ஓட்ஸ் Vs அவல்; எதை காலை உணவாக சாப்பிடுவது நல்லது?

  • SHARE
  • FOLLOW
ஓட்ஸ் Vs அவல்; எதை காலை உணவாக சாப்பிடுவது நல்லது?


நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க, காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். அதன் ஒரு பகுதியாக அவலை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதைத் தவிர, நீங்கள் பல ஆரோக்கிய நன்மைகளைப் தருகிறது.

அதேசமயம் உடல் எடையைக் குறைக்க விரும்பும் பலரும் ஓட்ஸை தேர்வு செய்கின்றனர். குறிப்பாக ஓவர் நைட் ஓட்ஸ் உடல் எடை குறைப்பில் மிக இடத்தை பிடித்துள்ளது. அவலை காலை உணவாக தயார் செய்ய பெரும்பாலான நேரங்களில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் ஓட்ஸ் பால், பழங்கள், நட்ஸ் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் வகைகளை கொண்டு தயார் செய்யப்படுவதால் சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாக கருதப்படுகிறது.

ஓட்ஸ் Vs அவல் கலோரி அளவுகள் எவ்வளவு?

ஓட்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம் மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும். குறிப்பாக மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன. 100 கிராம் ஓட்ஸில் தோராயமாக 389 கலோரிகள், 66 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 17 கிராம் புரதம் மற்றும் 11 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அவலில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.மேலும் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற பல நுண்ணூட்டச்சத்துக்களும் உள்ளன. ஆனால் 100 கிராம் அவலில் 350 கிராம் அளவிற்கு மட்டுமே கலோரிகள் உள்ளன. இதில் 76.9% கார்போஹைட்ரேட் மற்றும் 23% கொழுப்பு உள்ளது. இதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாகும்.

காலை உணவாக போஹா -நன்மைகள் என்னென்ன?

  • காலை உணவாக அவல் சாப்பிட்டால் மதியம் வரை வயிறு நிறைவாக இருப்பது போல் உணர்வீர்கள். மேலும் இது உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் தருகிறது.
  • அவலில் அதிக அளவிலான இரும்புச்சத்து உள்ளது. எனவே இது கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் காலை உணவாக சாப்பிட சிறந்தது. இது ரத்த சோகை வராமல் தடுப்பதோடு, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும் உதவுகிறது.
  • அவலில் வைட்டமின் பி1 நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல காலை உணவு. இந்த வைட்டமின் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • இதிலுள்ள நல்ல புரதங்கள் உள்ளன. தசை வளர்ச்சி அல்லது சேதமடைந்த தசைகளை சரிசெய்து வலுப்படுத்த புரதங்கள் தேவைப்படுகின்றன. உடற்பயிற்சிக்குப் பின் அவல் சாப்பிடுவது தேவையான ஆற்றலைப் பெற உதவும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  • உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு அவல் சிறந்த காலை உணவாகும். இது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதால் தேவையில்லாத நொறுக்குத்தீனிகளை எடுத்துக்கொள்வது தவிர்க்கப்படுகிறது.

காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவது நல்லதா?

  • ஓட்ஸில் உள்ள புரோட்டீன்கள் தசைகளுக்கு வலிமையை அளிக்கின்றன.ஓட்ஸில் வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் குளுட்டமைன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன, இது புதிய தசைகள் உருவாக்குவதோடு, தசைகளை வலிமையாக்கவும் உதவுகிறது. ஓட்ஸை 8 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டால் போதும். ஒரு நாளைக்கு தேவையான புரதத்தில் 15 சதவீதம் கிடைக்கும்.
  • காலையில் ஓட்ஸ் சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நல்லது.ஓட்ஸில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் எக்ஸிமா மற்றும் சொறி வராமல் தடுக்கிறது.ஓட்ஸில் உள்ள துத்தநாகம் சருமத்தை சுத்தப்படுத்துகிறது.ஓட்ஸில் உள்ள இரும்புச்சத்து சரும செல்களை ஒளிரச் செய்கிறது.
  • ஓட்ஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை அரிப்பு, வீக்கம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.
  • ஓட்ஸில் உள்ள பீட்டா குளுக்கன் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைத்து, நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
  • ஓட்ஸில் மாவுச்சத்து நிறைந்துள்ளது, இது நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்க உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.
  • ஓட்ஸில் உள்ள ஃபைபர் பீட்டா குளுக்கன் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.ஓட்ஸில் உள்ள லினோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து இரத்த ட்ரைகிளிசரைடுகள், கெட்ட கொழுப்பைக் குறைத்து இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்துகிறது.

ஓட்ஸ் அல்லது அவல் - எது சிறந்தது?

ஓட்ஸ் அதிக நார்ச்சத்து மற்றும் இதய-ஆரோக்கியமான நன்மைகளுக்காக அறியப்படுகிறது, எடையை நிர்வகிக்க அல்லது கொழுப்பின் அளவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.

மறுபுறம், அவல் இலகுவானது, ஜீரணிக்க எளிதானது மற்றும் இந்திய உணவுகளில் பிரதானமானது, ஆற்றலுக்கான கார்போஹைட்ரேட்டுகளை வழங்குகிறது. இரண்டும் சத்தான விருப்பங்கள் தான், எனவே சிறந்த சுவை, அமைப்பு மற்றும் குறிப்பிட்ட சுகாதார இலக்குகள் போன்ற காரணிகளைப் பொறுத்தது உங்களுக்கு விரும்பமானதை தேர்வு செய்யலாம்.

Image Source: freepik

Read Next

பங்குனி உத்திர விரதத்தில் நீரேற்றமாக இருக்க செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை

Disclaimer

குறிச்சொற்கள்