Thu Oct 29, 2026 | 10:50 AM IST

Doctor Verified

எலும்புகளை வலுப்படுத்தும் பிரண்டை சட்னி – மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்த ஆரோக்கிய ரெசிபி!

மருத்துவர் சிவராமன் கூறியபடி எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பிரண்டை சட்னி தயாரிக்கும் முறை, அதன் சத்துகள் மற்றும் முழு செய்முறை இங்கே.
எலும்புகளை வலுப்படுத்தும் பிரண்டை சட்னி – மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்த ஆரோக்கிய ரெசிபி!எலும்புகளை வலுப்படுத்தும் பிரண்டை சட்னி – மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்த ஆரோக்கிய ரெசிபி!

இயற்கை உணவுப் பொருட்களில் நம் உடலுக்கு தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துகள் இருந்தாலும், அவை எளிமையாகக் கிடைப்பதால் பெரும்பாலும் நாம் அவற்றின் உண்மையான மதிப்பை கவனிக்காமல் விடுவோம். அவ்வகையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஒரு தாவரம் தான் பிரண்டை.

பிரண்டை உடல் வலிமையை அதிகரித்து, குறிப்பாக எலும்புகளுக்கு வலு சேர்க்கும் திறன் கொண்டது என புகழ்பெற்ற மருத்துவர் டாக்டர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதனை சட்னியாக செய்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துகளை எளிதில் பெறலாம் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். இந்தப் பின்னணியில், வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய பிரண்டை சட்னி ரெசிபி என்ன என்பதைப் பார்ப்போம்.

பிரண்டை சட்னி ரெசிபி

தேவையான பொருட்கள்

  • பிரண்டை
  • எண்ணெய்
  • உளுந்து
  • பூண்டு
  • சின்ன வெங்காயம்
  • கறிவேப்பிலை
  • வரமிளகாய்
  • புளி
  • கொத்தமல்லி
  • தேங்காய்
  • உப்பு

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.

இதில்:

  • 2 Tbsp உளுந்து
  • 5 பூண்டு பற்கள்
  • 10 சின்ன வெங்காயம்
  • கறிவேப்பிலை
  • 2 வரமிளகாய்
  • சிறிதளவு புளி

என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர்,

  • சிறிதளவு கொத்தமல்லி
  • 1 கப் துருவிய தேங்காய்

சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கி ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.

  • அதே கடாயில் 1 கப் பிரண்டை துண்டுகளை சேர்த்து தனியாக வதக்க வேண்டும்.
  • இந்த பிரண்டையையும் முன்பு வதக்கிய பொருட்களுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

இறுதியாக கடாயில் எண்ணெய் சூடாக்கி:

  • கறிவேப்பிலை
  • கடலை பருப்பு

தாளித்து அரைத்த சட்னி மீது ஊற்றினால் சுவையானதும் சத்தானதும் ஆன பிரண்டை சட்னி தயாராகிவிடும்.

இந்த பதிவும் உதவலாம்: Kollu Chutney: அற்புதம் செய்யும் கொள்ளு.! சுவையான சட்னி எப்படி செய்யலாம்னு பாக்கலாம்..

ஏன் பிரண்டை சட்னி அவசியம்? – மருத்துவ பார்வை

மருத்துவர் சிவராமன் விளக்குவது:

  • எலும்பு அடர்த்தியை உயர்த்த உதவும் சத்துகள் பிரண்டையில் அதிகம்
  • உடல் வலிமையை மேம்படுத்தும் திறன்
  • இயற்கையான ஆன்டி-ஆக்சிடண்ட்கள்
  • குடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது
  • உடலில் உள்ள அழற்சி மற்றும் வலி குறைய உதவும்

எளிமையான ஒரே சட்னியாக இருந்தாலும், இது உடலுக்கு முழுமையான சத்து தொகுப்பு என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இறுதியாக..

பிரண்டை சட்னி என்பது சுவையும், ஆரோக்கியமும் இணைந்த ஒரு மிகச் சிறந்த இயற்கை உணவு. எலும்பு வலிமை, உடல் ஆரோக்கியம், செரிமான நலம் போன்ற பல நன்மைகளை வழங்குவதால் இதனை இடையீடற்ற உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிக நன்மை தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Disclaimer: இந்தக் கட்டுரை நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் மற்றும் பொது தகவல் அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு முறைகளைப் பின்பற்றுவதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

→ ஒமேகா-3 உடலுக்கு எவ்வாறு நன்மை பயக்கும்? அதை எப்படி எடுத்துக் கொள்ளலாம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 04, 2025 16:26 IST

    Published By : Ishvarya Gurumurthy