அடப்பாவிகளா!... ஓட்ஸில் இவ்வளவு கலப்படமா? - எச்சரிக்கும் மருத்துவர்!

How much pesticides are in oats: 25 ஆண்டுகளுக்கு குதிரைக்கு உணவாக கொடுக்கப்பட்ட ஓட்ஸ், இன்று தமிழக மக்களின் பிரதான உணவாக மாறி வருவது குறித்து மருத்துவர் சிவராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் ஏராளமான ரசாயன கலவைகள் பயன்படுத்துவதாக எச்சரித்துள்ள அவர், அவலின் அற்புத நன்மைகளையும் எடுத்துரைத்துள்ளார்.
  • SHARE
  • FOLLOW
அடப்பாவிகளா!... ஓட்ஸில் இவ்வளவு கலப்படமா? - எச்சரிக்கும் மருத்துவர்!


ஓட்ஸ் வெளிநாடுகளில் பிரதான காலை உணவாக பயன்படுத்தப்பட்டு வந்த இது, தற்போது தமிழர்களின் இட்லி, தோசைக்கு போட்டியாக மாறி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டின் ஓவர் நைட் ஓட்ஸ் கலாச்சாரம் நம்மையும் தொற்றிக்கொண்டுள்ளது. பாலை ஊற்றி பெயருக்கு சிறிதளவு நட்ஸ், விதைகள், பழங்களை கலந்து இரவு முழுவதும் ப்ரீட்ஜில் வைத்து காலையில் அப்படியே எடுத்து சாப்பிடக்கூடிய இந்த ஓவர் நைட் ஓட்ஸ், ஆரோக்கியமானது என சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ஆயுளை அதிகரிக்க மூணு வேளையும் இந்த உணவுகளை சாப்பிடுங்க - மருத்துவர் சிவராமன் அட்வைஸ்!

அதனைப் பார்த்து இன்றைய குழந்தைகள் முதல் இளம் தலைமுறையினர் வரை பலரும் ஓட்ஸை தங்களது தினசரி உணவாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இது மிகப்பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கும் என மருத்துவர் சிவராமன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் சிவராமன் கூறுகையில், “25 ஆண்டுகளுக்கு முன்னாடி ஓட்ஸ் ஒரு உணவு என்பதே நம் மக்களுக்கு தெரியாது. அது குதிரைக்கு போடக்கூடிய போடக்கூடிய உணவாகத்தான் பார்க்கப்பட்டது. இப்போ அது அன்றாடம் நம் வீட்டு சமையலறையில் இருக்கக்கூடியதாக மாறிவிட்டது. நான் கோயம்புத்தூர்ல பார்த்திருக்கேன், ஈரோடுல பார்த்திருக்கேன், நாமக்கல்ல பார்த்திருக்கேன், அதிகம் பஸ் நுழையாத இடத்துல கூட ஓட்ஸ் பாக்கெட் நுழைஞ்சிருக்கு” என்கிறார்.

ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது கிடையாதா?

ஓட்ஸ் நல்ல தானியம் தான். அதில் பீட்டா குளுக்கோன் இருக்கு, புரதம், வைட்டமின் என ஊட்டச்சத்துக்கள் எல்லாம் இருக்கு. ஆனால் இதை நாம் அரிசி, கோதுமை வாங்குவது போல் கிலோ கணக்கில் கடைகளில் வாங்குவது கிடையாது. நாம் வாங்குவது அனைத்துமே ஓட்ஸ் கிடையாது. ஓட்ஸ் அவல் அதாவது ஒரு தானியம் அவலாக மாறுவதற்கு நிறைய தொழில்நுட்பம் இருக்கிறது என்கிறார்.

“மக்கா சோளம் அல்லது ஓட்ஸ் தானியத்தை 80 முதல் 100 டிகிரில் வேகவைப்பார்கள். கிட்டத்தட்ட 100 டன் எந்திரத்தால அடிச்சு தட்டையாக்கி, பிறகு அதை 200 டிகிரில் சூடேற்றி அதில் இருக்கும் நீர்த்துவத்தை முழுமையாக நீக்கிய பின்னரே ஓட்ஸ் அல்லது கான்பிளக்ஸ் தயாரிக்கப்படுகிறது” என அவர் சொல்வதை கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.

பேக்கிங் டு வாசனை முதல் அனைத்துமே கலப்படம்:

தொழிற்சாலைகளில் ஓட்ஸ் தானியத்தில் உள்ள சத்துக்கள் நீக்கப்பட்ட பிறகு, பெயருக்கு வைட்டமின் டி, வைட்டமின் சி, வைட்டமின் பி என வேதிப்பொருட்கள் மேலே தெளிக்கப்படுகின்றன. இவை அதிகபட்சமாக 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை மட்டுமே கெட்டுப்போகாமல் இருக்கும். ஆனால் இதனை 180 நாட்களுக்கு கெடாமல் வைத்திருப்பதற்காக ரசாயனங்கள் பயன்படுத்துகின்றன என எச்சரிக்கிறார்.

“ஓட்ஸ் பொலபொலவேன்று உதிர அதில் சிலிகேட் உப்புக்கள் அடிக்கப்படுகிறது. இதனால் ஓட்ஸ் பாக்கெட்டை திறக்கும் போது வாடை வரக்கூடாது என்பதற்காக ஏகப்பட்ட வாசனை ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. ஓட்ஸ் மற்றும் கான்ப்ளக்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டக்கூடாது என்பதற்காக, நைட்ரஜன் வாயுவை அடைத்து வைக்கிறார்கள். ஈரத்தன்மை வந்துவிடக்கூடாதுங்கிறதுக்காக அதுக்குன்னு உள்ள ஸ்பெசிஃபைடு கெமிக்கல் உட்புறமாக பூசப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்கிறார்கள்” என படிப்படியாக விளக்கி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் ஓட்ஸ் தயாரிப்பில் மோனோசோடியம், குளூட்டமேட் சோடியம், நைட்ரேட் சோடியம், பென்சோவேட், நைட்ரஜன் எனாட் கேஸ் என செயற்கையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால், இது மனித உடலுக்கு ஆரோக்கியத்தை அல்ல கொத்து கொத்தாக நோய்களையே பரிசளிக்கும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Image Source: Freepik

Read Next

Egg Yolk: முட்டை மஞ்சள் கரு Vs வெள்ளை கரு.. எதில் கொழுப்பு அதிகம்? உண்மை இதோ!

Disclaimer

குறிச்சொற்கள்