Sat Sep 12, 2026 | 12:22 AM IST

Doctor Verified

சர்க்கரை நோயைத் தடுக்க கறிவேப்பிலை ஒரு இயற்கை மருந்து.! மருத்துவர் சிவராமன் முக்கிய விளக்கம்..

மருத்துவர் சிவராமன் கூறும் முக்கியமான உணவு வழிகாட்டுதலில், கறிவேப்பிலை சர்க்கரை நோயைத் தடுக்க எப்படி உதவுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தமிழர்கள் “உணவே மருந்து” என்ற தத்துவத்தோடு வாழ்ந்தவர்கள். ஆனால் இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு பழக்க மாற்றம் காரணமாக பல்வேறு நோய்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, தற்போது பெரும்பாலான தமிழர்கள் சர்க்கரை நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நமது உணவில் அவசியமாக சேர்த்துக்கொள்ள வேண்டிய சில உணவுப் பொருட்களை குறித்து மருத்துவர் சிவராமன் தனது ஆலோசனையில் பகிர்ந்துள்ளார்.

Video Link:  https://youtu.be/kwGySYXlBHY

சர்க்கரை நோயைத் தடுக்க கறிவேப்பிலை!

மருத்துவர் சிவராமன் கூறியதாவது, “நம் சமையலறையில் தினமும் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை, சர்க்கரை நோயைத் தடுப்பதில் மிகப் பெரிய பங்காற்றுகிறது.” அவரது விளக்கத்தின் படி,

* பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அடுத்த தலைமுறையினருக்கும் அந்த நோய் பரவும் அபாயம் அதிகமாக இருக்கும்.

* ஆனால், கறிவேப்பிலை (Curry Leaves) உடலில் அந்த மரபணு தாக்கத்தைத் தடுக்கவும், இன்சுலின் அளவை சமநிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது.

மேலும், கறிவேப்பிலையின் மருத்துவ குணங்களை அடிப்படையாகக் கொண்டு சிகாகோ பல்கலைக்கழகம் (University of Chicago) கூட காப்புரிமை (Patent) பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கீரைகளின் சத்துக்கள்

“நம் உடல்நலத்துக்கு கீரைகள் மிகவும் அவசியமானவை. அதில் உள்ள சிறிய கனிமங்கள், உப்புகள், ஃபோலிக் ஆசிட் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் வேறு எந்த உணவிலும் இல்லை” என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இந்த சத்துக்கள் உடல் சக்தியை மேம்படுத்தும், நரம்பு செயல்பாட்டை சீராக்கும், மற்றும் நீண்டநாள் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் என அவர் கூறுகிறார்.

கீரைகள் பெண்களுக்கு மட்டுமே என்கிற தவறான கருத்து

முன்னர் ஒரு காலத்தில் கீரை உணவு என்பது பெண்களுக்கே என்று கருதப்பட்டு, அது ஒரு இழிவான உணவாக பார்க்கப்பட்டது. இந்த மனப்பாங்கு சமூகத்தில் தவறான கட்டமைப்பை உருவாக்கியதாகவும், இதனால் ஆண்கள் மற்றும் இளைஞர்கள் கீரைகளை தவிர்த்து வெளிநாட்டு உணவுகள் பக்கம் தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பெஸ்ட் ஸ்நாக்ஸ்.!

மரபு உணவுகளை புதுமையாக ஏற்க வேண்டும்

“நம் முன்னோர்கள் சாப்பிட்ட கீரை, தானியம், இயற்கை உணவுகளை ‘பழமை’ என்று ஒதுக்க வேண்டாம். இவை புதுமையுடன் மீண்டும் நம் வாழ்க்கையில் புகுத்தப்பட வேண்டிய மரபு சார்ந்த ஆரோக்கிய உணவுகள்,” என மருத்துவர் சிவராமன் வலியுறுத்துகிறார்.

இறுதியாக..

தமிழர்களின் மரபு உணவுகள் சத்தும் சுகமும் இணைந்தவை. கறிவேப்பிலை, கீரைகள் போன்ற இயற்கை உணவுகள், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைத் தடுக்கும் இயற்கை மருந்துகளாக செயல்படுகின்றன. மருத்துவர் சிவராமன் கூறுவது போல – “உணவே மருந்து என்றால், நம் சமையலறையே நமக்கான மருந்தகம்.”

Disclaimer: இந்தக் கட்டுரை, பொதுத் தகவல் மற்றும் மருத்துவர் சிவராமன் பகிர்ந்த அறிவுரையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இது மருத்துவ ஆலோசனை அல்ல. எந்தவொரு சிகிச்சையையும் தொடங்குவதற்கு முன் அல்லது உணவு பழக்கங்களை மாற்றுவதற்கு முன், உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

சர்க்கரை சாப்பிடணும்.. ஆனா சுகர் லெவல் ஏறக்கூடாதா? மருத்துவர் தரும் இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 04, 2025 14:09 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content