை மற்றும் அன்றாட வேலைகளைத் தவிர, மகிழ்ச்சியைத் தரக்கூடிய பொழுதுபோக்கைக் கண்டறிய வேண்டும். அதன் படி, சமையல், வாசிப்பு, ஜர்னலிங், ஓவியம் போன்ற பொழுதுபோக்கிற்காக நேரத்தை ஒதுக்கலாம். இது மனநிலையை மேம்படுத்துவதுடன், உற்பத்தித் திறன் மற்றும் கவனத்தில் பெரிய மாற்றங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Body Massage Oil: உடலை ரிலாக்ஸா வைக்க இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்க

வெளியில் செல்வது

நம் உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பாக இருக்க, தினமும் சுத்தமான காற்றை சுவாசிப்பது அவசியமாகும். இன்றைய காலகட்டத்தில் உட்கார்ந்த வாழ்க்கைமுறையில் நாம் மிகவும் சோம்பேறியாகவும், சோர்வாகவும் உணர்கின்றோம். இது நமது ஆரோக்கியத்தில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே தினசரி வழக்கத்தில் 20 -30 நிமிடங்கள் ஜாகிங் அல்லது நடைபயிற்சி செய்யலாம். இயற்கையான காற்றை சிறிது நேரம் சுவாசிப்பது மனம், உடல் மற்றும் ஆன்மாவை புதுப்பிக்கும் விதமாக அமைகிறது.

அமைதிப்படுத்துதல்

அன்றாட வாழ்க்கையில் நாம் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கிறோம். இதனைக் கையாள்வதி சோர்வடைந்து விடுகிறோம். எனவே, நம் மனம் அமைதியாகி சரியான முடிவை எடுக்க அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 நிமிடங்கள் தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது நேர்மறையான எண்ணங்களை ஒழுங்கமைக்கவும், சரியாக வேலை செய்யவும், சிறப்பாக சிந்திக்கவும் உதவுகிறது. மேலும், உறங்கும் முன் படுக்கையில் அமர்ந்து தியானம் செய்யலாம் அல்லது சில நிமிடங்களுக்கு விழித்திருக்கும் போது மனம் மற்றும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் சில நீட்சிப்பயிற்சிகளுடன் இணைந்து தியானம் செய்யலாம்.

தினமும் இந்த அன்றாட பழக்க வழக்கங்களைக் கையாள்வதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mental Health During Summer: கோடை வெயிலில் மன அழுத்தமா? எப்படி தப்பிப்பது?

Image Source: Freepik

Read Next

Moisturize Your Face: மாய்ஸ்சரைசர் பயன்படுத்தும் போது மறந்து இந்த தவறுகளைச் செய்யாதீர்கள்!!

Disclaimer