Egg Yolk: முட்டை மஞ்சள் கரு Vs வெள்ளை கரு.. எதில் கொழுப்பு அதிகம்? உண்மை இதோ!

முட்டை அதிகமாக சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகரிக்கும் என பலரும் கருதுவது உண்டு, அதுவும் குறிப்பாக முட்டை மஞ்சள் கரு. உண்மையில் முட்டை மஞ்சள் கருவில் எந்த வகையான கொலஸ்ட்ரால் இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்வோம்.
  • SHARE
  • FOLLOW
Egg Yolk: முட்டை மஞ்சள் கரு Vs வெள்ளை கரு.. எதில் கொழுப்பு அதிகம்? உண்மை இதோ!


Egg Yolk: முட்டை மிகவும் சத்தான உணவாகும், இதிலிருந்து நல்ல அளவு புரதத்தைப் பெறலாம். ஆனால் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்காது, தீங்கு விளைவிக்கும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது.

குறிப்பாக முட்டையில் உள்ள மஞ்சள் கரு கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படும் என பலரும் கூறுவதுண்டு. சரி, இந்த தகவல் உண்மை தானா இதை நம்பலாமா என்பது குறித்து முழு பதில்களை இப்போது பார்க்கலாம்.

முட்டை மஞ்சள் கரு உண்மையில் உடலுக்கு நல்லதா?

கொலம்பியா ஆசியா மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும், உணவியல் நிபுணருமான டாக்டர் அதிதி ஷர்மா இதுகுறித்து கூறுகையில், முட்டை உலகின் மிகவும் சத்தான உணவுகளில் ஒன்றாகும், மேலும் அதன் பெரும்பாலான ஊட்டச்சத்து அதன் மஞ்சள் பகுதியில் அதாவது மஞ்சள் கருவில் காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை: Heavy Rains: மழை கொட்டித் தீரத்தாலும் கவலையே வேணாம்.. இதை மட்டும் பண்ணுங்க!

ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 2.5 கிராம் புரதம், 4.8 கிராம் கொழுப்பு, 1.7 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, 185 மி.கி கொலஸ்ட்ரால் மற்றும் 0.5 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. முட்டையில் உள்ள அனைத்து கொலஸ்ட்ரால்களும் மஞ்சள் நிறத்தில் மட்டுமே காணப்படுகின்றன, அப்போது வெள்ளை கருவில் என்ன உள்ளது என்ற கேள்வி உங்களுக்கு வந்தால், முட்டையின் வெள்ளை கருவில் முழுவதும் புரதம் மட்டுமே உள்ளது, அதேபோல் இதில் பூஜ்ஜிய கொலஸ்ட்ரால் இருக்கிறது.

முட்டை மஞ்சள் கரு கொழுப்பு அளவு

முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்வதால் எல்டிஎல் கொழுப்பின் அளவு 12% அதிகரிப்பதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. முதலில் ldl என்றால் என்ன hdl என்றால் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ldl மற்றும் hdl கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

கெட்ட கொலஸ்ட்ரால்: இந்த கொலஸ்ட்ரால் உங்கள் தமனிகளில் படிந்து உங்கள் இதயத்திற்கு ஆபத்தானதாகும், இது கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும்.

நல்ல கொலஸ்ட்ரால் அளவு: இது கொலஸ்ட்ராலை கல்லீரலாக மாற்றி உடலின் பல முக்கிய செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இது நல்ல கொலஸ்ட்ரால் ஆகும்.

egg yolk ldl hdl

உங்கள் உடல் கொலஸ்ட்ராலை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?

கொலஸ்ட்ரால் உங்கள் உடலுக்கு மிகவும் அவசியமானது, ஏனெனில் இது டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய பயன்படுகிறது. உங்கள் உடலுக்கு போதுமான அளவு கொலஸ்ட்ராலை உருவாக்க கல்லீரல் செயல்படுகிறது.

ஆனால் முட்டையின் மஞ்சள் கரு போன்ற கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை நீங்கள் உண்ணத் தொடங்கும் போது உங்கள் கல்லீரல் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. எனவே, இதுபோன்ற பொருட்களை நீங்கள் சிறிய அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும், ஏனெனில் அவை உங்கள் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கக்கூடும். அதேசமயம் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன.

ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்?

நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆனால் விஞ்ஞானத்தால் நிலையான அளவு எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை. இதைக் கண்டறிய, சிலர் தினமும் இரண்டு முதல் மூன்று முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்வது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தது ஆனால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அப்படியே இருந்தது கண்டறியப்பட்டது.

முட்டை சாப்பிடுவது இதயத்திற்கும் நல்லது என நம்பப்படுகிறது. எனவே, நீங்கள் ஆரோக்கியமான நபராகவும், கொலஸ்ட்ரால் பிரச்சனை இல்லாமலும் இருந்தால், ஒரு நாளைக்கு 2 முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடலாம். ஆனால் உங்கள் கொலஸ்ட்ரால் அளவு ஏற்கனவே அதிகமாக இருந்தால், மஞ்சள் கருவுடன் ஒரு நாளைக்கு 1 முட்டையை மட்டும் சாப்பிடுங்கள்.

இதையும் படிங்க: Fish For Heart: இதய நோயாளிகள் மீன் சாப்பிடலாமா? வாரம் இருமுறை மீன் சாப்பிடுவதன் நன்மைகள்!

தினசரி முட்டை சாப்பிடலாமா?

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்ற பயத்தில் முட்டை உட்கொள்வதை நிறுத்தினால், பல சத்துக்கள் கிடைக்காமல் போகும். எனவே, தினமும் குறைந்தது ஒன்று முதல் இரண்டு முட்டைகளை உட்கொள்ளலாம். இது உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது, மேலும் உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும், ஏனெனில் நீங்கள் முட்டையிலிருந்து நிறைய புரதத்தைப் பெறலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

image source: freepik

Read Next

தினமும் காலையில் சியா விதைகளை மஞ்சளுடன் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Disclaimer