What is the best morning routine according to ayurveda: ஆயுர்வேத முறைப்படி, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பேணுவதற்கும் சில குறிப்பிட்ட சடங்குகளைப் பின்பற்றலாம். அதன் படி, குறிப்பிட்ட ஆயுர்வேத காலைப் பயிற்சிகளைப் பின்பற்றுவது உடலை நச்சு நீக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், நீண்ட ஆயுளை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த நடைமுறைகளைக் கையாள்வது நமது உடலின் இயற்கையான தாளங்களை இயற்கையுடன் சீரமைக்கவும், உகந்த ஆரோக்கியத்தை வழங்கவும் வழிவகுக்கிறது.
ஆரோக்கியமான வாழ்க்கையைக் கடைபிடிக்க, சில ஆரோக்கியமான காலைப்பழக்கங்களைக் கையாள்வது நன்மை பயக்கும். ஏனெனில் அன்றாட பழக்க வழக்கங்களின் உதவியுடனே நாம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான படிகளை அடைய முடியும். இது நீண்ட கால வாழ்க்கைக்கு உதவும் படிகளாகும். இதில் ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுக்கு உதவக்கூடிய காலை நேரத்தில் பின்பற்றக்கூடிய ஆயுர்வேத சடங்குகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: குளிக்கும்போது சிறுநீர் கழிப்பது இயல்பானதா.? இதனால் என்ன ஆகும் தெரியுமா.?
ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுக்கு பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத குறிப்புகள்
அதிகாலையில் எழுவது
ஆயுர்வேதத்தின் படி, ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுக்கு அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். அதாவது சூரிய உதயத்திற்கு முன்பாக பிரம்ம முகூர்த்த நேரமாக விளங்கும் சுமார் அதிகாலை 4:30-6:00 மணிக்கு எழுவதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், இந்த நேரம் மிகவும் அமைதியான மற்றும் ஆன்மீக ரீதியாக உற்சாகமளிக்கும் நேரமாகக் கருதப்படுகிறது. ஆய்வு ஒன்றில், அதிகாலையில் எழுவது பரிந்துரைக்கப்பட்ட ஒழுக்கமாகவும், இது உடலின் சக்தியை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. இது மனத்தெளிவை மேம்படுத்தவும் உதவுகிறது.
நாக்கை சுத்தம் செய்வது
நாக்கை சுத்தம் செய்வதை காலை வழக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தின் படி, காலையில் நாக்கை சுத்தம் செய்வது, இரவில் நாக்கில் படியக்கூடிய நச்சுக்களை நீக்க உதவுவதாக நம்பப்படுகிறது. அதே சமயம், நாக்கை சுத்தம் செய்ய செம்பு அல்லது துருப்பிடிக்காத எஃகு நாக்கு ஸ்கிராப்பரைப் பயன்படுத்துவது நல்லது. இது நாக்கின் பாக்டீரியாக்களை நீக்குகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், சுவை உணர்வை மேம்படுத்தவும் உதவுகிறது. நாக்கைச் சுத்தம் செய்வதைப் புறக்கணிப்பதன் காரணமாக, வாய் துர்நாற்றம், நச்சுப் படிதல் மற்றும் குடல் ஆரோக்கியம் மோசமடைதல் போன்றவற்றிற்கு வழிவகுக்கலாம். இது காலப்போக்கில் பல்வேறு நோய்களுக்கு பங்களிக்கலாம்.
முகம் மற்றும் கண்களை குளிர்ந்த நீரால் சுத்தம் செய்வது
ஆயுர்வேதத்தின் படி, காலையில் முகத்தையும் கண்களையும் குளிர்ந்த நீரால் சுத்தம் செய்ய வேண்டும். காலை எழுந்த பிறகு இவ்வாறு முகம் மற்றும் கண்களை கழுவுவதன் மூலம் சேமித்து வைக்கப்பட்டுள்ள நச்சுக்களை அகற்றி புலன்களை புத்துயிர் பெறுவதற்கு உதவுகிறது. இது வறட்சி அல்லது அசௌகரியத்தைத் தவிர்க்கவும், கண்பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆயுர்வேதத்தின் படி, மூலிகை கலந்த தண்ணீரைக் கொண்டு கண்களைச் சுத்தப்படுத்துவது நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளிப்பது விழிப்புணர்வு மற்றும் நரம்பு மண்டலத் தூண்டுதலை ஊக்குவிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Morning Habits: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்த விஷயங்களை காலையில் செய்யுங்க!
பிராணயாமம் செய்வது
அடுத்த படியாக, கட்டுப்படுத்தப்பட்ட சுவாசப் பயிற்சியான பிராணயாமம் மேற்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஊக்குவிக்கக்கூடிய ஒரு அடிப்படை ஆயுர்வேத பழக்கமாகும். அதன் படி, அனுலோம் விலோம் என்ற மாற்று நாசி சுவாசம் போன்ற ஆழமான சுவாசப் பயிற்சிகளுடன் நாளைத் தொடங்குவது மூளைக்கு ஆக்ஸிஜன் வழங்குதலை ஊக்குவிக்கிறது. மேலும், இது நுரையீரலை நச்சுக்களை நீக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஆராய்ச்சியின் படி, பிராணயாமம் செய்வது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் சுவாச நோய்களைத் தவிர்க்க உதவுகிறது.
மசாலா பொருள்களைச் சேர்ப்பது
ஆயுர்வேதத்தின் படி, வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமான மேம்பாட்டில் காலை வழக்கத்தில் மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது மிகுந்த நன்மை பயக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. காலையில் மஞ்சள், இஞ்சி மற்றும் கருப்பு மிளகு கலந்த வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. இது உடலிலிருந்து நச்சுக்களை நீக்கி உடலை சுத்தப்படுத்துகிறது. இந்த மசாலாப் பொருட்களின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மூலம் தொற்றுக்கள் மற்றும் நாள்பட்ட நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிரது.
ஆயுர்வேத முறைப்படி, இந்த காலைப் பழக்கங்களைக் கையாள்வது ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நீண்ட கால ஆயுளுக்கு வழிவகுக்கிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Morning habits for success: தினமும் காலையில் இதை செய்தால் கடினமான இலக்கையும் எளிதில் அடையலாம்
Image Source: Freepik