Fri Sep 11, 2026 | 11:45 PM IST

Doctor Verified

BP குறைய உதவும் சின்ன வெங்காய தயிர் பச்சடி! – சித்த மருத்துவர் சிவராமன் சொல்வது என்ன?

சித்த மருத்துவர் சிவராமன் கூறும் முக்கிய மருத்துவ குறிப்பு - சல்ஃபோரில், ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்த சின்ன வெங்காய தயிர் பச்சடி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுமா? இதன் நன்மைகள் என்ன? முழு விளக்கம் இங்கே.

அன்றாட உணவுகளுக்குள் மறைந்து இருக்கும் மருத்துவ நன்மைகளை எளிய முறையில் விளக்கி வருபவர் சித்த மருத்துவர் சிவராமன். பொதுமக்கள் எளிதாக புரிந்துகொள்ளும் விதமாக நம் சமையலறை உணவுகள் தரும் ஆரோக்கிய பலன்களை அவர் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், BP (Blood Pressure) குறைய தயிர் பச்சடி ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படும் என அவர் ட்ரெண்ட்கேர்தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளார்.

சல்ஃபோரில் சத்தும், அதிக ஆன்டி-ஆக்ஸிடென்டும் நிறைந்த உணவு

சிவராமன் கூறியதன்படி, நம்முடைய வீட்டில் தினமும் தயாரிக்கப்படும் சின்னவெங்காயம் சேர்க்கப்பட்ட தயிர் பச்சடி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. குறிப்பாக மோரில் சல்ஃபோரில் (Sulforaphile) சத்து நிறைந்து காணப்படுகிறது. இது உடலின் ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரெஸ்ஸை குறைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. சின்னவெங்காயத்தில் இருக்கும் பீனாலிக் அமிலங்கள் (Phenolic Acids) உடலில் உள்ள அழற்சிகளை குறைக்கும் வகையில் செயல்படுகின்றன. இவை இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்று அவர் விளக்கினார்.

இரத்த அழுத்தம் குறைய உதவும் இயற்கை கூட்டணி

சின்னவெங்காயம் + தயிர் என்ற இந்த இரண்டு உணவுகளின் இணைப்பு, இரத்தக் கொதிப்பை குறைக்கும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்,அழுத்தத்தை இயல்பாக்கும் என்ற பல நன்மைகளை தருகிறது. இரத்த அழுத்தம் இல்லாதவர்களும் கூட, நாள்தோறும் அதிக உப்பை தவிர்த்து, சின்ன அளவில் தயிர் பச்சடியை சேர்த்துக் கொள்வது நீண்ட நாள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என சிவராமன் குறிப்பிட்டார்.

இந்த பதிவும் உதவலாம்: கொள்ளு சாப்பிடுறீங்களா? பெண்களுக்கான ரகசிய நன்மைகள் இங்கே!

உப்பு கட்டுப்பாடு – நீண்ட நாள் ஆரோக்கியத்தின் திறவுகோல்

“நமக்கு இரத்த அழுத்தம் அல்லது இதயம் தொடர்பான நோய்கள் இல்லையென்றாலும் கூட, உப்பு நிறைந்த உணவுகளை குறைக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார். உப்பின் அளவை கட்டுப்படுத்துவது, இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், திடீர் ஸ்ட்ரோக் போன்ற அபாயங்களை குறைக்கும் என அவர் தெரிவித்தார்.

இறுதியாக..

சின்னவெங்காயம் சேர்த்த தயிர் பச்சடி சத்துகளால் நிறைந்து, பிபி குறைப்பதில் இயற்கையான ஆதரவாக செயல்படுகிறது என்பதை சித்த மருத்துவர் சிவராமன் தெளிவாக கூறுகிறார். சல்ஃபோரில், ஆன்டி-ஆக்ஸிடென்ட், பீனாலிக் அமிலங்கள் போன்ற சத்துகள் உடலை சுத்தப்படுத்தி, இதயம் மற்றும் இரத்த ஓட்டத்தை பாதுகாக்கின்றன. அதே சமயம் உப்பு குறைப்பு நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்பது மருத்துவ ரீதியாக உறுதியான உண்மை.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உடல்நலத்திற்காகப் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சித்த/ஆயுர்வேத நிபுணரை அணுகவும். தனிநபர் உடல்நிலை பற்றிய மருத்துவ ஆலோசனை இந்த கட்டுரையில் வழங்கப்படவில்லை.

Read Next

பாலிவுட் ஹீ-மேன் தர்மேந்திரா மறைவு: 65 ஆண்டுகால திரைப் பயணத்திற்கு முடிவிட்ட மரணச் செய்தி!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 27, 2025 12:58 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content