ஆயுளை அதிகரிக்க மூணு வேளையும் இந்த உணவுகளை சாப்பிடுங்க - மருத்துவர் சிவராமன் அட்வைஸ்!

நாம் மூன்று வேளையும் சாப்பிடக்கூடிய உணவுகளில் கவனம் செலுத்தினாலே உடல் நலத்துடன், நீண்ட ஆயுளையும் பெறலாம் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அதற்கான ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலையும் அவர் கூறியுள்ளார். 
  • SHARE
  • FOLLOW
ஆயுளை அதிகரிக்க மூணு வேளையும் இந்த உணவுகளை சாப்பிடுங்க - மருத்துவர் சிவராமன் அட்வைஸ்!


காலை உணவு எடுத்துக்கொண்டால், நாம் நெடுங்காலமாக சிறப்பாக சொல்லும் இட்லி தான் முதலிடத்தில் உள்ளது. சின்னச்சிறு குழந்தைகள் முதல் 20 வயது வரை உள்ள இளம் தலைமுறையினர் வரை ஆவியில் வேகவைத்த இட்லி அல்லது தோசை போன்ற அரிசி மாவு உணவுகளை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது எனத் தெரிவித்துள்ளார். ஆனால் 35 வயது 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தினம் நான் இட்லி மிளகாய் பொடிக்கு எண்ணெய் விட்டு தான் சாப்பிடுவேன், சாம்பார் இட்லி தான் சாப்பிடுவேன், ஒரு நாளைக்கு காலையில அஞ்சு இட்லி சாப்பிடுவேன், பொங்கல் சாப்பிடுவேன் கூட ஒரு வடை வச்சுப்பேன், கொஞ்சம் பூரிக்கிழங்கு இருந்தா எடுப்பேன்னு நம்ம தினம் எடுத்தோம்னா அதுவும் நமக்கான ஆரோக்கிய கேடுதான் என எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: அடப்பாவிகளா!... ஓட்ஸில் இவ்வளவு கலப்படமா? - எச்சரிக்கும் மருத்துவர்!

காலை உணவாக எதைச் சாப்பிடுவது நல்லது?

இனி மேல் நல்ல காலை உணவு என்பது நிறைய காய்கறி, நிறைய சுண்டல், நல்ல முளைகட்டிய பயறு, கொஞ்சம் அவல் கொஞ்சம் பழத்துண்டுகள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் சிவராமன். நீங்க என்ன புதுசா ஒரு கதை சொல்லுறீங்க, மரபில் பழங்களையும் ஆவியில் வேகவைத்த உணவுகளையும் சாப்பிட சொல்லி இருக்காங்களா? என நீங்கள் கேட்கலாம். ஆம், காலை உணவாக பழங்கள், சிறுதானியகள், முளைக்கட்டிய பயிறுகளைத் தான் நம் முன்னோர்கள் உண்டு வாழ்திருக்கிறார்கள்.

image
curd-idli-recipe-1733479053736.jpg

நமது குழந்தைகளுக்கு இட்லி,தோசை,இடியாப்பம் செய்து கொடுக்கலாம். ஆனால் ஒரு 35 - 40 வயதுக்கு மேல் வரும்போது இப்படியான காலை உணவவை எடுத்துக் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது எனத் தெரிவித்துள்ளார்.

மாலை உணவு எப்படியிருக்கணும்?

மதிய உணவைப் பொறுத்தவரை, மொத்த உணவுல 75 சதவீதம் காய்கறி, கீரை தான் இருக்கணும், 25 சதவீதம் தான் தானியங்கள் இருக்கணும் என அடித்துக்கூறுகிறார். நீரழிவு உள்ளிட்ட நோய்கள் எட்டிப்பார்க்கக்கூடாது, நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் நீங்கள், இதை தான் பின்பற்ற வேண்டும். 75 சதவீத உணவு காய்கறி, கீரை மற்றும் இறைச்சியாக இருக்க வேண்டும். இறைச்சி என்றதும் மட்டனுக்கு தாவக்கூடாது. அசைவ உணவுகளைப் பொறுத்தவரை முதலில் மீன் தான் சிறந்த தேர்வு, அதற்கு அடுத்தப்படியாக நாட்டுக்கோழி இறைச்சி, கடைசியாக தான் ஆட்டிறைச்சி வருகிறது.

அதேபோல் மதிய உணவில் அரிசியைக் குறைத்துக்கொண்டு தானியங்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். அப்படியான தானியங்களில் கூட நல்ல மரபு தானியங்களாக இருக்க வேண்டும். மாப்பிள்ளை சம்பா, காட்டியானம், தூய சம்பா, கருப்பு கவுனி அரிசி, கம்பு, வரகு, சோளம், ராகி மாதிரியான உணவுகளை நாம் தினந்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

image
fiber-rich-foods-in-tamil-main

“வெள்ளை வெளேர்னு பாலிஷ்டு கிரைடு அரிசிகளை சாப்பிட வேண்டாம். இதுல ரொம்ப முக்கியமான விஷயம் மரபு சார்ந்த தானியங்கள். இதை ஏன் திரும்ப, திரும்ப எல்லா காலகட்டத்திலும் வலியுறுத்துறேன்னா. இந்த மரபு அரிசிகள், மரபு தானியங்கள் எல்லாமே சூழலுக்கு இசைவான ஒரு விஷயம் சிவப்பு நிற மாப்பிள்ளை சம்பா அரிசி பார்த்திருப்போம். அது நல்ல சிவப்பு அரிசியா இருக்க, அதிலுள்ள லைகோபின் என்ற வேதிப்பொருள் தான் காரணம். அதேபோல் கருப்பு அரிசியில் இருக்கக்கூடிய கருநீல நிறம் அல்லது கரு நிறத்திற்கு ஆனந்தோசைனின்ஸ் காரணமாக உள்ளது. இவை எல்லாம் அந்த அரிசியில வந்து சேர்றதுக்கு அந்த தாவரத்தினுடைய வேர் முடிச்சுகளில் இருக்கக்கூடிய ஏராளமான பூஞ்சைகளும், அந்த மண்ணில் இருக்கக்கூடிய நுண்ணுயிரிகளும் கடுமையாக உழைத்தால் மட்டும்தான் முடியும்” என அரிசியைப் பற்றி மட்டுமே விரிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

மசாலா பொருட்களில் அடங்கியிருக்கும் மந்திரம்:

ஸ்பைசஸ் எனப்படும் மணமுட்டிகள் நமக்கு கிடைச்சிருக்கிற ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். மஞ்சள், இஞ்சி, பூண்டு, வெந்தயம், கருவேப்பிலை, சீரகம், சோம்பு, அன்னாசிப்பூ, லவங்கப்பட்டை, சாதிக்காய், ஜாதிபத்திரி எல்லா மசாலா பொருட்களும் வெறுமன பிரியாணியை ஸ்மெல்ல தூக்குறதுக்காக மட்டும் அல்ல. அவை ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் தரக்கூடியது என்கிறார் மருத்துவர் சிவராமன்.

image
what-herbs-and-spices-helps-to-burn-belly-fat-Main-1732272604270.jpg

மஞ்சள் பால், சீரகத் தண்ணீர், கொத்தமல்லி தேநீர், மிளகுத்தூள் ஆகியவை ப்ரீபயாடிக்காக செயல்பட்டு குடலில் இருக்கக்கூடிய நல்லது செய்யக்கூடிய பாக்டீரியாவுக்கு நன்மை பயக்குகின்றன. அதேபோல் வாரத்தில் 6 நாட்களும் இனிப்பு, காரம், புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய அறுசுவைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், சர்க்கரைக்கு பதிலாக பழங்கள் மூலமாக இனிப்புச்சுவையை அனுபவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆயுளை அதிரிக்க விரும்பினால் மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களோடு, ஆன்லைன் ஆர்டர்கள் மற்றும் ஓட்டல்களில் சாப்பிடுவதை கை கழுவி விட்டு வீட்டிலேயே நல்ல முறையில் சமைத்து சாப்பிட வேண்டும் என்பதை ஸ்ட்ரிட்டாக வலியுறுத்தியுள்ளார்.

Image Source: Freepik

Read Next

தினமும் ஒரு கைப்பிடி கருப்பு திராட்சை சாப்பிடுவதால் பல நன்மைகளை பெறலாம்.!

Disclaimer

குறிச்சொற்கள்