நீங்கள் உண்ணும் அனைத்தும் உங்கள் எடையை நேரடியாக பாதிக்கிறது. அதிக கலோரி கொண்ட உணவுகள் உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும். நீங்கள் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உடல் எடையை குறைக்க, உங்கள் வழக்கமான உணவுத் திட்டத்தில் என்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை, ஆரோக்யா ஹெல்த்கேரின் நிர்வாக இயக்குநரும், தலைமை சித்த மருத்துவருமான, டாக்டர். ஜி. சிவராமன் இணைய தளத்தில் பகிர்ந்துள்ளார்.
எடை குறைய தவிர்க்க வேண்டிய உணவுகள் (Foods To Avoid For Weight Loss)
உடல் எடையை குறைக்க, என்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று, டாக்டர். ஜி. சிவராமன் கூறியது இங்கே..
பால் பொருட்கள்
பால், தயிர், வெண்ணெய், நெய், பனீர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்கள் உடல் குறையும் பயணத்தின் போது தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் கூறினார்.
இனிப்புகள்
எடையை குறைக்க விரும்பினார், தயார் நிலையில் உள்ள இனிப்பு வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கூறிய மருத்துவர் சிவராமன், உடல் எடை குறைந்த பிறகு, வெல்லம், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, பனைவெல்லம் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறினார். குறிப்பாக வெள்ளை சர்க்கரையை தவிர்க்க வேண்டும் என்றும், அவை விஷம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிழங்குகள்
வேகமாக உடலில் சர்க்கரையை அதிகரிக்கும் கிழங்குகளை, உடல் எடை குறைப்பின் போது எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று என்று மருத்துவர் கூறினார்.
இதையும் படிங்க: வேகமா தொப்பை குறைய.. சிம்பிள் டிப்ஸ்.!
பட்டை தீட்டப்பட்ட தானியம்
எடையை குறைப்பு பயணத்தின் போது, பச்சை அரிசி, மைதா மாவு போன்ற வெண்மை நிறத்தில் உள்ள தானிங்கள், அதாவது பட்டை தீட்டப்பட்ட தானியங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் கூறினார்.
பிராய்லர் சிக்கன்
பிராய்லர் சிக்கன் வேகவேகமாக எடையை அதிகரிக்கச் செய்யும். இது நேரடியாக எடை அதிகரிக்குப்பு வழிவகுக்கும் என்பதால், எடை இழப்பு பயணத்தின் போது, இதை ஒதுக்கி வைக்க வேண்டும்.
ஐஸ் வாட்டர்
நடு ராத்திரியில் ஐஸ் வாட்டர் குடிக்கும் பழக்கம் இருக்கிறதா.? அப்போ அதை உடனடியாக கை விடவும். பொதுவாக ஐஸ் வாட்டர் குடிப்பதே.. எடை அதிகரிக்க வழிவகுக்கும். ஆகையால் இந்த தவறை செய்யாதீர்கள். மேலும் குளிர்ந்த உணவுகளும் வேண்டாம்.
குறிப்பு
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும், டாக்டர். ஜி. சிவராமன் அவர்களால் கூறப்பட்டவை. இருப்பினும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உங்கள் நிபுணரிடம் ஆலோசிக்கவும்.
{இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram}
Image Source: Freepik